Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Ganesh Idol Vastu | அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் வெள்ளை விநாயகர்.. எந்த திசையில் வைக்க வேண்டும்...?

Nandhinipriya Ganeshan August 30, 2022 & 15:20 [IST]
Ganesh Idol Vastu | அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் வெள்ளை விநாயகர்.. எந்த திசையில் வைக்க வேண்டும்...?Representative Image.

வாஸ்து சாஸ்திரத்தின்படி, விநாயகர் என்றாலே அதிர்ஷ்டம், செழிப்பு, செல்வம், மற்றும் வெற்றியின் கடவுள் என்பர். அதனாலையே பலரும் வீடுகளில் விநாயகர் சிலை வாங்கி வைத்திருப்பார்கள். இருப்பினும் பலரும் செய்யும் தவறு என்னவென்றால், விநாயகர் சிலையை சரியான இடத்தில் வைப்பது கிடையாது. இதனால் அதற்கான பலன்கள் முழுமையாக கிடைக்காமலே போய்விடுகின்றன. 

வீட்டில் செல்வத்தையும்,செழிப்பையும் கொண்டு வர விநாயகர் சிலையை வைக்கும்போது அனைத்து வாஸ்து வழிகாட்டுதல்களையும் பின்பற்றுவது அவசியம். உதாரணமாக, இடதுபுறம் பார்த்தபடி விநாயகர் சிலை வாஸ்து விநாயகர் என்று அழைக்கப்படுகிறது. இது நமது வாஸ்து தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கிறது. வீட்டிற்கு வெளியே வைக்கப்படும் திருஷ்டி விநாயகர் வீட்டில் கெட்ட சக்திகளை அண்டவிடாமல் தடுக்கிறது. அந்தவகையில், எந்த விநாயகர் சிலையை வீட்டில் எப்படி வைத்தால் செல்வமும் செழிப்பும் அதிகரிக்கும் என்பதை பற்றி இப்பதிவில் பார்க்கலாம். 

திருஷ்டி விநாயகர் சிலை வைக்க பின்பற்ற வேண்டிய விஷயங்கள்:

உங்கள் வீட்டில் அல்லது அலுவலக இடத்தில் பல வழிகளில் விநாயகர் சிலையை வைத்துக் கொள்ளலாம். அதில் ஒன்று உங்கள் வீட்டின் நுழைவாயிலுக்கு நேர் எதிரே விநாயக மூர்த்தியை வைப்பது.

ஆனால், அந்த விநாயகர் சிலைகளை எப்போதும் ஜோடியாக தான் வைக்க வேண்டும். மேலும், அந்த சிலையின் பின்புறம் உள்ள மற்ற அறையில் வேறு எந்த படங்களையும் வைக்கக் கூடாது.

எப்போதும், இடது பக்க தந்தம் கொண்ட விநாயகர் சிலையை தான் வீட்டில் வைக்க வேண்டும். ஏனெனில், வலது பக்க தந்தம் கொண்ட விநாயகரை வீட்டில் வைத்திக்கும் போது அதிக அக்கறையும் கவனமும் தேவை. அதனால்தான், அந்த சிலைகள் கோவில்களில் மட்டுமே காணப்படுகின்றன. 

பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க வாஸ்து விநாயகரை எங்கு வைக்க வேண்டும்?

வெள்ளை விநாயகர்

வெள்ளை விநாயகர் அதிக செல்வம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றை ஈர்க்கிறார் என்று நம்பப்படுகிறது. வெள்ளை விநாயகர் கொண்ட ஒரு படத்தை ஒட்டுவது கூட பல அதிசயங்களைச் செய்யலாம். இருப்பினும், தெய்வத்தின் பின்புறம் வீட்டின் வெளிப்புறத்தை பார்த்தப்படி இருக்க வேண்டியது அவசியம்.

சிறந்த திசை

விநாயகர் சிலையை வீட்டின் கிழக்கு அல்லது மேற்கு திசையில் வைக்க வேண்டும். வீட்டின் வடகிழக்கு மூலையில் கூட விநாயகர் சிலை வைக்கலாம். வடகிழக்கு மூலை கிடைக்கவில்லை என்றால், பிரார்த்தனை செய்யும் போது வடக்கு அல்லது கிழக்கு நோக்கி ஒரு சிலையை வைத்து வழிபடலாம். 

தெற்கு 

விநாகர் சிலை ஒருபோதும் தெற்கு திசையில் மட்டும் வைக்கவே கூடாது. மேலும், சிலை பாத்ரூமிற்கு அருகில் அல்லது பாத்ரூம் இணைக்கப்பட்ட சுவர் அருகிலும் வைக்க கூடாது. எனவே, சிலை வைக்கும்போது அதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

பெட்ரூம்

படுக்கையறையில் ஒருபோதும் விநாயகர் சிலைகளை வைக்க கூடாது. ஒருவேளை நீங்கள் காலை எழுந்ததும் விநாயகர் முகத்தில் விழிக்க வேண்டும் என்று நினைத்தால், ஒரு விநாயகர் படத்தை வாங்கி வடகிழக்கு திசையில் வைத்துக் கொள்ளலாம். மேலும், வாஸ்து படி பாதங்கள் சிலையை பார்த்தப்படி இருக்க கூடாது.

சிலையின் வகைகள்

மா, அரச, வேப்ப மரங்களால் ஆன விநாயகர் சிலைகள் நல்ல அதிர்ஷ்டத்தையும் நேர்மறை ஆற்றலையும் ஈர்க்கும் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், துக்கத்தைப் போக்கவும் நல்ல அதிர்வுகளை ஈர்க்கவும் பசுவின் சாணத்தால் செய்யப்பட்ட சிலைகள் மிகவும் அதிர்ஷ்டமானவை என்று வாஸ்து வல்லுநர்கள் கருதுகின்றனர்.

மேலும், படிகச் சிலைகள் அனைத்து வாஸ்து தோஷங்களையும் நீக்கி, வாழ்க்கையை உடனடியாக மாற்றும் என நம்பப்படுகிறது. இருப்பினும், மஞ்சள் சிலைகள் மிகவும் மங்களகரமானவையாகக் கருதப்படுகின்றன.

வீட்டில் வைக்கும் சிலைக்கு முன்பாக வைக்கப்படும் சிறிதளவு அரிசி கூட ஒரு பெரிய பிரசாதமாக கருதப்படுகிறது. எனவே, உயரமான இடத்தில் சிலையை வைத்து ஒரு சிறிய கிண்ணத்தில் சிறிதளவு அரிசி வையுங்கள். 

இதையும் படிங்க:

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியம் செய்வது எப்படி?

விநாயகருக்கு பிடித்து மோத்திசூர் லட்டு செய்வது எப்படி?

விநாயகர் சதுர்த்தியன்று பிள்ளையாருக்கு படைக்க வேண்டிய பிரசாதங்கள்..

அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் வெள்ளை விநாயகர்..

விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை செய்வது எப்படி?

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்.. தேன் கொழுக்கட்டை செய்வது எப்படி?

ஓணம் ஸ்பெஷல் அத்தப்பூ கோலங்கள்..

ஓணம் சத்யா விருந்தில் இடம்பெறும் 27 வகையான உணவுகள்..

ஓணம் ஸ்பெஷல் அடை பிரதமன் இப்படி செஞ்சி பாருங்க..

மழைக்காலத்தில் வீட்டை பராமரிப்பது எப்படி?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்