Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மலைகளின் ராணியான ஊட்டிக்கு செல்வதற்கு இதுதான் சரியான நேரம்!!!

Nandhinipriya Ganeshan February 03, 2022 & 15:10 [IST]
மலைகளின் ராணியான ஊட்டிக்கு செல்வதற்கு இதுதான் சரியான நேரம்!!!Representative Image.

ஊட்டி (Ooty)

உதகமண்டலம் என்றும் அழைக்கப்படும் ஊட்டி 'மலைகளின் ராணி' என்றும் அழைக்கப்படுகிறது. இது நீலகிரியில் கடல் மட்டத்திலிருந்து 7440 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இயற்கை மற்றும் மலை ஆர்வலர்கள் அனைவருக்கும், இந்த அமைதியான மற்றும் அழகான மலைவாசஸ்தலத்திற்கு பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் வேறு எதிலும் இல்லாத ஈர்ப்பைக் கொண்டுள்ளது. பசுமையான பள்ளத்தாக்குகள், அலை அலையான மலைகள், அழகான ஏரிகள் மற்றும் பரந்த காட்சிகளுடன், தமிழ்நாட்டின் சிறந்த தேனிலவு இடங்களின் பட்டியலில் ஊட்டி முதலிடத்தில் உள்ளது.

 

 

இங்கு, வசந்த காலத்தில் பனிமூட்டத்தினால் அனைத்து மரம், செடி, கொடி, மற்றும் வீடு என அனைத்தையும் உறைந்து மூடுகிறது, இது ஒரு அழகான ஓவியத்தின் இயற்கைக்காட்சியைப் போல நகரத்தை உருவாக்குகிறது. ஊட்டியில் ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா சிகரம், ஊட்டி ஏரி, பைக்காரா ஏரி, தண்டர் வேர்ல்ட், மதுமலை தேசிய பூங்கா, தேயிலை அருங்காட்சியகம், மான் பூங்கா, அவலாஞ்சி ஏரி மற்றும் பல சுவாரஸ்யமான இடங்கள் உள்ளன.

 

 

ஊட்டிக்கு செல்ல சிறந்த நேரம்

நீங்கள் இயற்கை ஆர்வலர் என்றால் ஊட்டிக்கு எப்போது செல்வது என்று கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் பருவமழை கூட ஒரு கவர்ச்சியான தன்மையை பெறுகிறது. குறிப்பாக நீங்கள் உங்கள் குடும்பத்துடன் ஊட்டிக்கு சுற்றுலா அல்லது தேனிலவு பயணத்தைத் திட்டமிடும் போது ஊட்டிக்குச் செல்வதற்கான சிறந்த நேரத்தை அறிந்து கொள்வது அவசியம்.

உண்மையாகச் சொன்னால், தென்னிந்தியாவில் உள்ள இந்த மலைவாசஸ்தலம் ஆண்டு முழுவதும் மிதமான மற்றும் குளுமையான காலநிலையைக் கொண்டுள்ளது. கோடைக்காலத்தில் ஊட்டியில் வானிலை மிகவும் இனிமையானதாக இருக்கும் அதே சமயம் குளிர்காலம் குளிர்ச்சியாகவும், பருவமழைகள் வசீகரிக்கும். இருப்பினும் ஊட்டிக்கு வருகை தருவதற்கு ஏற்ற நேரம் அக்டோபர் முதல் ஜூன் வரை ஆகும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்