Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கையில பணம் இருந்தா சேராது…! ஃபிக்ஸ்டு டெபாசிட்ல போடுங்க… வட்டியுடன் சேர்த்து எடுக்கலாம்..!

Gowthami Subramani August 04, 2022 & 12:35 [IST]
கையில பணம் இருந்தா சேராது…! ஃபிக்ஸ்டு டெபாசிட்ல போடுங்க… வட்டியுடன் சேர்த்து எடுக்கலாம்..!Representative Image.

ஃபிக்ஸ்டு டெபாசிட் என்பது நிலையான வைப்பு என அழைக்கப்படுகிறது. அதாவது, முழுமையான பாதுகாப்புடன் ஒரு நிலையான வைப்புத் தொகையை நிலையான வட்டி விகிதத்தில் சேமிக்கும் ஒரு கருவியாகும். இது பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாகக் கருதப்படுகிறது. வட்டி விகிதங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்படுவதுடன், சிறப்பான வட்டி விகிதங்களையும் அளிக்கிறது. மேலும், சந்தை தொடர்பான பாதிப்புகள் இல்லாத, வருமான வரிகளுக்கான விலக்குகளையும் வழங்குகிறது. இந்தப் பதிவில் ஃபிக்ஸ்டு டெபாசிட் பற்றிய விவரங்களைப் பற்றி காண்போம்.

ஃபிக்ஸ்டு டெபாசிட்

நம் கையில் பணம் வைத்திருந்தாலோ, வங்கியில் நம் அக்கவுண்டில் செலுத்தியிருந்தாலோ என்ன பயன். நீங்கள் இப்போது சேமித்து வைக்கும் தொகையின் மதிப்பு பிற்காலத்தில் அதிகமாகலாம். அந்த சமயத்தில், உங்கள் கையில் வைத்திருக்கும் போதோ, வங்கி கணக்கில் வைத்திருக்கும் போதோ எந்தவித மாற்றங்களையும் காணப் போவதில்லை.

இதுவே, நீங்கள் ஃபிக்ஸ்டு டெபாசிட்-ல் போடும் போது உங்கள் தொகை மிகுந்த பாதுகாப்புடன் இருக்கும். நீங்கள் செலுத்தும் தொகைக்கான வட்டியும் உங்களுக்கும் கிடைக்கும்.

Fixed Deposit சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

வங்கி கணக்குகளில் சேமித்து வைக்கப்படுவதன் மூலமாகவோ, கையில் பணத்தை வைத்திருப்பதன் மூலமாகவோ நம்முடைய வருமானம் மாறுவதில்லை.

இந்த டெபாசிட்டில் போட்டு வைப்பதன் மூலம் வட்டியுடன் கூடிய தொகையைப் பெறலாம்.

Fixed Deposit-ல் சேமித்து வைக்கப்படும் தொகை பாதுகாப்பானதாக அமையும்.

சந்தை ஏற்ற இறக்கங்களால், இதில் பாதிப்பு எதுவும் ஏற்படாது.

வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் வழங்கப்படும் Fixed Deposit வட்டி விகிதங்களை இதில் அதிகமாக இருக்கும்.

மேலும், Fixed Deposit-ஐ எளிதாக புதுப்பிக்க முடியும். இதன் மூலம் நாம் கூடுதல் நன்மைகள் பெற முடியும்.

காலமுறை வட்டி செலுத்துதலின் மூலம், மாதாந்திர செலவுகளை நிர்ணயித்துக் கொள்ள முடியும்.

பெரும்பாலும், மூத்த குடிமக்கள் Fixed Deposit-ல் அதிக வட்டி விகிதங்களைப் பெறுவார்கள்.

அதிக வட்டி விகிதங்கள்

பெரும்பாலும், இந்தியாவில் Bajaj Finance அதிக அளவிலான FD வட்டி விகிதங்களை வழங்குகிறது. அதாவது ஆண்டுக்கு 7.75% வரையிலான வட்டி மற்றும் அதிக கடன் மதிப்பீடுகளை தரும் வகையில் உள்ளது.

இதில் தவணைக் காலத்திற்கு முதலீடு செய்யும் போது, ரூ.15,000 தொகையுடன் மட்டுமே கூடிய டெபாசிட்டைத் தொடங்கலாம்.

Bajaj Finance-ன் நிலையான வைப்புத் தொகையின் சிறப்பம்சங்கள்

நிலையான வைப்புத் தொகையின் சிறப்பம்சங்கள்

குறைந்தபட்ச தவணைக் காலம்

1 ஆண்டு

அதிகபட்ச தவணைக் காலம்

5 ஆண்டுகள்

FD வட்டி விகிதம்

ஆண்டுக்கு 7.75% வரை

நிலையான வைப்புத் தொகை

குறைந்தபட்ச தொகையாக ரூ.15,000

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

பணம் செலுத்துதல் முறை

நெட் பேங்கிங் மற்றும் UPI

 

இது போன்ற Fixed Deposit-ல் பணம் செலுத்தும் போது, நமக்கு வருமானம் அதிகமாகக் கிடைப்பதுடன், பாதுகாப்பாகவும் அமையக் கூடியதாக உள்ளது. எனவே, பணம் இருக்கும் சமயத்தில் இது போல முறையைப் பயன்படுத்தி வருங்காலத்திற்குச் சேமிப்பதுடன் மிகவும் பாதுகாப்புடன் வைத்திருக்கலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்