Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

KTM, ராயல் என்ஃபீல்டு-னு செப்டம்பர்ல இத்தன பைக் வரப்போகுதா? | New Bikes Launching in September 2023

Priyanka Hochumin Updated:
KTM, ராயல் என்ஃபீல்டு-னு செப்டம்பர்ல இத்தன பைக் வரப்போகுதா? | New Bikes Launching in September 2023Representative Image.

இந்தியாவை பொறுத்த வரையில் கார், பைக், ஸ்கூட்டர் மற்றும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு போகிறது. அதற்கு ஏற்றார் போல் பல புதிய வாகனங்களும் ஒவ்வொரு மாதமும் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 2023 மாதத்தில் ஹோண்டா எஸ்பி160, ஹீரோ கரிஸ்மா எக்ஸ்எம்ஆர், டிவிஎஸ் எக்ஸ் இ-ஸ்கூட்டர், புதிய ஓலா எஸ்1 வரிசை மற்றும் டுகாட்டி டயவல் வி4 உள்ளிட்ட வாகனங்கள் களமிறங்கி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதே போல், அடுத்து வரும் செப்டம்பர் மாதத்தில் பலரும் எதிர்பார்க்கப்பட்ட சில பைக் மாடல் வெளியாக உள்ளது. அது என்னென்ன, அவற்றின் விவரக்குறிப்புகள் உள்ளிட்டவற்றை பார்க்கலாம்.

2024 கேடிஎம் 390 டியூக்

இந்தியா மட்டும் அல்லாது வெளிநாடுகளிலும் பல ஆய்வுக்கு பின்னர் ஒரு வழியாக KTM 2024 390 டியூக்கைக் கைப்பற்றியுள்ளது. இதில் ஆல்-நியூ 399சிசி தம்பர் ஆனது 44.8எச்பி மற்றும் 39என்எம் ஆற்றலைக் கொண்டு வருகிறது. இந்த மாடலில் எலக்ட்ரானிக்ஸ் தொகுப்பைப் போலவே சேஸ் மற்றும் சைக்கிள் பாகங்களும் புத்தம் புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் லாஞ்ச் கன்ட்ரோல் ஆப்ஷனை கொண்டு வருவதால் இதற்கு டிமாண்ட் அதிகமாகவே உள்ளது.

ராயல் என்ஃபீல்டு புல்லட் 350

ராயல் என்ஃபீல்டு பிரியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் செப்டம்பர் 1, 2023 ஆம் தேதி ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பில் அறிமுகமாக உள்ளது. இந்த மாடல் புல்லட், கிளாசிக் 350-ஐ போலவே யூனிக் டச் ஸ்கிரீனுடன் கூடிய பாடிவொர்க் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட ஜே-சீரிஸ் எஞ்சினைப் பயன்படுத்துகிறது. மேலும் டூயல் சேனல் ஏபிஎஸ் பெறும் முதல் புல்லட் இதுவாக தான் இருக்கும்.

TVS அப்பாச்சி RR 310 அடிப்படையிலான நேக்கட் பைக்

இதுவரை, BMW உடனான பார்ட்னர்ஷிப்பில் TVS நிறுவனம் Apache RR 310 பைக்கை மட்டும் தான் உருவாக்கியுள்ளது. ஆனால் வரும் செப்டம்பர் 6, 2023 அன்று TVS ஆனது RR 310 இன் நேக்கட் ஸ்ட்ரீட்ஃபைட்டர் வெர்சனை அறிமுகம் செய்ய உள்ளது. இது வெறும் ரீபேட்ஜ் செய்யப்பட்ட BMW G 310 R ஆக இருக்காது என்றும் கூறப்படுகிறது.

Suzuki V-Strom 800DE

இந்த மாடல் EICMA 2022 இல் வெளியிடப்பட்டது மற்றும் GSX-8S நேக்கட் பைக்குடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட புதிய 776cc பேரலல்-ட்வின் இன்ஜின் தளத்தை அடிப்படையாகக் கொண்டு வருகிறது. V-Strom 650 XT மாடல் போல் இல்லாமல், V-Strom 800DE-ல் மாடர்ன் எலக்ட்ரானிக்ஸ் சூட் மற்றும் 21-இன்ச் முன் சக்கரம் உள்ளிட்ட அம்சங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்