Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How To Get More Flowers On Rose Plant In Tamil: இந்த டிப்ஸ மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ரோஜா செடி என்ன; ரோஜா தோட்டமே வெக்கலாம்… அதுவும் கொத்து கொத்தான ரோஸ் பூக்களோட..!! [பகுதி-1]

Nandhinipriya Ganeshan July 10, 2022 & 19:15 [IST]
How To Get More Flowers On Rose Plant In Tamil: இந்த டிப்ஸ மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ரோஜா செடி என்ன; ரோஜா தோட்டமே வெக்கலாம்… அதுவும் கொத்து கொத்தான ரோஸ் பூக்களோட..!! [பகுதி-1]Representative Image.

How To Get More Flowers On Rose Plant In Tamil: ரோஜா பூவை யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். கடையில் வாங்கும் போதே அதன் அழகை ரசிக்கும் நாம் வீட்டில் வளர்க்க விரும்பமாட்டோமா என்ன? பொதுவாக பூ செடிகளிலேயே ரோஜா செடியை தான் அதிகம் ஆசையோடு வளர்க்கிறார்கள். ரோஜா பூக்களில் சுமார் 700 வகைகளுக்கும் மேல், பல நூறு கண்ணைக் கவரும் வண்ணங்களில் காணப்படுகின்றன. மேலும், ரோஜா பூக்கள் வண்ணத்திற்காகவும், நறுமணத்திற்காகவும், அழகிற்காகவும் இப்படி பல்வேறு காரணங்களுக்காக பலரால் விரும்பி வளர்க்கப்படுகின்றன.

அப்படி வளர்க்கும் போது நாம் பல்வேறு தவறுகளை செய்கிறோம்.  இதனாலையே நர்சரி கார்டனில் இருந்து வாங்கிட்டு வந்த பத்து நாட்களிலேயே செடி இறந்துவிடுகின்றன. மற்றவை பூக்களே விடுவதில்லை. ஆனால், ரோஜா செடியை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற நுணுக்கங்களை தெரிந்துக் கொண்டால் ரோஜா செடி என்ன, ரோஜா தோட்டமே வைக்கலாம். இப்போது ரோஜா செடிகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு நாம் என்ன வேண்டும் என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

சரியான செடிகளை தேர்ந்தெடுப்பது:

நாம் அனைவரும் செய்யும் முதல் தவறே செடிகளை தேர்ந்தெடுத்து வாங்குவதில் தான். அதாவது, தொடர்ந்து ரோஜா செடியில் பூக்களை பெறுவதற்கு முதலில் நம்முடைய காலநிலைக்கு ஏற்ற செடிகளாக பார்த்து வாங்க வேண்டும்.

பன்னீர் ரோஸ், மினியேச்சர் ரோஜா, பட்டன் ரோஸ், நாட்டு ரோஜா போன்ற செடிகள் எல்லாம் எவ்வளவு வெயிலையும் தாங்கிக் கொண்டு வளரக் கூடியவை.

ரோஜா செடியை வாங்கும் போது பெரிய தொட்டியில், அதிக தண்டுகள், கிளைகள் மற்றும் புதிய துளிர்கள் அதிகம் இருக்கும் ரோஜா செடிகளாக பார்த்து வாங்க வேண்டும்.

அதேபோல், ரோஜா செடி இலைகளில் பூச்சி தாக்குதல், நோய் தாக்குதல் இருக்கிறதா என்பதை நன்கு ஆராய்ந்து வாங்க வேண்டும்.

செடி வளர்ப்பு:

ஒருவேளை நீங்க வாங்கி வந்த ரோஜா செடியில் பூக்கள் பூந்திருந்தால் அதனை பறித்து விட வேண்டும். அப்போதுதான் கிளைகள் வளரத் தொடங்கி அதிக ரோஜா மொட்டுக்கள் துளிர் விட தொடங்கும்.

பொதுவாக ரோஜா செடிகள் வளர்ப்பதற்கு செம்மண் கலவை சிறந்த தேர்வாக இருக்கும். அக்கலவையுடன் மண்புழு உரமும் சேர்த்தால், செடி கொத்து கொத்தாக பூக்களை பூக்கும்.

அதுமட்டுமல்லாமல், வெயில் காலத்தில் செடிக்கு குளிர்ச்சியை அளித்து எளிதில் வாடிப் போகாமல் பார்த்துக் கொள்ளும்.

கடையில் இருந்து வாங்கிட்டு வந்தவுடன் செடியை நடக்கூடாது. ஏனென்றால், காலநிலை மாறுபாட்டால் செடி இறக்க நேரிடலாம்.

வாங்கி வந்து, கிட்டத்தட்ட 4 நாட்கள் வீட்டின் நிழற்பாங்கான இடத்தில் வைத்திருந்து, அதற்கு பிறகு மண்ணில் நட செய்ய வேண்டும்.

எதில் வளர்க்கலாம்?

ரோஜா செடியை வளர்ப்பதற்கு உங்க வீட்டை சுற்றி இடம் இல்லை என்றால், மண் தொட்டி தான் சரியான இடம்.

மண் தொட்டியில் நட்டு வைப்பதன் மூலம் செடி அதிகப்பூக்களை அள்ளிக் கொடுக்கும்.

அந்த மண் தொட்டியில், நாம் தயாரித்த செம்மண், மண்புழு உரம் கலந்த கலவையை நிரப்பி, வேர்ப்பகுதியை முடிந்த வரை உள்ளே அழுத்தம் கொடுத்து நட வேண்டும்.

மண் தொட்டி இல்லையென்றால், பிளாஸ்டிக் தொட்டியில் கூட வளர்க்கலாம். ஆனால், கலர் அடித்து அதன் பின் செடியை நட்டு வைக்க வேண்டும்.

ரோஜா செடியை நட்டு வைக்க சிறந்த நேரம் மாலை வேளை. முடிந்த வரை சாயங்கால நேரத்தில் செடியை நடவு செய்யுங்கள்.

சரியான இடம்:

ரோஜா செடிகளுக்கு ஆறு மணி நேரமாவது வெயில் படும்படியான இடத்தில் வைத்தால் வேண்டும். அப்போது தான் பூக்கள் அதிகமாக பூக்கும்.

அதுவும் காலை மற்றும் மாலை வெயில் இருந்தாலே போதுமானது.

எனவே, அதிக வெயில் படும் இடத்தில் வைக்க கூடாது. அதுவே, மழைக்காலத்தில் உச்சி வெயிலில் வைத்தால் இன்னும் அதிக பூக்களை பூக்கும்.

தொடர்ந்து படிக்க இதை லிங்கை க்ளிக் செய்யவும்..

Tags:

Rose plant growing tips | How to get more roses in rose plant in tamil | Rose plant growing tips in tamil | Rose plant care in tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்