Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காஜல் பயன்படுத்தி கண்களை அழகாக மாற்றுவது எப்படி | how to use kajal

Vaishnavi Subramani Updated:
 காஜல் பயன்படுத்தி கண்களை அழகாக மாற்றுவது எப்படி | how to use kajalRepresentative Image.

பெண்கள் அவர்களது முகத்தை அழகுபடுத்துவதில் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள். அதிலும் கண்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தனியாகக் கவனம் செலுத்துகிறார்கள். கண்களை அழகுபடுத்துவதற்கு எனக் கடைகளில் விற்கும் பொருள்களை வாங்கி பயன்படுத்துவார்கள். அதுவும் ஜ லைனர் மற்றும் விங் லைனர் போன்று பல வகைகள் உள்ளது. காஜல் பயன்படுத்தி கண்களை அழகுபடுத்துவது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

 காஜல் பயன்படுத்தி கண்களை அழகாக மாற்றுவது எப்படி | how to use kajalRepresentative Image

கண்களை அழகுபடுத்துவது எப்படி

✤ பலரும் வேலைக்கு செல்லும் நேரத்தில் மேக்கப் செய்வதற்கு நேரம் ஒதுக்குவது என்பது  மிகவும் குறைவும். ஆனால் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என விருப்பம் இருக்கிறது. அதிலும் கண்களை அழகாகக் காட்டுவதில் மிகவும் விருப்பம் கொள்கிறார்கள். அதனால் இந்த பதிவில் கண்களை எளிதாக அழகுபடுத்துவதற்கு மூன்று அருமையான குறிப்புகள் பார்க்கலாம்.

 காஜல் பயன்படுத்தி கண்களை அழகாக மாற்றுவது எப்படி | how to use kajalRepresentative Image

குறிப்பு -1

✤ காஜல் பயன்படுத்தும் பலரும் கண்கள் சிறிதாக இருந்தால் இந்த காஜல் பயன்படுத்தினால் கண்கள் மிகவும் சிறிதாக மாறுமா என நினைப்பார்கள். இந்த குறிப்பின் மூலம் நீங்கள் கண்களுக்கு காஜல் தைரியமாகப் போடலாம். கண்கள் சிறிதாக மாறாது.

✤ முதலில் பிரெஷ் பயன்படுத்தி காஜல் போடக்கூடாது. அதற்குப் பதிலாக முதலில் ஜெல் ஜ லைனர் எடுத்து அதில் உள்ள பிரெஷ் பயன்படுத்தாமல் அதற்கு பின்புறத்தைப் பயன்படுத்தி காஜல் போட்டால் மிகவும் அழகாகவும் எந்த இடத்திலும் திட்டு திட்டாக இல்லாமல் அழகாக இருக்கும். அதில் வெள்ளை நிறத்தில் இருக்கும் காஜலும் பயன்படுத்து போதும் கண்கள் பார்ப்பதற்கு பெரியதாக இருக்கும். பிரெஷ் பயன்படுத்தினால் கண்களில் பட்டு கண் எரிச்சல் மற்றும் கண்ணீர் வரும். அதற்குப் பதிலாக இது பயன்படுத்தும் போதும் எந்த தொந்தரவுகளும் இருக்காது.

✤ கண்களில் உள்ள வெள்ளை மற்றும் கருப்பு நிற காஜல் போட்டால் பார்ப்பதற்கு மிக அழகாகவும் சிறிய கண்களாக இருந்தால் கூட அது மிகவும் சிறிதாக மாறாமல் பெரியதாகக் காட்டும்.

 காஜல் பயன்படுத்தி கண்களை அழகாக மாற்றுவது எப்படி | how to use kajalRepresentative Image

குறிப்பு-2

✤  காலை நேரத்தில் அதிகமாக வீட்டில் வேலை செய்துவிட்டு உடனே வேலை செல்லும் பெண்கள் மற்றும் விழாக்களுக்குச் செல்லும் பெண்கள் அனைவருக்கும் இந்த குறிப்பு உதவியாக இருக்கும்.

✤ நீங்கள் உங்கள் கண்களுக்கு விங் லைனர் போடவேண்டும் என ஆசை இருந்தாலும் அது இரண்டு கண்களுக்கும் ஒரே அளவில் மற்றும் கண்கள் பார்ப்பதற்கு அழகாகவும்  பயன்படுத்துவதற்கு கடினமாக இருக்கும். அதுவும் வீட்டில் உள்ள கண்ணாடி பார்த்துப் பயன்படுத்தினால் கோணல் மாணலாகவும் மற்றும் ஒருபக்கம் சிறியதாகவும், மறுபக்கம் பெரியதாகவும் இருக்கும்.

✤ கடைகளில் விற்கும் ஸ்டாம்ப்பை வாங்கி கண்களை மூடி ஒட்டிக் கொண்டு அதன் மேல் ஜ லைனர் பயன்படுத்தினால் பார்ப்பதற்கு அழகாகவும் மிகவும் எளிதாகவும் இருக்கும்.

 காஜல் பயன்படுத்தி கண்களை அழகாக மாற்றுவது எப்படி | how to use kajalRepresentative Image

குறிப்பு -3

✤ விழாக்கள் மற்றும் திருமண விழாக்கள் மட்டும் பெரும்பாலும்  கண்களுக்கு மேக்கப் என்றால் இதை முதலில் பயன்படுத்துவார்கள். இது கண்களை மிகவும் அழகாகவும் சின்ன கண்கள் என்றால் பெரிதாகவும் மற்றும் பெரிய கண்கள் என்றால் மிகவும் அழகாகவும் காட்டும். அது தான் இந்த செயற்கையான கண் இமைகள் (eye lashes).

✤ இதைக் கண்களின் அளவிற்கு ஏற்ற மாதிரி வெளிப்புறத்தில் வெட்ட வேண்டும். ஜ லேஷஸை ஓட்டுவதற்கு எனத் தனியாகப் பசைகள் விற்கும் அதை வாங்கி ஜ லேஷில் தடவி கண்களை முழுவதுமாக மூடாமல் ஒட்ட வேண்டும்.

✤ சில நிமிடங்கள் அது நன்றாக ஒட்டும் வரை கண்களை அசைக்காமல் அப்படியே வைக்க வேண்டும். சரியாக வைத்தால் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். 

✤ இந்த குறிப்பை வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால் பயன்படுத்த வேண்டாம். அவசரமாக மேக்கப் போடும் போது இது சரியாக ஒட்ட முடியாமல் போவதற்கு வாய்ப்புள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்