Fri ,Apr 26, 2024

சென்செக்ஸ் 74,158.16
-181.28sensex(-0.24%)
நிஃப்டி22,523.75
-46.60sensex(-0.21%)
USD
81.57
Exclusive

குழந்தைகளின் IQ-ஐ எவ்வாறு பாதுகாக்கலாம்? | How to Protect Childrens Intelligence Level

Gowthami Subramani Updated:
குழந்தைகளின் IQ-ஐ எவ்வாறு பாதுகாக்கலாம்? | How to Protect Childrens Intelligence LevelRepresentative Image.

சிறிய குழந்தைகள் என்று கூறப்பட்டாலும், அவர்களுக்கு இயற்கையாகவே, நுண்ணறிவுத் திறன் அதிகமாக இருக்கும். ஆனால், அந்த காலகட்டத்தில் அவர்களின் சில நடவடிக்கைகளிலிருந்தே நுண்ணறிவுத் திறன் மேலும் வளர்வதும், அவற்றிலிருந்து, குறைவதும் அமையும். அந்த வகையில், குழந்தைகளின் புத்திசாலித் தனத்தை வளர்க்கவும், அவர்கள் தவறான தகவல்களைப் பெறுவதிலிருந்து விலக்கி வைக்கவும் செய்ய வேண்டிய சில குறிப்புகளை இதில் காண்போம்.

குழந்தைகளின் IQ-ஐ எவ்வாறு பாதுகாக்கலாம்? | How to Protect Childrens Intelligence LevelRepresentative Image

நுண்ணறிவுத் திறன்

இந்த நவீன உலகத்தில், குழந்தைகள் சிறுவயது முதலே பல அற்புத சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். குழந்தைகளுக்கு இயற்கையாகவே நுண்ணறிவுத் திறன் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை சரியான முறையில் பயன்படுத்தினால், அவர்களின் திறன் பெருகும். அதே சமயம், அவர்கள் பெறக்கூடிய சில தவறான தகவல்களிலிருந்தும் விலக்கி வைப்பது அவசியம். இதனால், அவர்கள் IQ திறன் பாதிப்படைவதைக் குறைக்க முடியும். இதற்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய சிலவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.

குழந்தைகளின் IQ-ஐ எவ்வாறு பாதுகாக்கலாம்? | How to Protect Childrens Intelligence LevelRepresentative Image

குழந்தைகளுடன் உரையாடல்

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் உரையாடுவது என்பது தற்கால சமூகத்தில் குறைந்தவையாகவே உள்ளது. குழந்தைகள் அவர்களின் எண்ணங்களை யாரிடமும் சொல்ல முடியாமல் தவிர்ப்பது, அவர்களது மன அழுத்தத்திற்குக் காரணமாகிறது. குறிப்பாக, பெற்றோர்கள் அவர்களது வேலையில் ஈடுபாட்டுடன் இருப்பதற்கு குழந்தைகளுக்கு செல்போன்களைக் கொடுத்து விடுவர். இது அவர்களுக்கு அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் ஏற்படும். சமூக ஊடகங்களை விட, பெற்றோரையே குழந்தைகள் அதிகம் நம்பியுள்ளனர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

குழந்தைகளின் IQ-ஐ எவ்வாறு பாதுகாக்கலாம்? | How to Protect Childrens Intelligence LevelRepresentative Image

பங்கேற்பு

டிஜிட்டல் யுகமானது, நல்லவை மற்றும் தீயவை இரண்டையும் தருபவையாகவே அமையும். எனவே, குழந்தைகளுக்கு சிறு வயது முதலே, நேர்மையாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருப்பதற்கான வழிமுறைகளைக் கற்றுத் தர வேண்டும். அதன் வழியிலேயே டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்தும் முறையும் அமையும். விழிப்புடனும், சரியான பாதையை வழிவகுக்கவும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு உதவ வேண்டும்.

குழந்தைகளின் IQ-ஐ எவ்வாறு பாதுகாக்கலாம்? | How to Protect Childrens Intelligence LevelRepresentative Image

கேள்வி எழுப்புதல்

குழந்தைகளிடம் நாம் பேசும் போது, அதிகப்படியான கேள்விகள் நம்மில் எழும். அந்த வகையில் குழந்தைகளே நமக்குக் கற்றுக் கொடுப்பதாக அமையும். குழந்தைகளுக்கு இருக்கும் நுண்ணறிவுத் திறனை வளர்ப்பதற்கான ஊடகத்தை ஆராய்ந்து, அவர்களின் பார்க்கும் மற்றும் கேள்வி கேட்பதை ஆராய வேண்டும். இது அவர்களின் நுண்ணறிவுத் திறனை ஆராய்வதற்கும் அமையும்.

குழந்தைகளின் IQ-ஐ எவ்வாறு பாதுகாக்கலாம்? | How to Protect Childrens Intelligence LevelRepresentative Image

கண்காணிப்பு

குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டுவிடாமல், அவர்கள் செய்வதை நாள்தோறும் கண்காணிப்பதும் அவசியம் ஆகும். குறிப்பாக, போலிச் செய்திகள் வழங்குவதைத் தவிர்த்து, சரியான தகவல்களையும், தேவையானவற்றைத் தருவதையும் மட்டுமே உறுதி செய்து கொள்ள வேண்டும். அதே போல, குழந்தைகளைக் கண்டிப்பது என்பது அவர்கள் வழியிலேயே சென்று மாற்றக் கூடியதாக இருக்க வேண்டும்.

குழந்தைகளின் IQ-ஐ எவ்வாறு பாதுகாக்கலாம்? | How to Protect Childrens Intelligence LevelRepresentative Image

பகுப்பாய்வு தன்மை

பகுப்பாய்வு என்பதும் ஒருவரின் நுண்ணறிவுத் திறனை மேம்படுத்துவதற்கான காரணியாக அமையும். இது நல்ல புரிந்துணர்வு மற்றும் கருத்துக்களை எளிமையாகப் புரிந்து கொள்வதற்கான வரைமுறைகளைக் கொண்டிருக்கும். இந்த தன்மையானது, குழந்தைகளின் சிறுவயது முதலே இருப்பது அவர்களின் வாழ்வில் பல்வேறு வகைகளில் பயன்பாடாக இருக்கும். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பகுப்பாய்வுத் தன்மையை வளர்க்க வேண்டும்.

குழந்தைகளின் IQ-ஐ எவ்வாறு பாதுகாக்கலாம்? | How to Protect Childrens Intelligence LevelRepresentative Image

திறன் மேம்பட ஊக்குவிப்பது

குழந்தைகளுக்குப் பல்வேறு வகையான தகவல்கள் கிடைப்பது உறுதி செய்ய வேண்டும். அதே சமயம், சரியான தகவல்களைப் பெறுவதும் முக்கியமான ஒன்று. குழந்தைகளுக்கு செல்போன்களில் அவர்களின் நுண்ணறிவுத் திறனை மேம்படுத்துவதற்கான தகவல்களைப் பெறுமாறு செய்ய வேண்டும். அதன் படி, பள்ளிகள், நூலகங்கள், புத்தகங்கள் போன்றவையும் இவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

இது போன்ற செயல்களின் மூலம், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை வளர்க்கவும், மேம்படுத்தவும் முடியும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்