Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வீட்டில் உள்ள மின் விசிறியைச் சுத்தம் செய்ய 4 டிப்ஸ் !!!

Vaishnavi Subramani Updated:
வீட்டில் உள்ள மின் விசிறியைச் சுத்தம் செய்ய 4 டிப்ஸ் !!!Representative Image.

பலரது வீட்டில் தினமும் வீட்டைச் சுத்தம் செய்ய மாட்டார்கள். சிலர் மூன்று மாதத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்வார்கள் மற்றும் சிலர் பண்டிகை, வீட்டு விழாக்கள் என நடந்தால் மட்டும் வீடு சுத்தம் செய்வார்கள். அப்படி சுத்தம் செய்யும் போது இந்த ஃபேன்னை சுத்த செய்வது என்பது கடினமாக இருக்கும். முதலில் இந்த ஃபேன்னை சுத்தம் செய்யாமல் கடைசியாகத் தான் சுத்தம் செய்வார்கள். இதை அவ்வளவு எளிதில் சுத்தம் செய்ய முடியாது. அது மிகவும் கடினமாக இருக்கும். வீட்டில் சமையல் அறையில் அல்லது சமையல் அறையின் அருகில் மின் விசிறி இருந்தால் அதில் எண்ணெய்ப் பசை மிகவும் அதிகமாகத் தான் இருக்கும். அதை எளிதில் வராது. இந்த பதிவில் வீட்டில் உள்ள மின் விசிறியைச் சுத்தம் செய்வது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

வீட்டில் உள்ள மின் விசிறியைச் சுத்தம் செய்ய 4 டிப்ஸ் !!!Representative Image

வீட்டில் உள்ள மின்விசிறியைச் சுத்தம் செய்வதற்கு சில வழிகள்

✤ எந்த வழியில் மின் விசிறியைத் துடைக்க வேண்டும் என்றாலும் முதலில் முகத்திற்கு முக கவசம் அணிய வேண்டும். அதற்குப் பின், மின் விசிறிக்கு வரும் மின்  இணைப்பை அணைக்க வேண்டும். இதனால் தண்ணீர் வைத்துத் துடைத்தால் கூட நமக்கு எந்தவிதசேதமும் ஏற்படாது.

✤ நீங்கள் பயன்படுத்திய சாக்ஸ் (SOCKS) பழைய சாக்ஸ்  இருந்தால்  எடுத்துக் கொண்டு, தண்ணீரில் நனைத்து சாக்ஸை ஒரு முனை மற்றொரு முனைகளை கைகளில் பிடித்துக் கொண்டு இரண்டு பக்கம் வைத்து இறக்கைகளை நன்றாகத் துடைக்கலாம்.

✤ இதனால் விசிறியில் உள்ள அழுக்குகள் எளிதில் மற்றும் முழுவதுமாக போகும். அந்த தண்ணீரை இரண்டு முறை பயன்படுத்திய பிறகு, புதிய தண்ணீர் மாற்றித் துடைக்க வேண்டும்.

வீட்டில் உள்ள மின் விசிறியைச் சுத்தம் செய்ய 4 டிப்ஸ் !!!Representative Image

✤ நீங்கள் கடைகளில் விற்கும் பிரஷ் வாங்கி பயன்படுத்த வேண்டும் என நினைத்தால் நீங்கள் காப் வெப் பிரஷ் (Cobwen Brush)மற்றும் வேக்யூம் க்ளீனர் (Vacuum cleaner)வாங்கி பயன்படுத்தலாம்.

✤ காப் வெப் பிரஷ் (Cobwen Brush) அமைப்பானது ஒரு சிலந்தி வளைபோல் இருப்பதால் அதில் அழுக்குகள் எளிதில் வரும். அந்த பிரஷ் நீங்கள் மின் விசிறியைச் சுத்த செய்வதற்குப் பயன்படுத்தும் போது முக கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். இந்த பிரஷ்ஷில் விசிறியைத் துடைத்தால் அதில் உள்ள அழுக்குகள் நேராக நம்மீது தான் விழும் என்பதால் முக கவசம் முக்கியம். இந்த பிரஷ் பயன்படுத்தினால் எளிதில் சுத்தம் செய்ய முடியும்.

✤ இந்த பிரஷ் பயன்படுத்தினால் எண்ணெய்ப் பசை உள்ள அழுக்குகள் கூட நன்றாக வைத்துத் தேய்த்தால் எளிதில் வரும்.

வீட்டில் உள்ள மின் விசிறியைச் சுத்தம் செய்ய 4 டிப்ஸ் !!!Representative Image

✤ வேக்யூம் க்ளினர் (Vacuum cleaner) என்பது ஒரு சிறிய இடத்தில் உள்ள அதிகப்படியான அழுக்குகள் கூட எளிதில் சுத்தம் செய்ய உதவும். இதில் சுத்தம் செய்யும் போதும் முகத்தில் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும். இறக்கைகளில் உள்ள அழுக்குகள் எளிதில் சுத்தம் செய்ய முடியும்.

✤ இறக்கைகளில் உள்ள எண்ணெய்ப் பசையை அழுக்குகள் கூட வரும். வேக்யூம் க்ளினர் பயன்படுத்திய பிறகு, அழுக்குகள் காணாமல் போகும். ஆனால் எண்ணெய்ப் பசை அழுக்குகள் எளிதில் சுத்தம் ஆகாது. அதனால் அதை ஒரு காட்டன் துணி அல்லது மற்ற பழைய துணிகள் இருந்தால் அதை எடுத்து சோப்பு தண்ணீர் அல்லது வாஷிங் சோடா, வேறு சில பவுடர்கள் சுத்தம் செய்வதற்கு எனக் கடைகளில் விற்கும் அதை வாங்கி பயன்படுத்தலாம்.

✤ சோப்பு தண்ணீரில் துணியை நனைத்து மீதம் உள்ள அழுக்குகளைத் துடைத்தால் வரும். தண்ணீரை ஒன்று அல்லது இரண்டு முறை துடைத்த பிறகு, வேறு தண்ணீர் மாற்றித் துடைக்க வேண்டும். எண்ணெய்ப் பசை என்பதால் அதில் அழுக்குகள் அதிகமாக இருப்பதால் அதைத் துடைத்தால் அதிகமாக அழுக்குகள் சேரும் அதனால் தண்ணீர் மாற்ற வேண்டும்.

வீட்டில் உள்ள மின் விசிறியைச் சுத்தம் செய்ய 4 டிப்ஸ் !!!Representative Image

✤ வீட்டில் பழைய தலையணை உறைகள் இருந்தால் அதைக் கூட பயன்படுத்தலாம். தலையணையை எடுத்து அதன் உள்ளே இறக்கைகளில் இருப்பது போல்  மின்விசிறியின் மீது போட வேண்டும்.

✤ அதன் பின், மெதுவாக அந்த தலையணை உறையை எடுத்தால் இறக்கையில் உள்ள தூசிகள் தலையணை உறையில் வந்து விடும். இது போன்ற பல வழிகள் மூலம் எளிதில் மின் விசிறியைச் சுத்தம் செய்யலாம்.

✤ அழுக்குகள் குறைவாக இருந்தால் இந்த முறையைப் பயன்படுத்தலாம். அதிகமாக இருந்தால் இதில் பாதி அழுக்குகள் மற்றும் தூசிகள் தான் வரும் மீதம் விசிறியில் உள்ள இறக்கைகளில் ஒட்டிவிடும். அதனால் இந்த முறையை பயன்படுத்தக்கூடாது. சுத்தம் செய்து சில நாட்கள் ஆன பிறகு, ஏற்பட்ட அழுக்குகள் மற்றும் சின்ன சின்ன தூசிகள் இருந்தால் மட்டும் இந்த முறை பயன்படுத்தலாம்.

✤ இது போன்று பல வழிகள் மூலம் எளிதில் வீட்டில் உள்ள மின்விசிறியைச் சுத்தம் செய்யலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்