Tue ,Jun 25, 2024

சென்செக்ஸ் 77,341.08
131.18sensex(0.17%)
நிஃப்டி23,537.85
36.75sensex(0.16%)
USD
81.57

உணவு & உடல் நலம்

எளிமையான முறையில் வயிற்றை சுத்தம் செய்வது எப்படி? | Vayiru Sutham Seivathu Eppadi

Priyanka Hochumin October 17, 2023

மருத்துவ குணம் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ளாமல், பாஸ்ட் ஃபுட் உணவுகளை தற்போது மக்கள் அதிகம் எடுத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். இதனின் விளைவு சிறு வயதில் இருக்கும் குழந்தைகளுக்கு கூட அஜீரணம், நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இதனை சரி செய்ய உடனே மருத்துவரை நாடி மருந்து எடுத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு வயிற்றின் செயல்பாடு ஆரோக்கியமாக இருந்தாலே போதுமானது. அதற்கு உதவும் வகையில், சில பானங்களை காலையில் எடுத்துக்கொண்டால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

ஓணம் ஸ்பெஷல்.. சுவையான மலபார் அவியல் செய்வது எப்படி? | Malabar Avial Recipe in Tamil

Nandhinipriya Ganeshan August 21, 2023

தேவையான பொருட்கள்: வாழைக்காய் - 1/2 கப் கத்தரிக்காய் - 2 பீன்ஸ் - 1/2 கப் சிகப்பு பூசணி - 1/2 கப் வெள்ளை பூசணி - 2 கப் துருவிய தேங்காய் - 1 கப் முருங்கைக்காய் - 1 கேரட் - 1/2 கப் அவரைக்காய் - 1/2 கப் சேனை கிழங்கு - 1/2 கப் கெட்டி தயிர் - 1 கப் சீரகம் - 1 ஸ்பூன் சின்ன வெங்காயம் - 5 பச்சை மிளகாய் - 4 தேங்காய் எண்ணெய் - 1/4 கப் மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு கருவேப்பிலை - சிறிதளவு மலபார் அவியல் செய்முறை: முதலில் எல்லா காய்கறிகளையும் படத்தில் இருப்பதுபோன்று சன்னமாக அரிந்து கொள்ளவும். வாழைக்காய் மற்றும் கத்தரிகாய் இரண்டையும் அதேபோல் நீளவாக்கில் அரிந்து தண்ணீரில் போட்டுக்கொள்ளவும். இப்போது, அடிகனமான வாணலி அல்லது நான்ஸ்டிக் கடாயை அடிப்பில் வைத்து சூடானதும் அதில் அரிந்து வைத்துள்ள எல்லா காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளவும். பின்னர், அதில் மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். வெள்ளை பூசணி நிறைய சேர்ப்பதால் அதிலுள்ள தண்ணீரே வேகவைக்க போதுமானது. மிதமான தீயில் மூடி வைத்து காய்கறிகளை வேக விடவும். அவ்வப்போது காய்களை குலுக்கி விட்டு வேகவிடவும். பின்னர், புளிக்காத கெட்டித் தயிர் ஒரு கப் எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு ஸ்பூன் சீரகம், 4 பச்சைமிளகாய், 5 சின்ன வெங்காயம், துருவிய தேங்காய் 1 கப் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு கொஞ்சம் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். 10 நிமிடம் கழித்து காய் வெந்து விட்டதா என்று பார்க்க சேனை கிழங்கு, முருங்கைக்காய் இரண்டையும் நசுக்கி பார்க்கலாம் காய்கள் வெந்து விட்டால் கடைந்து வைத்த தயிரை சேர்த்து கலந்துவிட்டு 2 நிமிடம் திறந்துவிட்டு வேக விடவும். காய்களில் தயிரை கலக்கும்போது காய்கள் குழையாமல் மிதமாக கலந்து விடவும். 2 நிமிடங்கள் கழித்து அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து பொறுமையாக கலந்துவிடவும். இரண்டு நிமிடம் வரை வேகவைத்து, பிறகு கறிவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய் 1/4 கப் சேர்த்து கவனமாக கலந்து மூடி வைத்து விடவும். சுவையான மலபார் அவியல் தயார்!

ஓணம் சத்யா விருந்தில் இடம்பெறும் 27 வகையான உணவுகள்.. | Onam Sadhya Items List in Tamil

Nandhinipriya Ganeshan August 21, 2023

கேரளத்து மன்னர் மகாபலி சக்ரவர்த்தி மக்களை காண வரும் நாளே ஓணம் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கப்படும் கேரள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் தொடர்ந்து 10 நாட்கள் கொண்டாடப்படும். அந்த பத்து நாட்களில் கடைசி நாளான திருவோணத்தன்று, மகாபலி மன்னரை வரவேற்கும் விதமாக வீட்டு வாசலி அத்தப்பூ கோலமிட்டும், கேரள பாரம்பரிய புத்தாடை அணிந்தும், இனிப்புகள் பரிமாறியும் மகிழ்ச்சியோடு கொண்டாடுவார்கள். அந்தவகையில், இவ்வாண்டு திருவோணம் பண்டிகை ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது. இதற்காக அனைத்து கேரள மக்களும் தயாராகி வருகின்றனர்.  திருவோணம் தினத்தன்று, கேரள மக்களால் உறவினர்களுக்கு அன்போடு பரிமாறப்படுகிறது ஓணம் சத்ய விருந்து. தலைவாழை இலையில் தரையில் அமர்ந்து கேரளத்தின் பாரம்பரிய உணவு வகைகள் பரிமாறப்படும். இவ்வாறு உண்பதன் மூலம் ஆரோக்கிய மேம்படுவதாகவும் ஐதீகம். கேரள உணவுகளை பொறுத்தவரை ஆரோக்கியத்துக்குத்தான் முதலிடம். ஏனென்றால், அவை முழுவதும் தேங்காய் எண்ணெய், தேங்காய் பால், நெய் உள்ளிட்ட பொருட்களை மட்டுமே பயன்படுத்தி தயாரிப்பார்கள். அந்தவகையில், கேரள சத்யா விருந்தில் இடம்பெறும் 27 வகையான உணவுகளை பற்றி பார்க்கலாம்.  அப்பளம் சாதாரணமாக கடைகளில் வாங்கி செய்யப்படும் அப்பளம் இல்லாமல், அரிசி மாவில் இருந்து தயார் செய்யப்படும் அப்பளம் தான் இடம் பெறும். அப்பேரி அப்பேரியா? அப்படினா என்ன என்று தானே உங்க கேள்வி. அது வேறு எதுவும் அல்ல. இனிப்பு வாழைக்காய் சிப்ஸை தான் கேரளாவில் அப்பேரி என்று அழைப்பார்கள். வாழைக்காய் சிப்ஸ் என்றாலே கேரளா தானே நம் அனைவருக்கும் நினைவுக்கும் வரும். இதுவும் அந்த விருந்தில் ஒரு உணவுப்பொருளாக வைக்கப்படும். பருப்பு கறி பருப்பு கறியா என்று யோசிக்காதீங்க. பருப்பு குழம்பை தான் ஆனால் கேரளத்து ஸ்டைலில் இருக்கும். பருப்பு, தேங்காய், மஞ்சள் மற்றும் நெய் கொண்டு தயாரிக்கப்படுகிறது.  வாழைக்காய் பொறியல் பச்சை வாழைக்காயை கொண்டு தயாரிக்கப்படும் இந்த வாழைக்காய் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தி செய்யப்படுகிறது. மலபார் அவியல் நமது தென்னிந்திய உணவில் அவியல் முக்கிய பங்கு வகிக்கிறது. அது இல்லாமல் எந்த திருமணமோ அல்லது திருவிழா மெனுவோ முழுமையடையாது. முழுக்க முழுக்க காய்கறிகளை கொண்டு செய்யப்படும் இந்த அவியலுக்கு ஓணம் சத்யா விருந்தில் தனி இடமுண்டு.  மாம்பழ பச்சடி பழுத்த மாம்பழம், தேங்காய், தயிர் மற்றும் மசாலாப் பொருட்களால் செய்யப்படும் ஒரு சுவையான கேரள குழம்பு.  பீன்ஸ் பொரியல் ஆரோக்கியமான பச்சை பீன்ஸ் காயை கொண்டு தயாரிக்கப்படும் பொரியல். ஆனால், தேங்காய் துருவல் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். கேரட் பொரியல் ஃபிரஸான கேரட் காய், தேங்காய் துருவல், மற்றும் சில மசாலாப் பொருட்களுடன் செய்யப்படுகிறது.  முட்டைக்கோஸ் பொரியல் வெறும் 15 நிமிடத்தில் செய்யப்படும் கேரள ஓணம் சத்யா சைட் டிஷ்களில் ஒன்றாகும். முட்டைக்கோஸை பொடிப்பொடியாக துருவி, தேங்காய் துருவலை கொண்டு செய்யப்படும் டேஸ்ட்டான ஒரு பொரியல். காலன் இந்த ரெசிபி கேரளாவின் பாரம்பரிய உணவு. இந்த ருசியான உணவு முக்கியமாக கிழங்கு, பச்சை வாழைப்பழம், தேங்காய் மற்றும் தயிர் ஆகியவற்றால் செய்யப்படுகிறது. பீட்ரூட் பொரியல் பீட்ரூட் பொரியல் எப்போதும் செய்யப்படுவதான். ஆனால், ஓணம் சத்யாவில் இடம் இந்த பீட்ரூட் பொரியலில் முள்ளங்கியும் சேர்த்து சமைக்கப்படும். தட்டைப்பயிர் மசாலா சேனக்கிழங்கு, தேங்காய் எண்ணெய், தட்டைப்பயிரை கொண்டு செய்யப்படும் சூப்பரான, ஆரோக்கியமான ஒரு டிஷ் இது. வெண்டக்காய் கிச்சடி தேங்காய் எண்ணெயில் மிருதுவாக வதக்கி தயாரிக்கப்படும் சூப்பரான டிஷ்.  ரசம் ரசம் சைவமோ அல்லது அசைவமோ இரண்டிலும் இடம்பெறும் ஒரு டிஷ். அதிகளவிலான உணவு சாப்பிடும்போது ஜீரணத்திற்காக உணவில் சேர்க்கப்படும் ஒரு டிஷ். ஆனால், கேரள ஸ்டைலில் இருக்கும். வாழைப்பழ சிப்ஸ் நேந்திரம் வாழைப்பழத்தை கொண்டு செய்யப்படும் சுவையான சிப்ஸ். இதுவும் சத்யா விருந்தில் இடம்பெறும் ஒரு உணவுப்பொருளாகும். அடை பிரதமன் பச்சரி, வெல்லம், தேங்காயை பயன்படுத்தி தயாரிக்கப்படும் சுவையான பாயசம். எத்தனையோ பாயச வகைகள் இருக்கலாம், அதிலும் மிகவும் முதன்மையானது.  புளி, இஞ்சி ஜாம் இஞ்சி, புளி, மசாலாப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பிரபலமான கேரளா ரெசிபி, கெட்டியான ஜாம் போன்ற சமைக்கப்படுகிறது. அரிசி பால் பாயசம் அரிசியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் சுவையான கேரள ஸ்டைல் ஸ்வீட் இது. ஓணம் சத்யாவில் இடம்பெறும் முக்கியமான ஒரு ஸ்வீட் ரெசிபி. பீட்ரூட் பச்சடி பீட்ரூட், தேங்காய், தயிர் மற்றும் மசாலாப் பொருட்களால் செய்யப்பட்ட கலர்ஃபுல்லான மற்றும் கிரீம் பீட்ரூட் பச்சடி. மாங்காய் ஊறுகாய் சர்க்கரை, தயிர், மற்றும் மாம்பழத்தை கொண்டு செய்யப்படும் இனிப்பு மற்றும் காரமான சுவையான ஊறுகாய் இது. எந்த ஒரு விருந்தும் ஊறுகாய் இல்லாமல் முழுமையடையாது. மோர் மோர், காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை கொண்டு செய்யப்படும் ருசியான ஆரோக்கியமான மோர்.  சாம்பார் எல்லா விருந்துகளிலும் இடம்பெறும் மிகவும் முக்கியமான ஒரு ரெசிபி இந்த சாம்பார். பருப்பு மற்றும் பலவிதமான காய்கறிகளை கொண்டு செய்யப்படும் சுவையான சாம்பார். அன்னாசி பச்சடி அன்னாசி, தேங்காய், மசாலாப் பொருட்களால் செய்யப்படும் இனிப்பு அன்னாசி பச்சடி. இத்துடன் நெய், உப்பு, சாப்பாடு மற்றும் வாழைப்பழம் போன்றவையும் அடங்கும். 

அரிசி கழுவிய தண்ணீரில் இத்தனை நன்மை இருக்கா? இது தெரியாம போச்சே.. | Rice Water Benefits in Tamil

Nandhinipriya Ganeshan August 11, 2023

நாம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களில் ஒன்று தான் இந்த அரிசி. அரிசியை சமைத்து சாப்பிடுவதால் நமது பசியை போக்குவதோடு, உடலுக்கும் ஏராளமான நன்மைகளை தருகிறது. ஆனால், இந்த அரிசியை ஊறவைத்து கழுவிய தண்ணீரிலும் நன்மைகள் இருப்பது நம்மில் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் தான். அட ஆமாங்க! தினமும் இந்த அரிசி கழுவிய தண்ணீரை குடித்து வருவதன் மூலம் செலவே இல்லாமல் நமது உடலில் இருக்கும் பல பிரச்சனைகளை எளிதில் விரட்டியடிக்கலாம். அவை என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.  தினமும் அரிசி தண்ணீர் குடிப்பதன் பயன்கள்: ➦ அரிசி தண்ணீரை தினமும் குடித்து வருவதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு மட்டுமல்லாமல், நமது சருமம் மற்றும் முடிக்கும் ஏராளமான நன்மைகள் உள்ளன. காரணம், இந்த தண்ணீரில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், தாதுக்கள், வைட்டமின் பி, சி மற்றும் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. ➦ அரிசி தண்ணீர் வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு அருமருந்து என்றே சொல்லலாம். எனவே, வெள்ளைப்படுதல் பிரச்சனையால் அவதிபடும் பெண்கள் தினமும் இந்த தண்ணீரில் குடித்து வர விரைவில் பிரச்சனை சரியாகும்.  ➦ இதன் குளிர்ச்சி தன்மை சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. உடலில் இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது. கர்ப்பப்பைக்கும் நல்லது கூட. ➦ இந்த தண்ணீரில் இருக்கும் இனோசிட்டால் எனப்படும் சேர்மமம், உடலில் செல் வளர்ச்சிக்கு உதவுகிறது. இதனால் பல்வேறு விதமான சரும பிரச்சனைகளை விரட்டியடிக்கும். அரிசி தண்ணீர் எப்படி குடிக்க வேண்டும்? ➦ அரிசி தண்ணீருக்கு, வெள்ளை அரிசி, கைக்குத்தல் அரிசி, சிகப்பு அரிசி போன்ற எந்த அரிசியை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். பாலிஷ் செய்யப்படாத அரிசியாக இருப்பது நல்லது. மேலும், வேகவைக்கப்படாத, உமி அற்ற அரிசியாகத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.  ➦ முதலில் 1 கப் அரிசியை எடுத்து ஒருமுறை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர், அந்த அரிசியுடன் 4 முதல் 5 டம்பளர் தண்ணீரை ஊற்றி 5 முதல் 6 மணிநேரம் ஊறவிடவும். ➦ 6 மணிநேரத்திற்கு பிறகு அந்த தண்ணீரில் இருக்கும் அரிசியை கைகளால் சிறிது பிசைந்து விடவும். அப்போது தண்ணீரின் நிறம் மேலும் வெண்மை நிறமாக மாறும்.  ➦ இப்போது அந்த தண்ணீரை வடிக்கட்டி ஒரு பாட்டிலில் அல்லது கிண்ணத்தில் ஊற்றி வைத்துக் கொண்டு அந்த நாள் முழுவதும் எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம்.  ➦ ஆனால், 8 மணி நேரத்திற்கு பிறகு அந்த தண்ணீரை குடிக்கக்கூடாது. ஏனென்றால், தண்ணீர் புளித்துவிடும். அது உடலுக்கு நல்லதல்ல. குறிப்பு: எனெர்ஜி டிரிங்காக இருக்கும் இது பல நன்மைகளை அளித்தாலும், குளிர்ந்த தன்மை கொண்டது. அதனால், இருமல் மற்றும் சளி இருப்பவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது. உங்களுக்குக் குளிர்ச்சியான பொருட்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் கட்டாயம் தவிர்க்கவும்.

தித்திப்பான சுவையில் ரோஸ் கீர் செய்வது எப்படி? | Rose Kheer Recipe in Tamil

Nandhinipriya Ganeshan August 11, 2023

தேவையான பொருட்கள்: பால் - 2 கப் அரிசி - 1/2 கப் ரோஸ் வாட்டர் - 3 சொட்டு சர்க்கரை - 1/4 கப் ஏலக்காய் தூள் - சிறிதளவு உலர்ந்த ரோஜா இதழ்கள் - சிறிதளவு நறுக்கிய பாதாம் பருப்பு - சிறிதளவு நறுக்கிய முந்திரி - சிறிதளவு உலர் திராட்சை - சிறிதளவு ரோஸ் கீர் ரெசிபி செய்முறை: முதலில் அரிசியை 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர், ஒரு அடிகடிமான பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும். இப்போது அரிசியை நன்றாக கழுவி கொதிக்கும் பாலில் சேர்த்துக் கொள்ளவும். மிதமான தீயில் அரிசி பாலில் குழையும் வரை வேக விடவும். அரிசி பாதிக்குமேல் வெந்ததும் உலர்ந்த ரோஜா இதழ்கள் மற்றும் ஏலக்காய் தூளை சேர்த்துக்கொள்ளவும். அரிசி முழுவதுமாக வெந்த பிறகு அதில் பொடியாக்கிய சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும். ரொம்ப நேரம் அவ்வளவு தான் இப்போது அடுப்பை அணைத்துவிடுங்கள். அதை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி அதன் மீது நறுக்கிய பாதாம், முந்திரி, மற்றும் திராட்சையை தூவி விடவும். தித்திப்பான ரோஸ் கீர் தயார். சுடாகவும் பரிமாறலாம் அல்லது ப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்றும் பரிமாறலாம்.

சிறுநீரக கல் உண்டாக இதெல்லாம் தான் காரணம்.. தடுப்பது எப்படி? | How to Prevent Kidney Stones Naturally

Nandhinipriya Ganeshan August 07, 2023

ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கும் ஒரு சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை தான் இந்த 'சிறுநீரகக் கல்'. இருப்பினும், பெண்களை விட ஆண்களுக்கு தான் இந்த பிரச்சனை அடிக்கடி வரும். பொதுவாக, சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருந்து கழிவுகளை அகற்றி அதை சிறுநீரோடு வெளியேற்றும். ஒருவேளை இரத்தத்தில் அதிகப்படியான கழிவுகள் இருந்தால், உடல் போதுமான சிறுநீரை உற்பத்தி செய்யாது. ​​​​ இதனால் சிறுநீரகங்களில் படிகங்கள் உருவாகத் தொடங்குகின்றன. இந்த படிகங்கள் மற்ற கழிவுகள் மற்றும் இரசாயனங்களை கவர்ந்து ஒரு திடமான பொருளை (சிறுநீரக கல்)உருவாக்குகின்றன. இது உடலில் தாங்க முடியாத அளவிற்கு வலியை ஏற்படுத்தக்கூடியது. இந்த சிறுநீரக கல் உருவாக அப்படி என்ன தான் காரணம்? அதை தடுப்பது எப்படி? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம். சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கான காரணங்கள்: உங்கள் குடும்பத்தில் யாருக்காவது சிறுநீரக கற்கள் இருந்தால், உங்களுக்கும் கற்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், உங்களுக்கு ஏற்கனவே சிறுநீரகக் கற்கள் இருந்து குணமாகி இருந்தாலும், மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளது. தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால் சிறுநீரக கற்கள் உருவாகும். மேலும், வெப்பமான காலநிலையில் வசிப்பவர்கள், கடுமையான உடற்பயிற்சி செய்பவர்கள், உடல் உழைப்பே இல்லாதவர்களுக்கு சிறுநீரகக் கல் ஏற்பட அதிகளவு வாய்ப்புள்ளது. அதேபோல், அடிக்கடி சிறுநீரை அடிக்கி வைப்பதாலும் கல் உருவாகும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் இந்த பிரச்சனை வரலாம். அதாவது, நீரிழிவு நோயிலிருந்து வரும் இன்சுலின் எதிர்ப்பு, சிறுநீரில் கால்சியம் அளவை உயர்த்தி சிறுநீரக கற்களை உருவாக்குகிறது. நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தாலும், உணவுமுறை சிறுநீரக கற்களை உருவாக்கும். அவற்றில் முக்கியமானது சர்க்கரை, உப்பு அதிகளவு எடுத்துக்கொள்வது. இறைச்சி, முட்டை மற்றும் கடல் உணவுகள் போன்ற புரதம் நிறைந்த உணவுகள் அதிகளவு எடுத்துக் கொள்வது, உடலில் கால்சியம் மற்றும் யூரிக் அமிலத்தை உருவாக்கலாம். இதுவும் சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கு மற்றொரு காரணம். உடல் பருமனும் சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கக்கூடியது. அதாவது, உடல் பருமன் சிறுநீரில் உள்ள அமில அளவை மாற்றி, கல் உருவாவதற்கு வழிவகுக்கும். பாலிசிஸ்டிக் என்று சொல்லக்கூடியய் சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு கல் உருவாவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. வைட்டமின் சி சப்ளிமெண்ட்ஸ். அதிக அளவு வைட்டமின் சி தொடர்ந்து எடுத்துக்கொள்வது சிறுநீரகக் கல் ஏற்படுவதற்கான வாய்ப்பை இரட்டிப்பாக்குகிறது. சிறுநீரக கல் வராமல் தடுப்பது எப்படி? உணவு மற்றும் பழக்கவழக்கங்களில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் சிறுநீரகக் கற்களைத் தடுக்கலாம். நல்ல சிறுநீர் ஓட்டத்தை பராமரிக்க சரியான அளவு தண்ணீர் குடிப்பது. ஒரு நாளைக்கு குறைந்தது 7-8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாக, எப்போது சிறுநீர் வந்தாலும் அடிக்க வைக்காமல் உடனே கழித்துவிட வேண்டும். உணவில் போதுமான அளவு கால்சியம் இருக்க வேண்டும். எனவே, பால், தயிர், பருப்பு, கீரை, ஆரஞ்சு போன்ற கால்சியம் நிறைந்த பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். முடிந்தவரை உணவில் அதிகளவு உப்பு சேர்த்துக் கொள்வதை தவிர்க்கவும். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுக்க வேண்டாம். பாதாம், வேர்க்கடலை, வெண்ணெய், ப்ளூபெர்ரி போன்ற ஆக்சலேட்டுகள் அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்கவும். தினமும் உடலுக்கு போதுமான உடற்பயிற்சி செய்வதன் மூலம் கல் உருவாதைக் குறைக்க முடியும். இளநீர், வாழைத்தண்டு, எலும்பிச்சைச்சாறு போன்றவற்றை சாப்பிட்டாலும் சிறுநீரக கல் ஏற்படுவதை தடுக்க முடியும்.

இந்த அறிகுறி இருக்கா? அப்ப உங்களுக்கு சிறுநீரகக் கல் இருக்குதுனு அர்த்தம்.. | Kidney Stone Symptoms in Tamil

Nandhinipriya Ganeshan August 07, 2023

முறையற்ற உணவுப்பழக்க வழக்கத்தாலும் மாறிவரும் வாழ்வியலாலும் மனித உடலின் கழிவுகள் வெளியேறும் பாதையில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானோர் பாதிக்கப்படும் ஒரு பிரச்சனை கிட்னி ஸ்டோன் அல்லது சிறுநீரக கல். இது உடலில் மிகவும் மோசமான வலியை ஏற்படுத்தக்கூடியது. சிறுநீரக கல் என்றால் என்ன? சிறுநீரில் அளவுக்கு அதிகமான யூரிக் அமிலம், கால்சியம் போன்ற தாது உப்புகள் தேங்குவதால் ஏற்படும் கற்களுக்கு 'சிறுநீரகக்கற்கள்' என்று பெயர். இவை சிறுநீர் பை, சிறுநீர் பாதை, சிறுநீரகம் என எந்த இடத்தில் வேண்டுமானாலும் உருவாகும். மிகச்சிறிய கல்லாகவும் தோன்றலாம்; ஒரு எலுமிச்சை அளவுக்கும் ஏற்படலாம். கல்லின் அளவு பொறுத்து, வலியின் தீவிரம் இருக்கும். சிறுநீரகக் கல்லின் வகைகள்: சிறுநீரக கற்களில் முக்கியமாக நான்கு வகைகள் உள்ளன. வைட்டமின் டி அதிகமாக உட்கொள்ளுதல், சில பழங்கள், கொட்டைகள், காய்கறிகள் மற்றும் சாக்லேட்டில் கூட அதிக அளவு ஆக்சலேட்டுகள் உள்ளன. இவை உடலில் 'கால்சியம் கற்களை' உருவாக்குகின்றன. குறைவான திரவங்களை குடிப்பவர்கள் அல்லது கீல்வாதம் உள்ளவர்களுக்கு 'யூரிக் அமிலக் கற்களை' உருவாக்குகின்றன. மரபணு ரீதியாக பாதிக்கப்படும் போது 'சிஸ்டைன் கற்கள்' உருவாகின்றன. சிறுநீரகங்கள் அதிக அளவு அமினோ அமிலங்களை வெளியேற்றும் போது அவை உருவாகின்றன. கடைசி வகை 'ஸ்ட்ரூவைட் கற்கள்'. இவை சில சிறுநீர் பாதை நோய்த்தொற்றின் காரணமாக உருவாகின்றன. எனவே, உங்களுக்கு எந்த வகையான கல் உள்ளது என்பதை அறிந்து அதற்கேற்ப சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. சிறுநீரக கல் அறிகுறிகள்: பெரும்பாலான சமயங்களில் எந்த அறிகுறியும் இருக்காது. ஸ்கேன் எடுக்கும்போதுதான் தெரிய வரும். இருப்பினும், ஒரு சில அறிகுறிகளாலும் சிறுநீரகக் கல் இருப்பதை கண்டறியலாம். இந்த அறிகுறியானது கற்களின் அளவு மற்றும் இருப்பிடத்தைப் பொறுத்து மாறுபடும். சிறுநீரகக் கல்லின் பொதுவான அறிகுறி, இருபக்க இடுப்பின் பின் பக்கத்தில் அல்லது அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்படும். இது சுமார் 20-60 நிமிடங்கள் வரை நீடிக்கும். சிறுநீர் கழிப்பதில் சிரமம் அல்லது சில சமயங்களில் சிறுநீரில் இரத்தமும் வெளியேறலாம். பெண்களுக்கு சிறுநீரக கல் அறிகுறிகள்: பெரும்பாலும் ஆண்களுக்கு தான் சிறுநீரகக் கல் ஏற்படும் என்று சொல்வார்கள். ஆனால், பெண்களுக்கும் ஏற்படும். பெண்களுக்கு சிறுநீரகக் கல் இருந்தால், கீழ்க்காணும் அறிகுறிகள் ஏற்படும். முதுகு அல்லது வயிறு அல்லது இடுப்பில் கடுமையான வலி ஏற்படும். சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிதல் உணர்வு. இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது. சிறுநீரின் நிறங்களில் மாற்றம். அதாவது, சிவப்பு அல்லது பழுப்பு நிறமாக இருக்கும். சிறுநீரில் இரத்தம் காணப்படுதல். குமட்டல் உணர்வு மற்றும் வாந்தி ஆகியவையும் பெண்களுக்கு சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறியாகும். மேற்கூறிய அறிகுறிகள் தென்பட்டால், உடனே மருத்துவரை அணுகுவது முக்கியம். ஏனெனில் பெண்கள் குறிப்பிட்ட நிலையை புறக்கணித்தால், சிறுநீரகம் தொடர்பான வேறு சில பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

பல் கூச்சம் உடனே சரியாக வீட்டு வைத்தியம்.. | Home Remedy for Tooth Sensitivity

Nandhinipriya Ganeshan July 25, 2023

நமது உடலில் எந்த இடத்தில் வலி வந்தாலும் தாங்கிக் கொள்ளலாம். ஆனால், இந்த பல் வலி, பல் சொத்தை, பல் கூச்சத்தை மட்டும் தாங்கிக்கொள்ளவே முடியாது. எது சாப்பிட்டாலும் உயிரே போகும் அளவிற்கு வலி இருக்கும். இதில் பல் கூச்சம் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், சூடான, மிகவும் குளிர்ந்த, இனிப்பான மற்றும் புளிப்பான உணவுகளை சாப்பிடும்போது அசௌகரியத்தை ஏற்படுத்தும். சில சமயங்களில் வெறும் தண்ணீர் குடித்தால் கூட பற்களில் கூச்சம் உண்டாகும். இதற்கு காரணம் நமது பற்களின் மேலிருக்கும் எனாமல் அடுக்கு குறைவது தான். பல் கூச்சம் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகும். உலகளவில் 70% பேர் இந்த பிரச்சனையை அனுபவித்து வருகின்றனர். இருப்பினும், இந்த பல் கூச்சத்தை சில வீட்டு வைத்திய முறைகள் மூலமே நாம் சரி செய்ய முடியும். அவை என்ன என்பதை பார்க்கலாம் இப்பதிவில் பார்க்கலாம். பல் கூச்சம் நீங்க வீட்டு வைத்தியம்: ➦ பல் கூச்சாத்தால் அவதிப்படுவோர் தினமும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏதாவது ஒரு வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் பல் கூச்சத்திலிருந்து மெல்ல மெல்ல விடுபட முடியும். ➦ தினமும் காலையில் பல் துலக்குவதற்கு முன்பு உங்கள் வாய் பிடிக்கும் அளவிற்கு தேங்காய் எண்ணெயை எடுத்து, அதை ஈறுகளில் பரவுவது போல நன்றாக கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஈறுகளில் இருக்கும் தொற்று குணமடைந்து பல் கூச்சம் தடுக்கப்படும். ➦ கொய்யா இலைகளில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடென்டுகள் இருக்கின்றன. இவை கிருமிகளை எதிர்த்து போராடுவதோடு, ஈறுகளை பலப்படுத்தவும் உதவுகிறது. தினமும் இரண்டு கொய்யா இலையை எடுத்து அதை நீரில் நன்றாக கழுவிவிட்டு வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர பற்களில் உள்ள மஞ்சள் கரையும் நீங்கும். ➦ தினமும் பல் துலக்கியதும், வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து கரைத்து ஈறுகளில் படுமாறு சில நிமிடங்கள் வைத்து, வாய் கொப்பளித்தால் வாயில் உள்ள கிருமிகளை அளிப்பதோடு மட்டுமல்லாமல், பற்கூச்சத்தையும் தடுக்கும். இதை காலை, மாலை இரண்டு வேலைகளிலும் செய்ய வேண்டும். ➦ கிராம்பு எண்ணெய் கிடைத்தால் அதை வாங்கி, ஈறுகளில் மெதுவாக மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதை தினமும் காலை, மாலை இரண்டு முறை செய்ய வேண்டும். ➦ 1 டேபிள் ஸ்பூன் தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து, பல் துலக்கிய பிறகு இதை வாயில் ஊற்றி நன்றாக வாயை கொப்பளிக்க வேண்டும். இதை தினமும் செய்துவர பல் கூச்சத்தால் ஏற்படும் வலி விரைவில் நீங்கும். ➦ எப்பவும் பயன்படுத்தும் டூத் பேஸ்டை விட, புதினா கலந்த டூத் பேஸ்டை பயன்படுத்தினால், ஈறுகள் புத்துணர்ச்சி பெறுவதோடு பல் கூச்சமும் குறையும். தவிர்க்க வேண்டியவை: ➦ பல் கூச்சம் இருக்கும் போது சிட்ரஸ் வகை பழங்களை தவிர்க்க வேண்டும். கடினமான டூத் பிரஷ்ஷை தவிர்த்துவிட்டு, மென்மையான டூத் பிரஷ்ஷை பயன்படுத்துங்கள். ➦ நம்மில் பலரும் பற்கள் வெண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக அதிக நேரம் பற்களை துலக்குவோம். அது மிகவும் தவறு. ஏனென்றால், அதிக நேரம் பல் துலக்கும்போது பற்களின் எனாமல் குறைந்து பற்களை இழக்கும் நிலைக்கு கொண்டு சென்றுவிடும். எனவே அதிக நேரம் பல் துலக்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ➦ ஒரு சிலருக்கு பற்களை கடிப்பது, கொரிப்பது போன்ற பழக்கம் இருக்கும். இவ்வாறு செய்வதால் எனாமல் குறைந்து பற்கூச்சம் வரும். எனவே, அவற்றை தவிர்க்கவும்.

இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? | Rambutan Fruit Benefits in Tamil

Editorial Desk July 19, 2023

ரம்புட்டான் பழமானது 'இரம்புட்டான் சப்பின்டேசிக்' என்கின்ற குடும்பத்தைச் சேர்ந்த நடுத்தர உயரமுள்ள பூக்கும் பழத்தாவரம். ரம்புட்டான் என்கின்ற சொல் ரம்புட் என்னும் சொல்லக்கூடிய மலாய் மொழியில் இருந்து தோன்றியதாகும். ரம்புட் என்ற சொல்லுக்கு முடி என்று பொருள். இதற்கு இந்த பெயர் வந்ததன் காரணம் என்னவென்று பார்த்தால் இந்த பழத்தின் மேல் பகுதியானது முடியைப் போன்று அமைப்பைக் கொண்டிருக்கும். இந்த ரம்புட்டான் பழம் கிழக்காசியா மற்றும் தென்கிழக்காசியா ஆகிய இடங்களில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. ரம்புட்டான் பழம் இயல்பாக குளுமையான ஒரு வகை பழம். இந்த பழத்தை மூன்று பாகமாக பிரிக்கலாம். இந்த பழத்தை மேல்தோல் பகுதி, சதை பகுதி மற்றும் விதை பகுதி. இதன் தோல் பகுதியும், விதை பகுதியும் மிக கசப்பாக இருக்கும்; சதை பகுதி மட்டுமே சாப்பிடுவதற்கு ஏதுவாக இருக்கும். இந்த பழத்தில் கலோரி, வைட்டமின் சி, இரும்புச்சத்து, நியாசின், ஆன்டி ஆக்சிடென்ட், கார்போஹைடரேட், புரதம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. நன்மைகள்: இந்த பழம் சாப்பிடுவதன் மூலம் உடலில் கெட்ட கொழுப்புகள் சேரவிடாமல் தடுக்கப்படுகிறது. இதனால், மாரடைப்பு அபாயம் குறையும். இந்த பழமானது ஆஸ்துமா மற்றும் நீரிழிவு முதலிய நோய்களை கட்டுப்படுத்துவதோடு கண் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் உதவுகிறது. இப்பழத்தில் உள்ள இரும்புசத்து உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்க உதவுகிறது. எலும்பு வளர்ச்சிக்கு உதவுகின்ற கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இதில் அதிகம் உள்ளது. இந்த பழத்தை அடிக்கடி சாப்பிடுவதால் தலைமுடி, தோல் மற்றும் கை, கால் நகங்கள் பளபளப்புடன் இருக்கும். மேலும், இப்பழத்தில் உள்ள கார்போஹைட்ரெட், புரதம் போன்ற சத்துக்கள் உடல் உழைப்புக்குத் தேவையான ஆற்றலை தருகிறது. இதன் தோல் பகுதியானது சீதபேதியைக் (Dysentry) குணப்படுத்தும் தன்மை கொண்டது. இதில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் நாக்கு வறண்டு போவதை தடுக்கிறது.

சமையலில் தக்காளிக்கு பதிலாக இந்த பொருட்களை பயன்படுத்தலாம்.. | Substitute for Tomato in Cooking

Nandhinipriya Ganeshan July 19, 2023

அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் சமையல் பொருட்களில் மிகவும் முக்கியமானது தக்காளி. இந்த தக்காளி இல்லாமல் குழம்பு வைப்பது சற்று சவாலான காரியம். எந்த குழம்பாக இருந்தாலும் ஒரு தக்காளியையாவது சேர்த்து சமைத்தால் தான் அந்த குழம்பிற்கு உண்டான சுவையே கிடைக்கிறது. அதனால் தான் நம் அம்மாக்கள் வீட்டில் தக்காளி இல்லையென்றால், பக்கத்துவீட்டில் தக்காளியை கடன் வாங்கியாவது சமைப்பார்கள். நாம் இவ்வளவு நாட்களாக தக்காளி என்பது ஒரு காய்கறி வகையை சேர்ந்தது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் தக்காளி ஒரு பழவகை. அந்த காலத்தில் பழவகைகள் என்றால் வரி உண்டு. தக்காளி அதிகளவில் பயன்படுத்துவதால் இதை காய்கறி வகைகளில் சேர்த்துக் கொண்டார்கள். சுமார் 400 ஆண்டுகளாக தான் தக்காளி உணவுக்கு அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு பொருள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது என்றால் விலை அதற்கேற்ப தான் இருக்கும். ஒரு காலத்தில் 1 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கொடுமையும் இருக்கிறது. அதுவே, மழைக்காலத்தில் தக்காளியின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு எகிறிக்கொண்டே செல்லும். அப்படியாப்பட்ட சூழ்நிலை தான் தற்போது நிலவுகிறது. ஒரு கிலோ தக்காளி சுமார் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில் தக்காளியை விற்று கோடீஸ்வரர்களான கதையும் இருக்கும். நாளுக்கு நாள் தக்காளியின் விலை உயர்வு வியாபாரிகளுக்கு லாபம் என்றாலும், வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. இதனால், அன்றாடம் சமையலில் தக்காளி பயன்படுத்துவதும் குறைந்து வருகிறது. தக்காளி விலை குறையும் வரை பெரும்பாலானோர் தக்காளி இல்லாமல் குழம்பு வைக்கவும் இறங்கிவிட்டார்கள். ஆனால், தக்காளிக்கு பதிலாக சில பொருட்கள் இருக்கின்றன. இவை குழம்பிற்கு தக்காளி போன்றே சுவையை கொடுக்கக்கூடியவை. விலையும் சற்று குறைவு தான். அப்படியென்ன பொருள் வாங்க பார்க்கலாம். புளி விழுது: தக்காளியை விட அதிக புளிப்பு சுவையை கொண்ட பொருள் தான் புளி. சாம்பார், புளிக்குழம்பு போன்றவற்றிற்கு தக்காளிக்கு பதிலாக புளிச்சாற்றை சிறிதளவு பயன்படுத்தலாம். இது குழம்பிற்கு நல்ல சுவையையும், நல்ல நிறத்தையும் தரக்கூடியது. எனவே, தக்காளி விலை குறையும் வரை புளியை பயன்படுத்தி வரலாம். மாம்பழம்: தக்காளிக்கு மாம்பழம் ஒரு சிறந்த மாற்றாகும். இது தக்காளிக்கு ஒத்த இனிப்பைக் கொண்டுள்ளது. மாம்பழத்தின் விழுதை பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது மாங்காய் பொடி கிடைத்தாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுவும் நல்ல புளிப்பு மற்றும் இனிப்பு கலந்த சுவையைக் கொண்டது மற்றும் இது விலை குறைவானதும் கூட. இந்த மாங்காய் தூளை நீங்கள் சமைக்கும் போது ஒரு டீஸ்பூன் அல்லது ஒரு டேபிள் ஸ்பூன் என உங்களுக்கு தேவையான அளவு குழம்பு அல்லது வேறு சமையலில் சேர்த்துக் கொள்ளலாம். புளித்த தயிர்: சமையலில் தக்காளிக்கு பதிலாக தயிரை சேர்த்துக் கொள்ளலாம். தயிரின் அமிலச் சுவை மசாலாப் பொருட்களுடன் நன்றாக கலந்து உங்களுக்கு நல்ல சுவையை தருவதோடு குழம்பு சற்று கெட்டியாகவும் இருக்கும். ஆனால், 2 - 3 நாட்கள் பழமையான, அதாவது நன்றாக புளித்த தயிராக இருக்க வேண்டும். இருப்பினும், தயிரை சமைத்து முடித்த பின் இறுதியில் தான் சேர்த்து கிளற வேண்டும். நெல்லிக்காய்: நெல்லிக்காயை தக்காளிக்கு மாற்றாக பயன்படுத்தலாம். ஆனால், இதில் புளிப்பு சற்று கூடுதலாக இருக்கும். எனவே குழம்பில் சேர்க்கும்போது அளவு குறித்து கவனமாக இருக்க வேண்டும். மேலும் நெல்லிக்காயை சமையலில் பயன்படுத்துவதாக இருந்தால், அந்த நெல்லிக்காய் துண்டுகளை சர்க்கரை சேர்த்த நீரில் சிறிது நேரம் ஊற வைத்து அரைத்து, அதன் பின் சமையலில் சேர்க்கவும்.