Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மூத்த குடிமக்கள் வீட்டுக் கடன் வாங்கணும்னா இதெல்லாம் கட்டாயம் தேவை | Home Loan for Senior Citizens

Priyanka Hochumin Updated:
மூத்த குடிமக்கள் வீட்டுக் கடன் வாங்கணும்னா இதெல்லாம் கட்டாயம் தேவை | Home Loan for Senior CitizensRepresentative Image.

வங்கியில் மூத்த குடிமக்கள்களுக்கு வீட்டுக் கடன் தருவது எந்த அளவிற்கு ரிஸ்க் என்று நமக்கு தெரியும். ஆனால் அதையும் தாண்டி வீட்டுக் கடன் தருகிறார்கள் என்றால் அதில் நாம் கவனிக்கூடிய விஷயங்கள் என்ன என்று இந்த பதிவில் பாப்போம்.

Also Read - 50 வயசுக்கு மேல நமக்கு யார் லோன் தருவா? அப்படி இல்ல கண்டிப்பா தருவாங்க | Home loan for senior citizens

மூத்த குடிமக்கள் வீட்டுக் கடன் வாங்கணும்னா இதெல்லாம் கட்டாயம் தேவை | Home Loan for Senior CitizensRepresentative Image

தொகை அதிகம்....

என்ன தான் வங்கிகள் கடன் தந்தாலும் தங்களுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் தான் கடன் தருகின்றனர். எப்படி என்றால்? வீட்டு கடன் வாங்குபவர்கள் தங்கள் கையில் இருந்து செலுத்தும் தொகையானது 20 சதவீதமாகத் தான் இருக்கும். ஆனால் மூத்த குடிகளுக்கு 30-35 சதவீதம் அளவிற்கு இருக்கும். அதே போல் இளைஞர்கள் வீட்டுக் கடன் வாங்க குறைந்தது மாதம் 25,000 முதல் 30,000 வரை சம்பாதிக்க வேண்டும். இதே அளவிற்கு பென்ஷன் வாங்கும் முதியவர்களுக்கு லோன் கண்டுபாக கிடைக்கும்.

மேலும் கிரெடிட் ஸ்கோர் 750-க்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே கடன் கிடைக்கும். ஆனால் முதியவர்களுக்கு கொஞ்சம் அதிகமாக 800-850 வரை இருந்தால் மட்டுமே கடன் தரப்படும்.

மூத்த குடிமக்கள் வீட்டுக் கடன் வாங்கணும்னா இதெல்லாம் கட்டாயம் தேவை | Home Loan for Senior CitizensRepresentative Image

கடன் தகுதி அதிகரிக்க...

பென்ஷன் வாங்கும் 50 வயதிற்கு அதிகமானவர்கள் கடன் வாங்கும் போது (co-applicant) பிரிவில் விண்ணப்பிக்கலாம். அதாவது அவர்களின் மனைவி, மகன், மகள் என்று வேலை பார்ப்பவர்களாக இருந்தால் சேர்க்கலாம். மேலும் எண்டோவ்மென்ட் ஆயுள் காப்பீடு பாலிசி, வேறு சொத்தின் ஆவணங்கள் ஆகியவற்றைக் கொடுக்கும் போது கடனுக்கான தகுதி அதிகரிக்கும்.

மேலும் வீட்டுக் கடனுக்கான வட்டி சாதாரணமாகவே அதிகமாகத் தான் இருக்கும். இருப்பினும் மூத்த மக்களுக்கு பென்ஷனில் இருந்து 40% வட்டிக்கே போய்விடும். எனவே, லோன் வாங்கிய பின்னர் அதற்கு ஏற்ப திட்டமிட்டு செயல்படவும்.

மூத்த குடிமக்கள் வீட்டுக் கடன் வாங்கணும்னா இதெல்லாம் கட்டாயம் தேவை | Home Loan for Senior CitizensRepresentative Image

லோன் வாங்க தேவையான ஆவணங்கள்!

உங்களின் அடையாளங்களை தெரிவிக்கும் விதமாக இருக்கும் ஆதார், பான் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் என்று இவற்றுள் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்கும். மேலும் வருமான ஆதாரத்திற்காக வரிக்கணக்கு தாக்கல் செய்த விவரம் அல்லது படிவம் 16 அல்லது கடந்த மூன்று மாத வங்கிக் கணக்கு அறிக்கை ஆகியவை தேவைப்படும். இதுவே நீங்கள் பென்ஷன் வாங்குபவராக இருந்தால் கடந்த 6 மாத வங்கிக்கணக்கு விவரம் தர வேண்டியதாக இருக்கும்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்