Thu ,Mar 23, 2023

சென்செக்ஸ் 57,875.31
246.36sensex(0.43%)
நிஃப்டி17,050.55
62.15sensex(0.37%)
USD
81.57
Exclusive

பாரம்பரிய பிரசாதமான எள்ளு பாயாசம்... இதோ ரெசிபி..

Nandhinipriya Ganeshan September 26, 2022 & 16:20 [IST]
பாரம்பரிய பிரசாதமான எள்ளு பாயாசம்... இதோ ரெசிபி..Representative Image.

ஓணம், நவராத்திரி, புரட்டாசி சனிக்கிழமை, அமாவாசை என அனைத்து விதமான விஷேங்களிலும் நைவேத்தியமாக படைக்கும் பிரசாதம் தான் இந்த எள்ளு பாயாசம். எள்ளு உருண்டை, எள்ளு சாதம் கேள்விப்பட்டிருக்கிறோம், அதென்ன எள்ளு பாயாசம். நம் முன்னோர்கள் அனைத்து விஷேச நாட்களிலும் படைக்கும் பாரம்பரியமான பிரசாதம் இது. இந்த காலத்தில் எத்தனையோ விதமான பாயாசங்கள் வந்துவிட்டது. அதனால், நாம் இதை மறந்துவிட்டோம் என்றே சொல்லலாம். இந்த பாயாசம் செய்வது அவ்வளவு கடினமான விஷயம் ஒன்றும் கிடையாது. பத்தே நிமிடத்தில் செய்துவிடலாம். ஆரோக்கியமான எள்ளு பாயாசம் எப்படி செய்வது பார்க்கலாம். 

பெருமாளுக்கு பிடித்த எள்ளு சாதம்.. இப்படி செஞ்சி பாருங்க...

தேவையான பொருட்கள்:

கருப்பு எள் - 3 டீஸ்பூன்

வெல்லம் - 3/4 கப்

பால் - 1 கப்

நெய் - தேவையான அளவு

முந்திரி பருப்பு - சிறிதளவு

ஏலக்காய் - சிறிதளவு

ஓணம் சத்யாவில் இடம்பெறும் அரிசி பால் பாயசம்... 

செய்முறை:

முதலில் அடுப்பில் கடாயை வைத்து அதில் சிறிதளவு நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி பருப்பு, ஏலக்காய் இரண்டையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். இதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது அதே கடாயில் இருக்கும் 1 ஸ்பூன் அளவிற்கு நெய் ஊற்றி காய்ந்ததும் எள்ளை போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும். தீய விடக்கூடாது. 

இப்போது, முந்திரி, ஏலக்காய், எள்ளு மூன்றையும் ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும். 

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியம் செய்வது எப்படி?

பின்னர், மற்றொரு பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள பாலை ஊற்றி சுண்ட காய்ச்சிக் கொள்ளவும். பின்பு அதில் வெல்லத்தை போட்டு நன்றாக கரையும் வரை காய்ச்சி  கொள்ளவும். 

இந்த பதத்தில் அரைத்து வைத்துள்ள ஏலக்காய், முந்திரி, எள்ளு பவுடரை கொட்டி 10 நிமிடம் கொதிக்க விடவும். அவ்வளவு தாங்க! சுவையான பாரம்பரியமான எள்ளு பாயாசம் ரெடி!

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் 'நெய் பணியாரம்' செய்வது எப்படி?

முந்திரி பருப்பு, ஏலக்காயை வெறுமனே வறுத்தும் போட்டுக் கொள்ளலாம். அதேபோல் வெல்லத்திற்கு பதிலாக சர்க்கரையும் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் விருப்பம் தான். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்