கர்ப்பத்தின் ஐந்தாவது மாதத்திற்கு உங்களை வரவேற்கிறோம். தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிகவும் அழகான தருணம். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு பெண்ணும் விரும்பி ஏற்றுக்கொள்ளும் திருப்புமுனையும் கூட. இந்த மாதிரியான நேரத்தில் எல்லாருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதில்லை. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு விதமான உணர்வை உணர்வார்கள். அதிலும்18 வது வாரம் பல பெண்களுக்கு மிகவும் பிடித்தமான மாதமாகவும் இருக்கிறது.
ஏனென்றால், இந்த மாதத்தில் கர்ப்பிணிகள் அனுபவிக்கும் சில விஷயங்கள் தான். அதாவது, ஐந்தாவது மாதத்தில் பெண்களுக்கு வயிறு லேசாக வெளியே தெரியும். மேலும், இந்த மாதத்தில் எந்த ஒரு சோர்வு, மயக்கம், குமட்டல் போன்ற பிரச்சனைகளும் இருக்காது. ஆகவே பெண்கள் விருப்பமான எந்த ஒரு செயலையும் செய்யவும், பிடித்ததை சாப்பிடவும் முடியும். அதுமட்டுமல்லாமல், இந்த மாதத்தில் உங்க சிறிய குழந்தை நன்றாக வளர தொடங்கிவிடும். இதனால், கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன மாற்றங்கள் பற்றி இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
வயிறு விரிவடைய வயிற்றுப்பகுதியில் இருக்கும் தோலும் அதற்கேற்ப விரிவடையும். இதனால், வயிற்றுப்பகுதியில் அரிப்பு மற்றும் நமச்சல் ஏற்படும். இது அனைத்து கர்ப்பிணிகளுக்குமே ஏற்படும். எனவே, அரிப்பை தவிர்க்க அவ்வப்போது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மாய்ஸ்சுரைஸிங் கிரீமை பயன்படுத்தலாம். அதேபோல், வயிற்றை இறுக்கும் விதமாக அணியும் ஆடைகளை தவிர்த்துவிட்டு, மென்மையான லூசான ஆடைகளை அணிந்துக் கொள்வது நல்லது.
கருப்பை விரிவடைவதால், உங்கள் தொப்புள் கொடியை கீழ் வெளிப்புறமாக அழுத்தும். இதனால், நடக்கும்போது லேசாக வலிக்கலாம் அல்லது தொப்புளுக்கு கீழே உள்ள பகுதியில் அவ்வப்போது சிறு அசௌகரியங்களை அனுபவிக்கலாம். சில சமயங்களில் தொப்புள் வெளியில் தெரியவும் வாய்ப்புள்ளது. ஆனால், இது பிரசவத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு மாறிவிடும், பயப்பட வேண்டாம்.
கருப்பையின் ஒவ்வொரு பக்கத்திலும் வட்டமான தசைநார்கள் இடுப்புடன் இணைந்திருந்திருக்கும். கரு வளர வளர தசைநார்கள் நீட்சியடையும். இதனால், அவ்வப்போது லேசான முதல் கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்தும். சில சமயங்களில் அடிவயிற்றின் ஒன்று அல்லது இரண்டு பக்கங்களிலும் அல்லது உங்கள் முதுகில் கூட வலியை ஏற்படுத்தும். இதனால், குழந்தைக்கு எந்த பாதிப்பும் கிடையாது.
இந்த இடுப்பு தசைநார் வலியை தடுக்க அல்லது குறைக்க, கால் தூக்கும் பயிற்சிகளை முயற்சி செய்யலாம். மேலும், உட்காருவது முதல் நிற்பது வரை மற்றும் படுக்கையில் இருந்து எழும்பும் போதும் வேகமான நடவடிக்கைகளை தவிர்க்கவும்.
கர்ப்பத்தின் ஐந்தாவது மாதத்தில் உங்கள் முலைக்காம்புகள் முன்பை விட அதிக உணர்திறன் கொண்டதாக இருக்கும். அதாவது படுத்திருக்கும்போதும் அல்லது உங்க ஆடைகள் முலைக்காம்புகளை உரசும்போது லேசான வலியை ஏற்படுத்தும். சிலசமயங்களில் முலைக்காம்பி ஒரு தங்க மஞ்சள் நிறத்தில் கொலஸ்ட்ரம் கசிவதையும் உணர முடியும். இதுவும் கர்ப்பக்காலத்தில் சாதராணமான ஒன்று தான்.
கர்ப்பத்தின் ஐந்தாவது மாதத்தில் சில நேரங்களில், பல பெண்கள் தங்கள் பார்வை மாற்றங்களைக் காண்கிறார்கள். அதாவது உடல் முழுவதும் ஏற்படும் திரவ அதிகரிப்பு கண் இமைகளின் வடிவத்தை மாற்றுகிறது. அதனால், சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கிட்டப்பார்வை அல்லது தூரப்பார்வை ஏற்படுகிறது. பிரவத்திற்கு பிறகு சரியாகிவிடும்.
கர்ப்பத்தின் ஐந்தாவது மாதத்தில் உங்கள் அடிவயிற்றைப் போலவே உங்கள் கால்களும் பெரிதாகவும் கனமாகவும் இருக்கும். அதாவது, கணுக்கால் மற்றும் கால்களில் திரவம் சேகரிப்பதால் பாதங்கள் வீங்கிக் காணப்படும். இதுவும் இந்த மாதத்தில் சாதாராணமான ஒன்றுதான்.
ஐந்தாவது மாதத்தில் இறுதியில் உங்களுடைய வயிறு தோராயமாக ஒரு பாகற்காய் அல்லது முலாம்பழம் அளவு இருக்கும். அந்தரங்க எலும்பிலிருந்து மேல் வயிறு வரை, உங்கள் வயிறு இப்போது 20 செமீ (7.9 அங்குலம்) அளவில் இருக்கும்.
பொறுப்பு துறப்பு: கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளையும், மருத்துவ டிப்ஸ்களையும் இந்த பகுதியில் காண்போம். எனினும் கர்ப்பக்கால சிக்கல்கள் மற்றும் உடல் உபாதைகளை தீர்க்க கண்டிப்பாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். வீட்டிலேயே பிரசவம், ஆங்கில மருத்துவம் இல்லாத நாட்டு மருத்துவ முறைகளை Search Around web இணையதளமோ ஆசிரியர்களோ பரிந்துரைப்பதில்லை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…