Sat ,Nov 09, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

தண்ணீர் தொட்டி கட்ட ரூ.40 ஆயிரம் மானியம் வழங்கும் மத்திய அரசு!

Nandhinipriya Ganeshan Updated:
தண்ணீர் தொட்டி கட்ட ரூ.40 ஆயிரம் மானியம் வழங்கும் மத்திய அரசு! Representative Image.

தமிழக அளவில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் இருக்கும் விவசாயிகள் பயன்பெறும் வகையில், பிரதமரின் விவசாய நீர் பாசன திட்டம் மற்றும் நுண்ணீர் பாசனம் திட்டம் மற்றும் பாசன கட்டமைப்பு உருவாக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும் மற்றும் இதர விவசாயிகளுக்கு 70 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. அதன் ஒருபகுதியாக விவசாயிகள் தண்ணீர் தேக்க தொட்டி கட்டிக்கொள்ள ரூ. 40 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. இதை எப்படி வாங்குவது, என்னென்ன ஆவணங்கள் தேவை, யாருக்கு கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம். 

தண்ணீர் தொட்டி கட்ட ரூ.40 ஆயிரம் மானியம் வழங்கும் மத்திய அரசு! Representative Image

மானியம் எவ்வளவு?

இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான மானியங்கள் வழங்கப்படுகிறது. 

  • பாசனத்துக்கு தண்ணீரை குழாய் பதிக்க ரூ. 10 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
  • நீர் சேமிப்பு தொட்டி அமைக்க, ரூ. 40 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
  • மின்மோட்டார் அல்லது டீசல் பம்ப்செட் வாங்க ரூ. 15 ஆயிரம் மானியம் வழங்கப்படும். 

தேவைப்படும் ஆவணங்கள்:

தண்ணீர் தேக்க தொட்டி கட்டுவதற்கு மானியம் பெற விரும்பும் விவசாயிகள் உங்கள் அருகில் உள்ள வேளாண் துறை அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். அல்லது மானியம் தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.  

  • சிறு குறு விவசாயிகள் சான்று
  • சிட்டா நகல்
  • ஆதார் கார்டு
  • ரேஷன் கார்டு

குறிப்பு:

ஏற்கனவே தாங்கள் தண்ணீர் தேக்க தொட்டி கட்டியிருந்தாலும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து மானியம் பெற்றுக்கொள்ளலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்