Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டாப் வேரியண்ட் 16 லட்சம்...இது தான் நமக்கு ஏத்த பட்ஜெட் கார்! | Honda Elevate On Road Price in India

Priyanka Hochumin Updated:
டாப் வேரியண்ட் 16 லட்சம்...இது தான் நமக்கு ஏத்த பட்ஜெட் கார்! | Honda Elevate On Road Price in IndiaRepresentative Image.

ஜப்பான் நாட்டை இருப்பிடமாகக் கொண்ட ஹோண்டா ஆட்டோமொபைல் நிறுவனம் உலகெங்கிலும் பிரபலமானது. பட்ஜெட் விலையில் மக்களுக்கு கார்களை வழங்குவதில் இந்நிறுவனமும் ஒன்று. அந்த வகையில், நேற்று இந்தியாவில் ஹோண்டா எலிவேட் எஸ்யூவி மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் SV, V, VX மற்றும் ZX என மொத்தம் நான்கு வேரியண்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹோண்டா எலிவேட் டைமென்ஷன்ஸ்

இது 121hp, 145Nm, 1.5-லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் ஆகியவற்றை பெறுகிறது. அதனால், 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்டெப் CVT ஆட்டோமேட்டிக் மூலம் முன் சக்கரங்களுக்கு பவர் அனுப்ப முடியும். ஹோண்டாவின் குளோபல் ஸ்மால் கார் இயங்குதளத்தில், ஹோண்டா எலிவேட் 4,312மிமீ நீளம், 1,790மிமீ அகலம் மற்றும் 1,650மிமீ உயரம், வீல்பேஸ், கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் பூட் ஸ்பேஸ் முறையே 2,650மிமீ, 220மிமீ மற்றும் 458 லிட்டர் என்று விவரக்குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

டாப் வேரியண்ட் 16 லட்சம்...இது தான் நமக்கு ஏத்த பட்ஜெட் கார்! | Honda Elevate On Road Price in IndiaRepresentative Image

ஹோண்டா எலிவேட் இன்டீரியர் 

எலிவேட் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேயுடன் 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டச் ஸ்கிரீன் கொண்டு வருகிறது. இதனால், ப்ளூ டூத் மூலம் மேப், போன் கால், மியூசிக் என பலவற்றை கட்டுப்படுத்த முடியும். இத்துடன் 7-இன்ச் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரும் இடம் பெற்றுள்ளது. இதனை தவிர்த்து லேன்-வாட்ச் கேமரா, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா உள்ளிட்ட அம்சங்கள் ஹோண்டா எலிவேட்டில் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக, ஹோண்டா தனது ADAS சூட்டை எலிவேட் உடன் வழங்குகிறது. அதில் கொலிசன் மிடிகேஷன் பிரேக்கிங் சிஸ்டம், லேன் டிபாச்சர் வார்னிங், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப்பிங் அசிஸ்ட், ரோட் டிபாச்சர் வார்னிங் மற்றும் ஆட்டோமேட்டிக் ஹை பீம் அசிஸ்ட் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளது.

டாப் வேரியண்ட் 16 லட்சம்...இது தான் நமக்கு ஏத்த பட்ஜெட் கார்! | Honda Elevate On Road Price in IndiaRepresentative Image

ஹோண்டா எலிவேட் டிசைன்

எலிவேட்டின் முன் பக்கமானது ஒரு பெரிய கிரில், அதில் பெரிய ஹோண்டா லோகோ மற்றும் மெல்லிய, எல்இடி ஹெட்லைட்களால் சூழப்பட்டுள்ளது. ஹெட்லைட் கிரில் மேற்புறத்தில் இருக்கும் குரோம் பாரில் இணைக்கப்பட்டுள்ளன. இதுவே, மிட் சைஸ் SUV ஆனது சற்று விரிந்த சக்கர வளைவுகள், திக் பிளாஸ்டிக் கிலாடிங் மற்றும் சங்கி சி-பில்லரை நோக்கி மேல்நோக்கிச் செல்லும் ஜன்னல் கோடு ஆகியவற்றைக் கொண்ட பாக்ஸி வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால், காரின் பின்புறத்தில் எலிவேட் சற்று ரேக் செய்யப்பட்ட விண்ட்ஷீல்ட் மற்றும் டெயில் லைட்கள் இரண்டும் ரிஃப்ளெக்டர் பார் வழியாக இணைக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா எலிவேட் விலை

Trim

Manual

Automatic

SV

ரூ. 11 லட்சம்

-

V

ரூ. 12.11 லட்சம்

ரூ. 13.21 லட்சம்

VX

ரூ. 13.50 லட்சம்

ரூ. 14.60 லட்சம்

ZX

ரூ. 14.90 லட்சம்

ரூ. 16.00 லட்சம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்