Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

வீட்டிலேயே மிக எளிமையான முறையில் ரோஸ்மேரி செடி வளர்ப்பது எப்படி? | How to Grow Rosemary at Home in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
வீட்டிலேயே மிக எளிமையான முறையில் ரோஸ்மேரி செடி வளர்ப்பது எப்படி? | How to Grow Rosemary at Home in Tamil Representative Image.

ரோஸ்மேரி (Rosemary) என்பது வாசனை மிகுந்த பசுமை மாறா மற்றும் ஊசி போன்ற இலைகளை கொண்ட பல ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு மூலிகை தாவரம். இந்த மூலிகை வெளிநாடுகளில் அழகுத் தாவரமாக வளர்க்கப்படுகிறது. இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் இந்த செடியின் சிறிதளவு தண்டை பறித்து தலையணைக்கு அடியில் வைத்து தூங்கியினால் நிம்மதியான தூக்கம் வரும். இந்த தாவரத்திலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் தலைமுடி வளர்ச்சிக்கு ரொம்பவே பயன்படுகிறது. 

வீட்டிலேயே மிக எளிமையான முறையில் ரோஸ்மேரி செடி வளர்ப்பது எப்படி? | How to Grow Rosemary at Home in Tamil Representative Image

அதேபோல், இந்த இலையின் பொடியை டீ செய்து குடித்துவந்தால், அல்சைமர் என்ற மறதி நோயே வராது, வந்தாலும் கூடிய விரைவில் கட்டுப்படுத்தப்படும். இந்த செடியின் வாசனையை முகர்ந்தாலே தலைவலி உடனே பறந்துபோய்விடும். குறிப்பாக, ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்களுக்கு ரொம்பவே நல்ல மருந்து என்று சொல்லலாம். இத்தனை நன்மைகளை தன்னுள் ஒழித்து வைத்திருக்கும் ரோஸ்மேரி செடியை வீட்டிலேயே எளிமையாக வளர்ப்பது எப்படி என்பதை பார்க்கலாம். இந்த செடியை விதை மூலமாகவும், கட்டிங் மூலமாகவும் வளர்க்கலாம். 

வீட்டிலேயே மிக எளிமையான முறையில் ரோஸ்மேரி செடி வளர்ப்பது எப்படி? | How to Grow Rosemary at Home in Tamil Representative Image

ரோஸ்மேரி மூலிகை செடி வளர்ப்பது எப்படி?

முதலில், செடியில் இருக்கும் ஒரு தண்டு பகுதியை மட்டும் வெட்டி எடுத்துக் கொள்ளவும். அந்த தண்டு பகுதியின் அடியில் சிறு சிறு இலைகளை அகற்றிவிட்டு, ஒரு கண்ணாடி டம்ளரில் 1/4 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அதில் அந்த தண்டை வைத்து விடுங்கள். 

இதை 4 லிருந்து 5 மணி நேரம் மட்டும் இளஞ்சூடான சூரியஒளி படும் இடத்தில் வைத்து விடுங்கள். ஆனால், நேரடியான சூரிய ஒளியில் வைக்கக்கூடாது. இந்த செடி வேர் பிடிக்க 2 லிருந்து 3 வாரம் எடுத்துக் கொள்ளும். வேர் வந்தவுடன் அதை ஓரளவுக்கு பெரிய மண் தொட்டியில் வைத்து வளர்க்கலாம்.

இதற்கு மண் கலவை என்று பார்த்தால் சிறிதளவு செம்மண், மணல், உரம் ஆகியவற்றை கலந்துக் கொள்ளுங்கள். அதை மண் தொட்டியில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஈரப்பதமாக்கி செடியை நடுவு செய்து விடுங்கள். அவ்வளவு தாங்க மருத்துவம் குணம் நிறைந்த ரோஸ்மேரி செடியை ஈஸியாக வீட்டில் வளர்க்கலாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்