Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Best of 2022 | கலாச்சாரம் பிறந்த தமிழ்நாட்டில் அதிக மக்கள் சுற்றுலா சென்ற இடங்கள்

Priyanka Hochumin Updated:
Best of 2022 | கலாச்சாரம் பிறந்த தமிழ்நாட்டில் அதிக மக்கள் சுற்றுலா சென்ற இடங்கள்Representative Image.

லட்சக்கணக்கான வருடங்களுக்கும் மேலான கலாச்சாரம், தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள், தனித்துவமான நடனம், உணவு இப்படி எல்லா விஷயங்களிலும் முதன்மையில் இருப்பது தமிழ்நாடு. ஆம் இந்த உலகில் தோன்றிய முதல் மொழி மற்றும் தற்போது வரை நடைமுறையில் இருக்கும் முதல் மூத்த மொழி தமிழ். இந்தியாவில் இருக்கும் மாநிலங்களில் தனது தாய் மொழியைக் கொண்டு பெயர் பெற்ற மாநிலம் தமிழ்நாடு.

கல்வி, தொழில், நிறுவனங்கள் என்று அனைத்திலும் முன்னிலை வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டில் புதுமையான மற்றும் தனித்துவமான கட்டிடக்கலையால் பல சுற்றுலாத் தளங்கள் இருக்கிறது. நீங்கள் ஒருவேளை தமிழ்நாட்டு முழுவதும் சுற்றுலா செல்ல விரும்பினால் இந்த இடங்களுக்கு நிச்சயம் செல்ல வேண்டும்.

1. சென்னை

தமிழகத்தின் தலை நகரம். வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்று மக்கள் சொல்லும் அளவிற்கு பொருளாதாரம், ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள், கலாச்சாரம் என்று மக்களை வாழ வைக்கிறது. உங்களுக்கு மூன்றில் இருந்து நான்கு நாட்கள் தேவை நகரை முழுமையாக சுற்றிப்பார்க்க.

முக்கிய இடங்கள் - மெரினா பீச், கபாலீஸ்வரர் கோவில், செம்மொழி பூங்கா, அறிஞர் அண்ணா ஜூ என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

2. மஹாபல்லிபுரம்

இதனை மாமல்லபுரம் என்று அழைக்கலாம். 7 ஆம் நூற்றாண்டில் பல்லவர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் நம்மை ஈர்க்கிறது. அப்படி பட்ட நுணுக்கமான கலையை பார்க்க உலகம் முழுவதில் இருந்து மக்கள் வருகின்றனர். குளிர் காலத்தை தவிர எல்லா நேரமும் மக்கள் கூட்டம் இருந்தே இருக்கும்.

முக்கிய இடங்கள் - குகை கோவில், கடற்கரை கோவில், பஞ்ச ரதங்கள்

3. கன்னியாகுமாரி

என்பதை கேப் கொமோரின் என்னும் பெயரில் இருந்து மாறுபட்டது. கன்னியாகுமரி என்ற பெயர் கேட்டாலே நினைவுக்கு வருவது திருவள்ளுவர் சிலை தான். அது மட்டும் இல்லாது கடற்கரை, கோவில், கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலில் தலைசிறந்த மக்கள் வாழும் ஊர்.

முக்கிய இடங்கள் - கன்னியாகுமரி கோவில், திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவகம்.

4. மதுரை

தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரம் இது. சோழர்கள் மற்றும் பாண்டியர்களால் ஆளப்பட்டது மதுரை. மேலும் கோவில், மட்டன் தோசை என்று பல விஷ்யங்களுக்காக பேமஸ் ஆனது.

முக்கிய இடங்கள் - மதுரை மீனாட்சியம்மன் கோவில், காந்தி மியூசியம், சமணர் மலை, கூடல் அழகர் கோவில்.

5. கொடைக்கானல்

மக்களால் செல்லமாக "மலைகளின் ராணி" என்று அழைக்கப்படுகிறது. கொடைக்கானல் முழுவதும் பச்சை பசேலென மரங்கள், ஏரிகள், நீர்வீழ்ச்சிகள் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர். மேலும் 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் போன்று நிறைய மலர்களின் வாழ்வு இடமாக திகழ்கிறது.

முக்கிய இடங்கள் - குறுஞ்சியாண்டவர் கோவில், கோடை ஏரி, பெரிஜாம் ஏரி, பிரையன்ட் பூங்கா, பசுமை பள்ளத்தாக்கு காட்சி.

6. காஞ்சிபுரம்

என்ற பெயரை கேட்டாலே ஞாபகம் வருவது "பட்டு" தான். சேரர், சோழர் முதல் பிரிட்டிஷ் காரர்கள் வரை பலராலும் ஆளப்பட்டது. மேலும் கோவில் சிற்பங்கள் மற்றும் கல் செதுக்குதல் என்று திராவிட பாணியில் நிறைய கலைக்களஞ்சியங்கள் இருக்கின்றன.

முக்கிய இடங்கள் - ஏகாம்பரேஸ்வரர் கோவில், காமாட்சி அம்மன் கோவில், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்.

7. கோவை

தொழிற்சாலைகளில் முக்கிய பங்கு வகிக்கும் கோவை "மான்செஸ்டர் ஆஃப் இந்தியா" என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஏரியாவை வைத்து பார்க்கையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. நொய்யல் ஆற்றிற்கு அருகில் இருக்கும் கோவை தளர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது.

முக்கிய இடங்கள் - மருதமலை கோவில், சிறுவாணி அருவிகள், பேரூர் பட்டீஸ்வரர் கோவில்.

8. ஊட்டி

நீலகிரி மலையில் இருக்கும் முக்கிய இடமான ஊட்டக்காமண்ட் என்னும் ஊட்டி டீ இலை, மலைகள், காடுகள், கேரட், ஹோம் மேட் சாக்லேட் என்று பலவற்றிற்கு பேர் போனது. சூடாக இருக்கும் நம் வாழ்க்கையில் ஜில்லுனு ரிலாக்ஸ் பண்ண செம்ம இடம்.

முக்கிய இடங்கள் - பொட்டானிக்கல் கார்டன், டீ எஸ்டேட், தொட்டபெட்டா சிகரம், பனிச்சரிவு ஏரி.

9. தஞ்சாவூர்

சோழர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவிலின் கட்டிடக்கலை இதுவரை யாராலும் முறியடிக்க முடியவில்லை. மேலும் பல கோவில்களின் பிறப்பிடமாக திகழ்கிறது.

முக்கிய இடங்கள் - தஞ்சை பெரிய கோவில், திருநள்ளார் கோவில், தஞ்சாவூர் அரச அரண்மனை மற்றும் கலைக்கூடம்.

10. திருநெல்வேலி

தாமிரபரணி நதி ஓடும் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவிற்கு பயங்கர பேமஸ். மலைத்தொடர்கள், ஆறுகள், கடல் கடற்கரைகள் மற்றும் காடுகள் என்று இயற்கை வளங்கள் அதிகம் இருக்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.

முக்கிய இடங்கள் - குற்றாலம், பாபநாசம், நெல்லையப்பர் கோவில், முண்டந்துறை புலிகள் காப்பகம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்