Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வேளாண் பட்டதாரி இளைஞர்கள் தொழில் தொடங்க கடனுதவி.. | Loan Assistance for Agriculture Graduates

Nandhinipriya Ganeshan Updated:
வேளாண் பட்டதாரி இளைஞர்கள் தொழில் தொடங்க கடனுதவி.. | Loan Assistance for Agriculture GraduatesRepresentative Image.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அப்போது, 2023 - 2024 நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு தலைமையில் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்தார். திமுக அரசு பொறுப்பேற்றது முதல் வேளாண் துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட் தாக்கலில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடப்பட்டு வரும் நிலையில், வேளாண் பட்டதாரிகளுக்கு ஒரு சூப்பரான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேளாண் பட்டதாரி இளைஞர்கள் தொழில் தொடங்க கடனுதவி.. | Loan Assistance for Agriculture GraduatesRepresentative Image

பட்டதாரிகளுக்கு எவ்வளவு மானியம்..

அதாவது, வேளான் சார்ந்த தொழில் தொடங்கும் 200 வேளாண் பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ. 2 லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ரூ. 4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இது விவசாயத் துறையை மேம்படுத்துவதோடு, வளர்ச்சியினையும் மேம்படுத்தும் என்று குறிப்பிட்டார். 

2021 - 22ம் ஆண்டில் 185 வேளாண் பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டு தலா 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டதாகவும், வேளாண் பட்டதாரிகள் மூலம் அக்ரி கிளினிக்குகள் ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் வேளாண் சார்ந்த தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளதகாவும் தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்