Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Get Glowing Skin Naturally in Tamil: கோடைக் காலத்தில் உங்க முகத்தை ஜொலிப்பாக வைச்சிக்க உதவும் ஃபேஸ் பேக்..!!

Gowthami Subramani August 19, 2022 & 15:30 [IST]
How to Get Glowing Skin Naturally in Tamil: கோடைக் காலத்தில் உங்க முகத்தை ஜொலிப்பாக வைச்சிக்க உதவும் ஃபேஸ் பேக்..!!Representative Image.

Tips for Clear Skin in Tamil: கோடைக்காலத்தில் சூரிய ஒளி அல்லது வறட்சி காரணமாக, நம் சருமம் தேய்வடைவதை உணரலாம். இதனைப் பராமரிக்க நாம் சருமத்திற்குக் கூடுதல் கவனிப்பை அளிக்க வேண்டும். சில பேர் பியூட்டி பார்லர் சென்று அதன் மூலம் பளபளப்பான சருமத்தைப் பெறலாம். ஆனால், பியூட்டி பார்லர் சென்று சருமத்தைப் பராமரிக்க இயலாதவர்களுக்கு அருமையான பேஸ்பேக்குகளை வீட்டிலேயே தயாரித்து சருமத்தைப் பராமரிக்க பயன்படுத்தலாம். 

வீட்டிலேயேத் தயாரிக்கப்படும் பேஸ் பேக்குகளை  உபயோகிப்பதன் மூலம், நம் சருமத்தை அழகாகவும், புத்துணர்ச்சியுடனும் பெறலாம். இந்த முறை கோடை காலத்திற்கு மிகவும் ஏற்ற முறையாக உள்ளது. இந்த ஃபேஸ்பேக்குகளை 15 நிமிடங்கள் முகத்தில் வைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். பின், குறிப்பிட்ட வித்தியாசத்தைக் காணும் வரை உலர வைக்கவும்.

புதினா ஃபேஸ்பேக்

நாம் உண்ணும் உணவில் உள்ள வைட்டமின் சத்துக்களால், அனைத்து வகையான பயன்களையும் பெறலாம். அந்த வகையில் புதினா வைட்டமின் ஏ சத்து நிறைந்தது. இதன் மூலம், சருமத்தில் உள்ள எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தலாம். அதே போல மஞ்சளும் ஆன்டி பயாட்டிக் வகையான உணவும் பொருள் ஆகும். மஞ்சள் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. முதலில் சில புதினா இலைகளை மசித்து அதனுடன் ஒரு சிட்டிகை அளவிற்கு மஞ்சள் தூள் கலக்கவும். சிறிது வெதுவெதுப்பான நீரை சேர்த்து பேஸ்ட்டாக செய்யவும். இந்த பேக்-ஐ முகப்பருவால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வைப்பது ஏற்றது.

எலுமிச்சை ஃபேஸ்பேக்

எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி நிறைந்து காணப்படும். இது முகப்பருவால் ஏற்படக்கூடிய வடுக்கள் அல்லது புள்ளிகளை இலகுவாக்கும். இதனுடன் தேன் சேர்ப்பதன் மூலம் சருமம் ஒளிர்வதைக் காணலாம். அதே சமயத்தில் Moisturizing, முகப்பரு உள்ள சருமத்திற்கு நன்றாக வேலை செய்கிறது. ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்துக் கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். எண்ணெய் பசை சருமம் (oil skin remove tips in tamil) உள்ளவர்களுக்கு இது சரியானது.

வெள்ளரிக்காய் ஃபேஸ்பேக்

இயற்கையாக நம் உடலைப் பராமரிக்கும் வகையில் வெள்ளரிக்காயும் ஒன்று. முகத்தில் துளைகள் இருப்பதைக் குறைக்கிறது. சருமத்தைக் குளிர்வித்து ஈரப்பதமாக்குதலில் முக்கிய பங்காற்றுகிறது. சர்க்கரை ஒரு சிறந்த எக்ஸ்ஃபோலியேட்டரை உருவாக்குகிறது. இதை முழுவதும் தேய்த்தால், சருமத்தில் உள்ள இறந்த திசுக்கள் மற்றும் அசுத்தங்களை அகற்றலாம். எனவே, பிசைந்த வெள்ளரிக்காயில் சிறிது சர்க்கரை சேர்த்து, அதனை ஒரு மணி நேரம் குளிரூட்டவும். பின், அதனை ஆறவைத்து முகத்தில் தடவவும். இதன் மூலம் நாம் இயற்கையான முகப் பொலிவைப் (face white skin tips in tamil) பெறலாம்.

ஸ்ட்ராபெரி மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்

ஸ்ட்ராபெரி பழத்தில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இதனைப் பயன்படுத்துவதால், சருமத்தில் எண்ணெய் சுரப்பதைத் தவிர்க்கலாம். இவை, தழும்புகள், கறைகள் போன்றவற்றை நீக்குவதுடன் முகத்தை ஒளிரச் செய்ய உதவு கிறது. சில ஸ்ட்ராபெரிகளை மசித்து அத்துடன் தயிர், தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு போன்றவற்றின் கலவையைச் சேர்க்கவும். இதனை பேக் போல தயாரித்து, ஃபேஸ்க்கு அப்ளை செய்யவும். இந்த ஃபேஸ்பேக் மந்தமான அல்லது எண்ணெய் சருமத்திற்கு ஏற்றதாக அமையும்.

தயிர் மற்றும் உளுந்து மாவு பேக்

உளுந்து மாவில் துத்தநாகம் உள்ளது. இது பெரும்பாலும், முகப்பருவால் நம் முகத்தில் உள்ள பாக்டீரியா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தலாம். இது அதிகப்படியான எண்ணெய் சுரப்பை எதிர்த்துப் போராடுபவையாக இருக்கும். மேலும், சருமத்தில் ஏற்படும் எரிச்சலைத் தணிக்க வல்லது. தயிர் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. மேலும், இது முகப்பருவை எதிர்த்துப் போராடுகிறது. மேலும் சுருக்கங்கள், கறைகள் மற்றும் கருவளையங்களைக் குறைப்பதற்குக் குறைக்கிறது. இந்த இரண்டு பொருள்களைக் கலந்து நம் முகத்தில் தடவுவதால், முகம் பொலிவுடன் இருக்கும். மேலும், பழுப்பு நிறத்தைப் போக்க, இந்த பேக்கை நம் உடலிலும் பயன்படுத்தலாம்.

முட்டை மாஸ்க்

முட்டையின் வெள்ளைக்கருவில் அதிகமாக வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளது. இது சருமத்தில் உள்ள கறைகளை உலர்த்துவதோடு எண்ணெய் பசை சருமத்தை ஒளிரச் செய்கிறது. எலுமிச்சைச் சாற்றில் ஆன்டிசெப்டிக் பண்புகள் உள்ளன. இது சருமத்தின் நிறத்தை ஒளிரச் செய்து pH-ஐ சமநிலைக்கு மீட்டெடுக்கும். ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறுடன் ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து அந்த ஃபேஸ்பேக்கை முகத்தில் தடவவும்.

தக்காளி ஃபேஸ் பேக்

சருமத்திற்கு பலன் தருவதில் தக்காளி முக்கிய பங்காற்றுகிறது. அதன் படி, சருமத்தை ஒளிரச் செய்தல், பரு மற்றும் கரும்புள்ளிகளைக் குறைத்தல் போன்றவற்றிற்கு தக்காளி உதவுகிறது. மேலும், தக்காளி கூழ் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் ஆகும். இது இறந்த செல்களை அகற்றி துளைகளை இறுக்கமாக்க உதவுகிறது. தேன் அத்திவாசிய ஊட்டச்சத்துக்களையும், ஆக்ஸிஜனேற்றங்களையும் வழங்குகிறது. தக்காலி கூழுடன் ஒரு துளி தேனைக் கலந்து முகத்தில் தடவவும். இந்த ஃபேஸ் பேக் நம் சருமத்தை பிரகாசிக்க உதவுகிறது.

வாழைப்பழம் ஃபேஸ் பேக்

வாழைப்பழம் அதிக அளவிலான வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது சருமத்திற்கு மிகவும் நல்லது. வாழைப்பழத்தை மசித்து, அதனுடன் சிறிது Sour Cream சேர்க்கவும். இந்த பொருள்களைக் கலந்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்க்கவும். இந்த பேக்கை முகத்தில் தடவி, அதனைக் காய விடவும். வறண்ட சருமமாக இருப்பின், இந்த பேக்கைப் பயன்படுத்துவதால், சிறிது ஈரப்பதத்தை உண்டாக்கலாம்.

சந்தனம் ஃபேஸ் பேக்

ரோஸ்வாட்டர் அழற்ஜி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. இது எரிச்சல், அரிப்பு போன்றவற்றை நீக்க உதவுகிறது. மேலும், முகப்பரு சிகிச்சைக்கு சந்தனம் நன்மை பயக்கும். ரோஸ்வாட்டர் மற்றும் சந்தனப் பொடி இரண்டையும் கலந்து முகத்தில் தடவினால் சருமம் மென்மையாவதை உணரலாம்.

பால் ஃபேஸ் பேக்

பால் பவுடரில் அதிகமாக லாக்டிக் அமிலம் உள்ளது. இது சருமத்தை ஒளிரச் செய்து மென்மையாக்க உதவுகிறது. மேலும், இது ஒரு சிறந்த சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது. சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. தேன் சருமத்தை மென்மையாக்க (skin care tips for women in tamil) உதவும். இதுவும் ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்ள உதவும். பால் பவுடர் மற்றும் தேன் கலந்து முகத்தில் ஃபேஸ்பேக்காக உபயோகிக்கலாம்.

Tags: Tips for Clear Skin in Tamil, oil skin remove tips in tamil, face white skin tips in tamil,skin care tips for women in tamil, homemade face pack for glowing skin, homemade face pack for glowing skin for oily skin, how to get glowing skin naturally in tamil, homemade face pack for summer season


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்