Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Breast Feeding Week 2022: தாய்ப்பால் எனும் வரப்பிரசாதம்… மருத்துவ ரீதியாக தாய்ப்பாலின் மகத்துவம்…!!

Nandhinipriya Ganeshan August 01, 2022 & 13:00 [IST]
Breast Feeding Week 2022: தாய்ப்பால் எனும் வரப்பிரசாதம்… மருத்துவ ரீதியாக தாய்ப்பாலின் மகத்துவம்…!!Representative Image.

Importance of Breastfeeding in Tamil: இந்த சமுதாயத்தில் அனைவருக்கும் தாய்ப்பாலை பற்றிய அவசியத்தை எடுத்துரைப்பது நம் முக்கியமான கடமைகளுள் ஒன்று. அதன் ஒரு பகுதியாகவே ஆகஸ்ட் 1 முதல் 7 ஆம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டும் சரியான முறை இதுதான்... அனைத்து அம்மாக்களும் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டும்..

குழந்தை கருவறைக்குள் எப்படி பாதுகாப்பாக ஆரோக்கியமாக இருக்கிறதோ அதேபோல் பிறந்த பின்பும் இரண்டு மடங்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். அந்த வகையில் தாய்ப்பால் முதல் இடம். ஆனாலும், சில தாய்மார்கள் தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறைந்துவிடும் என்று நினைத்து தாய்ப்பால் கொடுக்காமல் அல்லது குறைந்த காலத்திலேயே தாய்ப்பாலூட்டுவதை நிறுத்தி விடுகின்றனர். அப்படி நினைப்பவர்களுக்கே இந்த பதிவு. மருத்துவ ரீதியாக தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து பார்க்கலாம்.

குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகள்:

தாய்ப்பால் என்பது பச்சிளம் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முதல் இயற்கையான நோய் தடுப்பு மருந்து.

எந்த வித கலப்படமும் இல்லாத இயற்கை உணவு தாய்ப்பால்; குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்கு கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

6 மாதங்கள் முதல் 2 வயது வரை தாய்ப்பாலுடன் இணை உணவுகளை கொடுக்கலாம். தாய்ப்பால் குடிப்பதால் குழந்தைக்கு செரிமான பிரச்சனைகள் இருக்காது.

தாய்ப்பால் சுரக்க பாட்டி வைத்தியம்

தாய்ப்பாலில் சோடியம் குறைவாக இருப்பதால், குழந்தையின் சிறுநீரகத்துக்கு மிகவும் நல்லது.

தாய்ப்பாலில் நிறைந்துள்ள தண்ணீர், வைட்டமின்கள் ஆகியவற்றால் குழந்தைகளுக்கு அலர்ஜி, ஆஸ்துமா, நிமோனியா, மூளைக் காய்ச்சல் ஆகியவற்றையும் தடுக்க கூடியது.

அதுமட்டுமல்லாமல், குழந்தை பருவப் புற்றுநோய், உடற்பருமன், குழந்தைப் பருவ நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்த நோய்களிலிருந்தும் குழந்தையை பாதுகாக்குகிறது.

தாய்க்கு கிடைக்கும் நன்மைகள்:

குழந்தைக்கு தாய்ப்பால் எவ்வளவு முக்கியமோ அதேபோல் தாய்க்கும் தாய்ப்பால் தருவது மிகவும் முக்கியமானது.

ஒரு தாய் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் பேறுகாலத்திற்கு பின் தாய்க்கும் ஏற்படும் இரத்த சோகை மற்றும் இரத்த போக்கு குறைந்து காணப்படும்.

தாய்ப்பால் தருவதன் மூலம் உடலில் கலோரிகள் எரிக்கப்படும். இதனால், தாயின் உடல் படிப்படியாக பழைய நிலைக்கு திரும்பிவிடும்.

தாய்ப்பால் கொடுப்பதால் மார்பக புற்றுநோயிலிருந்தும் தப்பிக்கலாம்.  

Tags:

Baby care tips for new moms in tamil | breast feeding week 2022 | breast feeding theme 2022 | Breast feeding benefits in tamil | Benefits of breast feeding | Breast feeding benefits for baby in tamil | Breast feeding benefits for mother in tamil | Importance of breastfeeding in tamil | Psychological benefits of breastfeeding in tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்