Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Christmas Special : முட்டை, மைதா இல்லாம ஈஸியான கேக் ரெஸிபி… அசத்தலான சுவையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டிற்கான கேக் ரெடி…! | cake recipe without egg and maida

Gowthami Subramani Updated:
Christmas Special : முட்டை, மைதா இல்லாம ஈஸியான கேக் ரெஸிபி… அசத்தலான சுவையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டிற்கான கேக் ரெடி…! | cake recipe without egg and maidaRepresentative Image.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைக் கொண்டாடும் போது, நம் நினைவிற்கு முதலில் வருவது கேக். பண்டிகைக் காலத்தில் கேக் முதல் அனைத்து வகையான இனிப்புப் பண்டங்களையும் நம் வீட்டிலேயே செய்து, பண்டிகையைக் கொண்டாடலாம். கேக் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக் கூடிய ஒன்றாக அமைவதாகும். பண்டிகை நாள்களில் பெரும்பாலானோர் வீடுகளிலேயே கேக் தயாரிப்பர். அதன் படி பொதுவாகவே பேக்கரி பொருளான கேக் செய்வதற்கு, மைதா அல்லது வேறு சில மாவுகள், முட்டைகள் உள்ளிட்டவை தான் அதிகம் சேர்த்து தயாரிக்கப்படும்.

Christmas Special : முட்டை, மைதா இல்லாம ஈஸியான கேக் ரெஸிபி… அசத்தலான சுவையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டிற்கான கேக் ரெடி…! | cake recipe without egg and maidaRepresentative Image

கேடு தரும் மைதா, எதிர்க்கும் முட்டை

மைதா உடல் நலத்திற்குப் பெருமளவில் கேடு தரக் கூடிய ஒன்றாகும். இதன் சுவையை விரும்பி பெரும்பாலானோர் மைதா கலந்த உணவையே அதிகமாக உண்ணுகின்றனர். அது மட்டுமல்லாமல், முட்டையானது சைவ பிரியர்களுக்கு ஆகாத ஒன்று. எனவே, கேக்கிற்கு மைதா மற்றும் முட்டை என்பது அத்தியாவசிய ஒன்றா என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம். அந்த வகையில், கேக் தயாரிப்பதற்கு மைதாவிற்கு பதில் கடலை மாவைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் ருசியுடன் கூடிய ஆரோக்கியமாக கிடைக்கும் கேக் ஆனது, உடலில் கொழுப்பின் அளவைக் குறைப்பதுடன், மலச்சிக்கல் போக்கவும் உதவுகிறது. மைதாவிற்கு நல்ல மாற்றாக அமைவது கடலை மாவு என்றே கூறலாம். சரி, இந்தப் பண்டிகைக்கு எப்படி மைதா, முட்டை இல்லாமல் கேக் தயாரிக்கலாம் என்பதைப் பற்றி காண்போம்.

Christmas Special : முட்டை, மைதா இல்லாம ஈஸியான கேக் ரெஸிபி… அசத்தலான சுவையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டிற்கான கேக் ரெடி…! | cake recipe without egg and maidaRepresentative Image

கடலை மாவு கப்கேக் செய்ய தேவையான பொருள்கள்

☛ கடலை மாவு – 100 கி

☛ வெண்ணெய் – அரை கப் அல்லது 80 கி

☛ தயிர் – 1 கப் அல்லது 250 மிலி

☛ பேக்கிங் பவுடர் – 1 ¼ தேக்கரண்டி

☛ பேக்கிங் சோடா – 1 டீஸ்பூன்

☛ ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை அளவு

☛ சர்க்கரை (பொடியாக்கப்பட்டது) – 3/4 கப் அல்லது 170 கிராம்

☛ வெண்ணிலா எசென்ஸ் – 1 டீஸ்பூன்

Christmas Special : முட்டை, மைதா இல்லாம ஈஸியான கேக் ரெஸிபி… அசத்தலான சுவையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டிற்கான கேக் ரெடி…! | cake recipe without egg and maidaRepresentative Image

கடலை மாவு கப்கேக் செய்யும் முறை

✤ கடலை மாவு கப்கேக் செய்ய மேலே கூறப்பட்ட பொருள்களை எடுத்து அதை நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும்.

✤ பின், அந்த மிக்ஸிங்கை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொண்டு அதை ஓவனில் வைத்து கேக் தயாரிக்கலாம்.

✤ இந்த கடலை மாவில் சாக்கலேட் கேக் செய்ய விரும்பினால், மேலே கூறப்பட்ட பொருள்களுடன் சாக்லேட்டைச் சேர்த்துக் கலக்கி அதன் பின், ஓவனில் வைத்து கேக் தயார் செய்யலாம்.

✤ இவ்வாறு தயார் செய்யப்பட்ட கேக்கிற்கு மேல், சாக்கலேட் சிரப், ஜெர்ரி பழம் போன்றவற்றை சேர்ப்பதன் மூலம், அதன் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும்.

மேலே கூறப்பட்ட முறையில் எளிதாக, உங்களுக்கு விருப்பமான கேக்குகளை வீட்டிலேயே தயார் செய்யலாம். இந்த வகையான, கடலை மாவில் செய்யப்படக் கூடிய கேக் ஆனது, ஆரோக்கியமாகவும், உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும் அமையும். இது போல கேக் ரெசிப்பியை கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைக்கு வீட்டிலேயே தயார் செய்யலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்