Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to: சோலார் மின்வேலி அமைக்க 2 லட்சம் மானியம் பெறுவது எப்படி? | How to Get Solar Fencing Subsidy in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
How to: சோலார் மின்வேலி அமைக்க 2 லட்சம் மானியம் பெறுவது எப்படி? | How to Get Solar Fencing Subsidy in TamilRepresentative Image.

விவசாயிகள் பயிரிடும் பயிர்களை பூச்சிகள் மற்றும் வனவிலங்குகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க பெரிதும் போராட வேண்டியிருக்கிறது. குறிப்பாக, காட்டெருமைகள், யானைகள், மயில்கள், குரங்குகள் போன்றவை பயிர்களை அதிகளவு சேதப்படுத்தி விவசாயிகளுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திவிடுகின்றன. இதற்காக, பலரும் மின்சார வேலி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஆனால், சில சமயங்களில் மனிதர்களும் எதிர்பாராத விதமாக வேலியை தொடும் போது உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனால், மின்சார வேலி அமைப்பது அவ்வளவாக பாதுகாப்பு கிடையாது. 

How to: சோலார் மின்வேலி அமைக்க 2 லட்சம் மானியம் பெறுவது எப்படி? | How to Get Solar Fencing Subsidy in TamilRepresentative Image

இருப்பினும், சூரிய சக்தியாக இயங்கும் சுற்றுவட்டப் பாதுகாப்பு மின்வேலி மின்சார வேலிகளை காட்டிலும் சற்று பாதுகாப்பானது. ஏனென்றால், விலங்கோ மனிதனோ வேலியை தொட நேரிட்டால் அதற்கு லேசான அதிர்வு மட்டுமே ஏற்படும். ஆனால், உயிரிழப்பு ஏற்படும் அளவிற்கு மின்சாரம் தாக்கப்படாது. இதன் மூலம் விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதம் ஏற்படுவதை தவிர்க்க முடியும். இதனால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். தமிழ்நாட்டில் வேளாண் விலை நிலங்களுக்கு சூரிய சக்தியாலான மின்வேலிகள் அமைப்பதற்காகவே மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

How to: சோலார் மின்வேலி அமைக்க 2 லட்சம் மானியம் பெறுவது எப்படி? | How to Get Solar Fencing Subsidy in TamilRepresentative Image

மானியம் எவ்வளவு?

பயிர்களை விலங்குகளின் தாக்குதலில் இருந்து காக்க விவசாயிகள் சூரிய சக்தியில் இயங்கும் மின்வேலிகள் அமைக்க விரும்பினால், அவர்களுக்கு தேசிய வேளான் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தமிழக அரசு 50% மானியம் வழங்குகிறது. எனவே, விவசாயிகள் தங்களது தேவைக்கு ஏற்ப 5, 7, அல்லது 10 வரித்தட்டுகள் கொண்ட வேலிகளை அமைத்துக் கொள்ளலாம். இருப்பினும், வரித்தட்டுகளுக்கு ஏற்ப மானிய தொகையானது மாறுபடும். அதாவது, 5 வரிசைக்கு (மீட்டருக்கு ரூ.250), 7 வரிசைக்கு (மீட்டருக்கு ரூ.350), 10 வரிசைக்கு (மீட்டருகு ரூ.450) வழங்கப்படுகிறது. சோலார் மின்வேலி அமைக்க 50% மானியமாக அதிகபட்சம் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது. 

இந்த மானியத்தை பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் மாவட்டத்தில் உள்ள வேளான் பொறியியல் துறையை அணுக வேண்டும். 

How to: சோலார் மின்வேலி அமைக்க 2 லட்சம் மானியம் பெறுவது எப்படி? | How to Get Solar Fencing Subsidy in TamilRepresentative Image

தேவைப்படும் ஆவணங்கள்:

  • ஆதார் கார்ட் நகல்
  • 2 போட்டோ (பாஸ்போர்ட் சைஸ்)
  • நிலத்தின் சான்றிதழ்
  • சிறு குறு விவசாயி சான்றிதழ் போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.

சோலார் மின்வேலி எவ்வாறு இயங்குகிறது?

முதலில், சூரியத்தகடுகள் சூரிய ஒளியை உள்வாங்கிக் கொண்டு, அதை மின்சாரமாக மாற்றி பேட்டரிக்கு அனுப்பி மின்சாரத்தை சேமித்து வைத்துக் கொள்ளும். இந்த சக்தியை பேட்டரி, எனர்ஜைசருக்கு அனுப்பி, குறைந்த வோல்டேஜ் மின்சாரமாக மாற்றி மின்வேலிக்கு அனுப்புகிறது. இதனால், விலங்குகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே, பயமில்லாமல் இந்த சோலார் மின்வேலியை பயன்படுத்தலாம். 


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்