Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கர்ப்பம் தரிக்க தம்பதிகள் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான விஷயங்கள்...

Nandhinipriya Ganeshan October 05, 2022 & 18:55 [IST]
கர்ப்பம் தரிக்க தம்பதிகள் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான விஷயங்கள்...Representative Image.

கர்ப்பம் தரித்தல் என்பது இன்று பலருடைய மிகப் பெரிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. ஒரு சில தம்பதிகள் முதல் முயற்சியின் போதே கர்ப்பம் தரித்துவிடுவார்கள். சிலருக்கு மாதங்கள் ஆகலாம்.. ஏன் இன்னும் சிலருக்கு வருடங்கள் கூட ஆகலாம். ஆனால், அதற்காக துவண்டு போய் உடனே மருத்துவரிடம் ஓடாமல் ஒரு சில முயற்சிகளை தம்பதிகளே செய்து பார்ப்பது நல்லது. பொதுவாக கரு நிற உடலுறவு வைத்துக்கொண்டாலே போதுமானது என்றாலும் கூட அதை எப்போது செய்ய வேண்டும்..? எத்தனை முறை செய்ய வேண்டும்..? எந்த பொசிஷனில் செய்ய வேண்டும்..? என்று பல அறிவியல் ரீதியான கருத்துக்கள் இருக்கின்றன. அவ்வாறு முயற்சிப்பதன் மூலம் பெண்கள் விரைவில் கர்ப்பம் தரிக்க வாய்ப்புகள் உண்டு. அவை என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

கர்ப்பம் தரிக்க தம்பதிகள் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான விஷயங்கள்...Representative Image

குழந்தை வேண்டும் என்று முடிவெடுத்து முயற்சியில் ஈடுபடும் போது தம்பதிகள் சராசரியாக 78 முறை உடலுறவு கொள்கிறார்கள். எனவே, 78 நாட்களா? என்று அதிர்ச்சியடைய வேண்டும். ஒரு சராசரி தம்பதிகள் ஒரு மாதத்திற்கு 13 முறை உடலுறவு கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப நேரம், காலத்தை முடிவு செய்துக் கொள்ளுங்கள்.

கரு தரிப்பதற்கு சில செக்ஸ் பொசிஷனும் முக்கியம் என்கின்றனர் நிபுணர்கள். அப்படி மிகவும் பிரபலமான நிலைகளில் ஒன்று டாகி ஸ்டைல் (doggy style). அதேபோல், விரைவில் கரு தரிக்க வேண்டும் என்பதற்காக ஒரே நாளில் பல முறை உடலுறவு வைத்துக் கொள்வதும் தவறு.

கர்ப்பம் தரிக்க தம்பதிகள் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான விஷயங்கள்...Representative Image

ஏனென்றால், அடிக்கடி உடலுறவு வைத்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமான விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைத்துவிடும். எனவே, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை உடலுறவு கொள்வது சிறந்தது. இவ்வாறு முயற்சித்த தம்பதிகளுக்கும் கருத்தரித்தல் விகிதம் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். 

அடுத்தது மிகவும் முக்கியமான ஒரு விஷயம். பெண்களை பொருத்த வரை அவர்களுக்கு கரு நிற்பதற்கு எல்லா நாட்களும் சாதமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. எனவே, அவர்களுடைய மாதவிடாய், கருப்பை, அண்டவிடுப்பு ஆகியவற்றை மனதில் வைத்துக்கொண்டே முயற்சியில் ஈடுபடவேண்டும்.

கர்ப்பம் தரிக்க தம்பதிகள் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான விஷயங்கள்...Representative Image

பொதுவாக பெண்களின் கருப்பை அண்டவிடுப்பிற்கு முன் ஐந்து நாட்கள் மற்றும் அண்டவிடுப்பு நாட்களில் சாதகமாக இருக்கும். அண்டவிடுப்பு நாள் என்பது மாதவிடாய் சுழற்சி முடிந்து 14 வது நாள் இது நிகழும். அதாவது மாதவிடாய் வருவதற்கு நான்கு நாட்களுக்கு முன்போ அல்லது நாட்களுக்குள்ளோ நிகழும். இந்த சமயத்தில் முட்டை வெளியேறி, கருப்பை குழாய்க்கு சென்று தேங்கியிருக்கும். 

இந்த நேரத்த்டில் விந்தணுக்கள் பயணித்து உள்ளே செல்லும்போது தேங்கியிருக்கும் முட்டையால் அவை ஈர்ட்டப்படலாம். அப்போது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. அதாவது உங்களுக்கு 28 நாட்கள் சுழற்சி இருந்தால் 14 வது நாளில் நீங்கள் கருத்தரிப்பீர்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்