Wed ,May 15, 2024

சென்செக்ஸ் 72,987.03
-117.58sensex(-0.16%)
நிஃப்டி22,200.55
-17.30sensex(-0.08%)
USD
81.57

வங்கி தகவல்கள்

கிரெடிட் கார்டு பேலன்ஸை ட்ரான்ஸ்ஃபர் செய்ய எளிமையான வழிமுறை..! | How to do Credit Card Balance Transfer

Priyanka Hochumin October 14, 2023

மாத சம்பளத்தை வைத்து செலவு செய்யும் காலம் மாறி, தற்போது கிரெடிட் கார்டு பயன்படுத்தி நமக்கு தேவையானதை வாங்கிக்கொள்ளலாம். இதனால் மக்கள் அளவிற்கு மீறி செலவு செய்து கூடுதல் பணம் சிக்கலுக்கு ஆளாகிறார்கள். அப்படியாக கிரெடிட் கார்டு இருப்பு பரிமாற்றம் (Credit Card Balance Transfer) மூலம் கடனை நிர்வகிப்பதற்கும் வட்டியை சேமிப்பதற்கும் சிறந்த வழியாக கருதப்படுகிறது. இதனைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

ஆன்லைன் மூலம் PF பணத்தை எடுப்பது எப்படி? | How to Withdraw Money from PF Account Online

Nandhinipriya Ganeshan August 23, 2023

1952 ஆம் ஆண்டு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிச் சட்டத்தின்படி இந்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்ட ஒரு ஓய்வூதிய திட்டமே 'தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம்'. இந்த திட்டம் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வுகாலத்திற்கு பிறகுய் பாதுகாப்பை வழங்குவதற்கும், ஒருவேளை துரதிஷ்டவசமாக ஊழியர்கள் இறந்தாலும், அவரது குடும்பத்தினருக்கும் உதவும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாத சம்பளம் வாங்கும் அனைத்து ஊழியர்களுக்கு இபிஎஃப் கணக்கு என்பது கட்டாயம் இருக்கும். PF என்றால் என்ன? தொழிலாளர்கள் அவர்கள் பணியாற்றும் காலத்தின்போது, மாதந்தோறும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு, அவரது வைப்பு நிதிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இதேபோல், குறிப்பிட்ட தொகையை தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனம் சார்பில் செலுத்தப்படுகிறது. தொழிலாளர் வைப்பு நிதியில் உள்ள பணம் அரசு சார்பில் நிர்வகிக்கப்படுகிறது. தொழிலாளர் மற்றும் நிறுவனம் செலுத்தும் தொகைக்கு அரசு சார்பில் குறிப்பிட்ட அளவு வட்டியாக பணம் செலுத்தப்படும். பின்னர், அந்த சேமிக்கப்பட்ட சேமிப்புத் தொகை வட்டியுடன் ஊழியருக்கு அளிக்கப்படுகின்றன. EPF திட்டம் தற்போது 8.15 சதவீத வருடாந்திர வட்டி விகிதத்தை வழங்குகிறது. மேலும், இந்த திட்டத்தின் மூலம் சேமிக்கப்படும் தொகையை அவசர தேவைக்கு பயன்படுத்தும் ஆப்சனும் உண்டு. குறிப்பாக திருமணம், கல்வி, வீடு அல்லது பிளாட் வாங்க, வீடு புதுப்பிக்க, மருத்துவ செலவு, ஹோம் லோன் கடன், ஏதேனும் பேரழிவு காலத்தில் கடன், ஓய்வுக்கு முன்பாக பணம் பெறுதல் என பல காரணங்களுக்காக பணத்தை எடுத்துக்கொள்ளலாம். சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் EPF பணத்தினை ஆன்லைனில் எளிதாக விண்ணப்பித்து பெற முடியும். முன்பெல்லாம் ஒரு ஊழியர்கள் பிஎஃப் பணத்தினை எடுக்க வேண்டும் என்றால், நிறுவனத்தின் கையொப்பம் அவசியம். ஆனால் இன்று அப்படியில்லை. நிறுவனத்தின் கையொப்பம் இல்லாமலேயே பணத்தினை எடுக்கும் வசதி உண்டு. ஆன்லைன் மூலம் உங்களது UAN நம்பரை பயன்படுத்தி பணம் எடுக்கலாம். ஆன்லைன் மூலம் PF பணத்தை எடுப்பது எப்படி? ➥ முதலில் https://unifiedportal-emp.epfindia.gov.in/epfo/ என்ற இணையத்தில் சென்று UAN நம்பரை கொடுத்து லாகின் செய்யவும். அதன் பிறகு க்ளைம் என்பதை கிளிக் செய்யவும். அதில் online services என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும். ➥ இது அடுத்த புதிய பக்கம் தொடங்கும். அதில் உங்களது தனிப்பட்ட விவரங்களை பதிவிடவும். அதன் பிறகு process for online claim என்பதை கிளிக் செய்யவும். ➥ அங்கு உங்கள் பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர், பான் எண், ஆதார் எண், நிறுவனத்தில் சேர்ந்த தேதி மற்றும் தொலைப்பேசி எண் போன்றவை இருக்கும். அவற்றை சரி பார்த்தபின் Online Claim Proceed என்பதை தேர்ந்தெடுத்து கீழ் தோன்றும் மெனுவில் PF ADVANCE (FORM 31) ஐ தேர்ந்தெடுக்கவும். ➥ அதன் பிறகு பணம் எதற்காக எடுக்க விரும்புகிறீர்கள் என்ற காரணத்தை உள்ளிடவும். பின்பு உங்களுக்கு தேவையான தொகை மற்றும் உங்கள் தற்போதைய முகவரியை நிரப்பவும். ➥ அதன் பிறகு Get Aadhaar OTP என்பதைக் கிளிக் செய்யவும். OTP ஐ உள்ளிட்டு Validate OTP and Submit Claim Form என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்களுக்கு உங்களது பிஎஃப் தொகை வழங்கும் செயல்முறை தொடங்கும்.

ஹாப்பி நியூஸ்! இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை நாள்.. சனி, ஞாயிறு விடுமுறை!

Nandhinipriya Ganeshan August 08, 2023

பல்வேறு வங்கி ஊழியர் சங்கங்களின் தொடர்ச்சியான கோரிக்கையைத் தொடர்ந்து, வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வங்கிக் கிளைகள், அலுவலகங்கள் செயல்படும் என்ற நடைமுறை விரைவில் வரவுள்ள நிலையில், இந்திய வங்கிகள் சங்கம் 5 நாட்கள் வேலை செய்யும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, சனி-ஞாயிறு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கும் வாய்ப்பு வலுப்பெற்றுள்ளது. தற்போது, ​​மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. முன்மொழிவுக்கு ஒப்புதல் கிடைத்த பிறகு, மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். மெட்ரோ நகரங்களில் உள்ள கார்ப்பரேட் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வசதிக்கேற்ப 5 நாட்கள் வேலை நாட்கள், 2 நாட்கள் விடுமுறை என்ற முறை ஊழியர்களுக்கு பொருந்தும். இந்த ஏற்பாட்டின் கீழ், 8 மணி நேரத்திற்கு பதிலாக, ஊழியர்கள் தினமும் சுமார் 9 மணி நேரம் பணியாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வங்கித் துறையிலும் இதே முறையை அமல்படுத்த வேண்டும் என்ற வங்கி அமைப்புகளின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் வலுப்பெற்றுள்ளன. ஒரு வாரத்தில் 5 வேலை நாட்களை அறிவிப்பது தொடர்பாக, ஜூலை 28 அன்று நடைபெற்ற இந்திய வங்கிகள் சங்கத்தின் (ஐபிஏ) கூட்டத்தில் இந்த முன்மொழிவு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இப்போது முன்மொழிவு நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்படும், அதன் பிறகு அமைச்சகம் இறுதி முடிவு எடுக்கும்.

வங்கியில் பணம் வைத்திருந்தால் ஆபத்து; பரவும் தகவலால் அலறும் மக்கள்!

Abhinesh A.R June 19, 2023

வங்கிக் கணக்கில் ரூ.30,000-க்கும் அதிகமான பணம் வைத்திருந்தால் கணக்கு முடக்கப்படும் என ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டதாக பகிரப்படும் செய்தி போலியானது என PIB கூறியுள்ளது.

வங்கி அல்லது தபால் அலுவலகம்..! ஃபிக்ஸ்டு டெபாசிட் செய்ய எது பெஸ்ட்.? | Post Office Fixed Deposit Vs Bank Fixed Deposit

Gowthami Subramani June 09, 2023

சேமிப்பு என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கிய அங்கமாக விளங்கும் ஒன்றாகும். அந்த வகையில், பங்குச் சந்தை, ஃபிக்ஸ்டு டெபாசிட் போன்ற பல்வேறு வகையான சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். அதிலும், பங்குச் சந்தையில் ஏற்ற, இறக்கங்கள் இருப்பதால், மக்கள் ஃபிக்ஸ்டு டெபாசிட் அதாவது நிலையான வைப்புத் தொகையில் அதிக ஈடுபாடு காட்டி வருகிண்றனர். ஆனால், இந்த ஃபிக்ஸ்டு டெபாசிட் செய்வதிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தபால் அலுவலகம் அல்லது வங்கி இவை இரண்டில் எவற்றில் ஃபிக்ஸ்டு டெபாசிட் வைப்பது சிறந்தது என்பது குழப்பமாக இருக்கும். இவற்றில், தபால் அலுவலகம் அல்லது வங்கி எது ஃபிக்ஸ்டு டெபாசிட் செய்வதற்கு சிறந்தது என்பதைக் காணலாம்.

ஃபிக்ஸ்டு டெபாசிட்க்கு அதிக வட்டி தரும் வங்கிகளின் பெயர்கள் இதோ..! | Banks Providing Highest Fd Rates 2023

Gowthami Subramani May 18, 2023

பெரும்பாலும் சேமிப்பு என்றாலே, நிலையான வைப்புக் கணக்கு பயன்படுத்துபவர்களே அதிகம். அதிலும், குறிப்பாக அதிக வட்டி தரக்கூடிய வங்கிகளிலேயே ஃபிக்ஸ்டு டெபாசிட் செய்ய நினைப்பார்கள். அந்த வகையில், இந்தப் பதிவில் ஃபிக்ஸ்டு டெபாசிட் வைத்திருப்பவர்களுக்கு 8.75%-வரை வட்டி தரக்கூடிய சில வங்கிகளைப் பற்றி இதில் காணலாம்.

குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் கொடுக்கும் வங்கிகள்.. | Best Home Loan Bank in India

Nandhinipriya Ganeshan April 27, 2023

சொந்த வீடு இருக்க வேண்டும் என்பது தான் அனைவருடைய கனவாகவும் இருக்கிறது. ஏனென்றால், சொந்த வீடு இருந்தால் மட்டும் இந்த சமுதாயத்தில் நமக்கு அந்தஸ்து கிடைக்கிறது என்பதோடு மட்டுமல்லாமல், திருமண வயதில் இருப்போருக்கு வாழ்க்கை துணையும் கிடைக்கிறது. மேலும், வாடகை வீட்டில் இருக்கும் போது வீட்டு வாடகை, தண்ணீர், கரண்ட் என்று தனி தனியாக பணம் செலுத்த வேண்டியது இருக்கும். இதுக்கே தனியா சம்பாதிக்க வேண்டும். இதற்காகவே நம்மில் பலரும் சொந்த வீடு கட்டிவிட வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் இப்போது இருக்கும் விலைவாசி ஏற்றத்தால் மனை வாங்கவே கடினமாக இருக்கிறது, இது தவிர கட்டுமான பொருட்கள், கூலி என்று நிறைய இருக்கிறது. அதனால் நாம் சேமித்து வைத்திருக்கும் பணத்தை வைத்து வீடு கட்ட நினைப்பது முடியாத காரியம். இதற்காகவே இருக்கிறது வீட்டுக் கடன் (Home Loan). இந்த காலக்கட்டத்தில் மிகவும் சுலபமாக நமக்கு வீட்டுக் கடன் கிடைக்கிறது. இந்தியாவில் உள்ள பல வங்கிகள் வீட்டுக்கடன்களை வழங்குகின்றன. ஆனால், அதிக கடன் வட்டி விகிதங்கள் காரணமாக பலருக்கும் லோன் வாங்குவது கடினமாக இருக்கிறது. இந்த சமயத்திலும் சில வங்கிகள் குறைவான வட்டியில் வீட்டு கடன் வழங்குகின்றன. அந்த வங்கிகளின் பெயர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

மே மாதம் இத்தனை நாட்கள் விடுமுறையா..? | Bank Leave Days in May Month 2023

Nandhinipriya Ganeshan April 25, 2023

இந்தியாவில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுபாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கி மாதம் தோறும் வங்கிகளுக்கான விடுமுறை நாட்களை அறிவித்து வருகிறது. அந்தவகையில், மே மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் வெளியாகியுள்ளது. அதில் மே மாதம் வங்கிகளுக்கு சனி, ஞாயிறு உட்பட மொத்தம் 12 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி விடுமுறை பட்டியல்: 01.05.2023 – மே தினம், மகாராஷ்டிரா தினம் 05.05.2023 – புத்த பூர்ணிமா டெல்லி, ஹரியானா, பஞ்சாப், அசாம், உத்ரகாண்ட், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட நகரங்களில் வங்கிகளுக்கு விடுமுறை 07.05.2023 – ஞாயிறு விடுமுறை 09.05.2023 – ரவீந்திரநாத் தாகூர் பிறந்தநாள் 13.5.2023 – 2வது சனிக்கிழமை விடுமுறை 14.05.2023 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை 16.05.2023 – சிக்கிம் தினம் 21.05.2023 – ஞாயிறு விடுமுறை 22.05.2023 – மகாராணா பிரதாப் ஜெயந்தி குஜராத், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான்,ஹரியானா ஆகிய மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை 24.05.2023 – காசி நஸ்ருல் இஸ்லாம் ஜெயந்தி – திரிபுரா பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை 27.05.2023 – 4 – வது சனிக்கிழமை விடுமுறை 28.05.2023 – ஞாயிறு விடுமுறை

குறைந்த வட்டியில் பெர்சனல் லோன் வாங்கணுமா.? அப்ப இந்த பேங்க் போங்க... | Low Interest Personal Loan Bank List

Gowthami Subramani April 17, 2023

நவீன காலத்தில், வங்கியில் கடன் வாங்குவது என்பது சாதாரணமாகி விட்டது. அதே போல, வங்கிகளும், நிதி நிறுவனங்களும் எல்லா வகையான கடன்களையும் வழங்கி வருகின்றன. அந்த வகையில், சாதாரண மக்களும் தங்களின் தேவைக்காக பர்சனல் லோனையே அணுகுகின்றனர். வீட்டுக் கடன், தொழில் கடன் உள்ளிட்டவைகளை விட, இந்த பெர்சனல் லோன் வாங்குவது என்பது எளிதான ஒன்று. ஏனெனில், பெர்சனல் லோன் பெற விரும்புபவர்கள், குறைந்த ஆவணங்களைச் சமர்ப்பித்தால் மட்டும் போதுமானது.

என்னது ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறையா? | Bank Holidays

Priyanka Hochumin March 28, 2023

மக்களே உஷார் அடுத்த மாதம் [ஏப்ரல்] சுமார் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை. எனவே, அடுத்த மாதத்திற்கு தேவையான பரிவர்த்தனைகள் போன்ற வேலைகளுக்கு தனியாக நேரத்தை செலவு செய்து முடித்துக்கொள்ளுங்கள். இது தவிர ஞாயிற்றுக்கிழமை மற்றும் இரண்டு சனிக்கிழமைகள் சேர்த்தால் மொத்தம் 15 நாட்கள் விடுமுறை வருகிறது. இதில் குறிப்பிட்ட நாட்கள் அந்தந்த மாநிலத்தின் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படும். எனவே, இதனை தெரிந்துக்கொண்டு உங்களை வேலைகளை பார்த்துக்கொள்ளுங்கள்.