Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tips to keep Vegetables Fresh Longer in Tamil: வாங்குன காசுக்கு காய்கறிகளை இப்படி பராமரித்தால் நீண்ட நாட்கள் பிரெஷ்ஷா இருக்கும்!

Priyanka Hochumin June 16, 2022 & 11:30 [IST]
Tips to keep Vegetables Fresh Longer in Tamil: வாங்குன காசுக்கு காய்கறிகளை இப்படி பராமரித்தால் நீண்ட நாட்கள் பிரெஷ்ஷா இருக்கும்!Representative Image.

Tips to keep Vegetables Fresh Longer in Tamil: விலை வாசி ஏறிக்கொண்டிருக்க, காய்கறி மற்றும் பழங்களுக்கான விலைகள் ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டிருக்கிட்டது. அப்படி இருக்கும் பொழுது நாம் வாங்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை எப்படி சேகரித்தால் நீண்ட நாட்கள் பிரெஷ்ஷாக இருக்கும் என்று இந்த பதிவில் பார்ப்போம்.

நம் தினமும் பயன்படுத்தும் முக்கிய பொருட்களுள் காய்கறி மற்றும் பழங்கள் மிகவும் முக்கியமான ஒன்று. ஏனெனில் அது நம்முடைய ஆரோக்கியம் மற்றும் உடல் நலத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. இதனால் காய்கறி பழத்தை பார்த்து பார்த்து வாங்கினால் மட்டும் போதாது, அதை நன்றாக பராமரிக்க வேண்டும். அப்பொழுது தான் நமக்கு கிடைக்க வேண்டிய ஆரோக்கியம் கிடைக்கும் மற்றும் ருசியாகவும் இருக்கும். இப்பொழுது எல்லா வீட்டிலையும் பிரிட்ஜ் இருப்பதால் மக்கள் சுகாதாரத்தை கண்டுகொள்ளாமல் பழங்களையும் காய்கறிகளையும் அப்படி அப்படியே வைத்து விடுகின்றனர். அது நம்முடைய ஆரோகியத்திற்கு எவ்ளோ தீங்கானது என்று இன்னும் தெரியவில்லை. வாருங்கள் காய்கறி மற்றும் பழங்களை எப்படி பராமரித்தால் நீண்ட நாட்கள் பிரெஷ்ஷாக இருக்கும் என்று காண்போம்.

வினிகர் பயன்படுத்தலாம்

விவசாயம் செய்து வரும் காய்கறிகளில் நீண்ட நாட்களுக்கு பிறகு நீங்கள் வாங்கினால் அதில் பூஞ்சை (அதாவது Fungus) உருவாகும் வாய்ப்புகள் உள்ளது. அதனை சுத்தம் செய்ய, மூன்று பங்கு தண்ணீரில் ஒரு பங்கு வினிகர் ஊற்றி பழம் மற்றும் அகிகாரிகளை நன்கு கழுவவும். பிறகு அதை வெயில் அல்லது துணியின் மீது வைத்து உலர வைக்க வேண்டும். இது ஒரே கல்லுல மூன்று மாங்கா, எப்படி என்றால் நீங்கள் இவ்வாறு செய்வதன் மூலம் காய்கறிகளின் மீள் உள்ள கிருமிகள் இறந்து விடும், அதனை விளையவைக்க பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகள் அகன்று விடும், பூஞ்சை படருவதை தடுக்கலாம்.

இது உங்களுக்கு பழக்கம் இல்லையென்றால், வினிகரில் முக்கிய பிறகு சுத்தமான தண்ணீரில் அந்த பலன்களை அலசி அதனை துணியால் துடைத்தும் பராமரிக்கலாம்.

கீரையை இப்படி பராமரிகலாம்

காய்கறிகளை விட வேகமாக அழிகிப்போவது இந்த கீரை வகைகள். ஏனெனில் அவற்றை மண்ணில் இருந்து எடுத்து இரண்டு மூன்று நாட்களில் உபயோகப்படுத்தாமல் விட்டுவிட்டால், அவை காற்று பட பட அழிகிப்போய்விடும். ஆனால் புதினா, கொத்தமல்லி, கீரை வகைகளின் தண்டு பகுதியை தண்ணீரில் முக்கி வையுங்கள். அப்புறம் பாருங்க ஆச்சர்யத்தை, அது வாடியே போகாது. உங்களுக்கு பாதுகாப்பாகவும் வைக்கணும், பாக்குறதுக்கு அழகாவும் இருக்கணும்னா, தாராளமா கண்ணாடி பாட்டில தண்ணீர் நிரப்பி அதில் கீரைகளை பராமரியுங்கள்.

ஒன்றாக வைக்காதீர்கள்

காய்கறிகள் நீண்ட நாட்களுக்கு பிறகு தான் பழுக்கும். ஆனால் பழங்கள் சீக்கிரம் பழுத்துவிடும். எனவே காய்கறிகளையும் பழங்களையும் ஒன்றாக வைக்காதீர்கள். பழங்களில் எத்திலீன் கேஸ் இருப்பதால் அவற்றை மற்றவர்களுடன் வைக்கும் பொழுது சீக்கிரம் கெட்டுப்போக வைக்கும். வாழைப்பழத்தில் எத்திலீன் கேஸ் அதிகமாக இருப்பதால் அதை மற்ற பழங்கள் அல்லது காய்கறிகளுடன் வைக்கும் பொழுது அவற்றை விரைவாக பழுக்க வைக்கும், கெட்டும் போய்விடும். இருப்பினும் இதில் ஒரு சில நல்ல விசியுங்கள் இருக்கிறது, என்னவென்றால் ஆப்பிளையும் உருளைக்கிழங்கையும் ஒன்றாக வைத்தால் உருளைக்கிழங்கு நீண்ட நாட்கள் பிரெஷ்ஷாக இருக்கும்.

வெப்பத்திற்கு நோ

காய்கறி மற்றும் பழங்களை வெப்பம் அதிகமாக இருக்கும் இடத்தில வைத்திருந்தால் சீக்கிரம் பழுக்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே, அவற்றை அடுப்படியில், சமையல் அறையில் வைப்பதை தடுக்கவும்.

பிரிட்ஜ் சுத்தமாக வைக்கவும்

நாம் பிரிட்ஜ் அதிகமாக பயன்படுத்துகிறோம். அவற்றில் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், மாவு என்று அனைத்தையும் அதில் வைக்கிறோம். அவற்றை எடுக்கும் பொழுது கீழே சிந்தினால், நாம் அவசர வேளையில் இருக்கும் பொழுது அதை சுத்தம் செய்ய முடியாது. அதை அப்படியே விட்டு விடுவோம். அது ஒருமாறி நீண்ட நாட்களாக துர்நாற்றம் வீசும். எனவே, மாதம் ஒரு முறையாவது உங்களின் பிரிட்ஜை சுத்தம் செய்யுங்கள்.

இருபின்னும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சிறு துண்டுகளாக வெட்டி, அதை காற்று போக முடியாத அளவுக்கு இறுக்கமாக கட்டி வைக்கவும். அல்லது ஏர் டைட் கண்டைனர்களில் வைக்கவும். இதன் மூலம் பழங்கள் மற்றும் காய்கறிகள் கெடாது.

Tips to keep Vegetables Fresh Longer in Tamil, how to keep veg fresh longer, how to keep cut vegrtables fresh longer, how to keep leafy vegetables fresh longer, ways to keep vegetables fresh longer, how to store fresh vegetables long term, how to keep greens fresh longer, 

உடனுக்குடன் செய்திகளை (Latest News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்