Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

garuda panchami 2022 tamil ஆயுள் நீட்டிக்கும் வழிபாடு - கருட புராண தண்டனையிலிருந்து தப்பிக்க இதோ வழி!

UDHAYAKUMAR August 02, 2022 & 12:30 [IST]
garuda panchami 2022 tamil  ஆயுள் நீட்டிக்கும் வழிபாடு - கருட புராண தண்டனையிலிருந்து தப்பிக்க இதோ வழி!Representative Image.

கருடரும் நாகரும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்.  நாகரையும் வணங்குதல் நலம், கருடரையும் வழிபடுதல் புண்ணியம். நம் ஆயுள் முழுக்க முன் ஜென்மங்களிலும் அடுத்தடுத்த ஜென்மங்களிலும் பல பாவங்களை நம்மை அறியாமலேயே செய்திருப்போம். ஆனால் அதுகுறித்து கொஞ்சமும் நாம் கவலை கொண்டிருக்க மாட்டோம். 

இந்த கருட பஞ்சமி நாளில் நீங்கள் கருட புராண தண்டனைகளிலிருந்து விடுபடலாம். அதற்கு நீங்கள் என்ன செய்யவேண்டும் எப்படி வழிபடவேண்டும் என்பது குறித்த தகவல்களை நாம் முதலில் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். 

பாம்பை கொண்டிருக்காத கடவுளர்களே இங்கு அரிது.  சிவபெருமானின் கழுத்தில் பாம்பு இருக்கிறது.  விநாயகர் தன் இடுப்பில் பாம்பை அணிந்திருக்கிறார். அம்பாளின் எல்லா அவதாரங்களும் பாம்பை கொண்டுள்ளன.  மகா விஷ்ணு பாம்பையே படுக்கையாக்கி படுத்துக்கொண்டே உலகை ஆண்டு கொண்டிருக்கிறார். 

நவக்கிரகங்களில் கூட இரண்டு கிரகங்கள் பாம்பு கிரகங்கள்தான்.  அவர்களைத் தான் வணங்கி நம் சுக துக்கங்களையும் மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறோம். 

ஜாதகங்களில்கூட சர்ப்ப தோஷம் காரணமாக திருமணத் தடை, குழந்தை பேறு உள்ளிட்ட பல நல்ல காரியங்கள் நடக்காமல் தடைபட்டுக் கொண்டிருக்கின்றன. நம் உலகத்துக்கு கீழே இருப்பது நாக உலகம்தான். பூமிக்குள் இருக்கும் நாக உலகத்தில் பால் விடுவதும் வழிபடுவதும் மிகச் சிறந்த பலனைத் தரும். 

இதேபோல்தான் கருட பஞ்சமி நாளில் கருடனை வழிபட்டால் நாம் செய்த பாவங்கள் நீங்கி தண்டனைகள் விலகும்.  நாக சதுர்த்திக்கு அடுத்த நாள்தான் கருட பஞ்சமி. அதாவது ஐந்தாவது நாள். வானில் பறக்கும் கருடனை வணங்கி ஆராதித்தால் நமக்கு பலன் கிட்டும். 

தெருவில் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது கருடன் பறப்பதை பார்த்தால்  உடனே செருப்பை காலிலிருந்து கழற்றி விட்டு கருடனைப் பார்த்து கருடா கருடா காப்பாத்து என கண்ணத்தில் போட சொல்கிறார்கள்.  கருடன் மகா விஷ்ணுவின் வாகனம்.  திருமாலின் சேவகன்.  கருடனின் பார்வை போதும் நம் பாவங்கள் தொலைந்தோடும். 

என்ன செய்வது?

உங்கள் ஊரில் விஷ்ணு தலங்கள் இருந்தால்  இன்றைய தினத்தில் மாலை 6 மணிக்கு மேல் சென்று வழிபடுங்கள். விஷ்ணு பெருமானுக்கு எதிரே கைக்கூப்பிய படி நிற்கும் கருடாழ்வார் சந்நிதி பொதுவாக அமைந்திருக்கும். அவரையும் வணங்கிவிட்டு வாருங்கள். 

ஆடி மாதத்தின் வளர்பிறை பஞ்சமி கருட பஞ்சமி என போற்றப்படுகிறது.  இந்த நாள்தான் கருடாழ்வாருக்கு உகந்த நாளாக போற்றப்படுகிறது. இன்று விஷ்ணு தளங்களில் விஷ்ணு மந்திரம் ஓதி வழிபடுதல் கூடுதல் சிறப்பு. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்