Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

ஏபிசி ஜுஸ் தயாரிப்பது எப்படி | How to prepare ABC juice at home?

Vaishnavi Subramani Updated:
ஏபிசி ஜுஸ்  தயாரிப்பது எப்படி | How to prepare ABC juice at home?Representative Image.

உடலுக்கு அதிக அளவில் வைட்டமின்கள் தேவைப்படுவதால் காலை வேலைகளில் இது போன்ற ஜீஸ்ஸை எடுத்துக் கொள்வதால் உடல்நலத்தை மேம்படுத்தவும், ஆரோக்கியமாகவும், மற்றும் சுறுசுறுப்பாகவும் இருக்கும். வேலை செய்பவராகவும் மற்றும் தொழில் செய்பவராகவும் இருந்தால் காலை உணவிற்குப் பிறகு  இரண்டு மணிநேரத்திற்குப் பிறகு குடிப்பதால் உடலுக்கு நன்மை கிடைக்கும். துரித உணவுகளைத் தவிர்த்துவிட்டு இது போன்ற உணவுகள் உட்கொண்டால் உடல் எடை எளிதில் குறையும் மற்றும் பல வகையான நோய்களும் விரைவில் குணமாகும். 

ஏபிசி ஜுஸ்  தயாரிப்பது எப்படி | How to prepare ABC juice at home?Representative Image

ஏபிசி (ABC) என்றால் என்ன?

A என்பது ஆப்பிள் இதில் வைட்டமின் சி மற்றும் பல வகையான தாதுப் பொருட்கள் அடங்கியுள்ளது. B என்பது பீட்ரூட் இதில் அதிகளவில் இரும்புச் சத்துக்கள் நிறைந்த ஒரு காய் மற்றும் வைட்டமின் அதிகம் உள்ளது. இதனைத் தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த அதிகமாக உற்பத்தியாகும். C என்றால் கேரட் இதிலும் அதிக அளவில் வைட்டமின் ஏ, டி, இ சத்துகள் நிறைந்துள்ளது. இந்த கேரட்டை தினமும் பச்சையாகச் சாப்பிட்டால் கண்கள் பார்வை அதிகப்படுத்தும் அதனுடன் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளும் எளிதில் கரையும். இத்தனை சத்துகள் நிறைந்த காய்கறிகளை தனித்தனியாகச் சாப்பிட்டால்  உடலில் சத்துகள் அதிகமாகும். அதிலும் ஜுஸ் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி அருந்தக் கூடிய ஒரு  பழவகை சார்ந்த உணவாகும். சரிவாங்க ABC ஜுஸ் எப்படித் தயாரிப்பது என்பதைப் பார்க்கலாம். 

ஏபிசி ஜுஸ்  தயாரிப்பது எப்படி | How to prepare ABC juice at home?Representative Image

ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் ஜுஸ் தயார் செய்யத் தேவையான பொருட்கள்

ஆப்பிள் - ஒன்று

பீட்ரூட் -  சிறியதாக ஒன்று

கேரட் - இரண்டு (மீடியம் அளவு)

ஏபிசி ஜுஸ்  தயாரிப்பது எப்படி | How to prepare ABC juice at home?Representative Image

செய்முறை

  • முதலில் ஆப்பிள், பீட்ரூட்  மற்றும் கேரட் ஆகியவற்றை நன்றாகக் கழுவிய பின், அதன் மேல் தோல் நீக்கி கொள்ளவும்.

  • தோல் நீக்கிய பழங்களை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அதனை நன்றாக மிக்ஸியில் அரைத்து அப்படியே அருந்தலாம்.

  • தேவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து மற்றும் எலுமிச்சை சாறு, புதினா ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கலந்தும் குடிக்கலாம்.

  • இவ்வளவு எளிமையாக செய்தாலும் கூட, அதனால் உடலில் ஏற்படும் மருத்துவ பலன்கள் ஏராளமாக உள்ளது. அதை கீழே காணலாம்.

ஏபிசி ஜுஸ்  தயாரிப்பது எப்படி | How to prepare ABC juice at home?Representative Image

ABC ஜுஸின் மூலம் ஏற்படும் நன்மைகள்

முகம்:

  • வீட்டில் உள்ள ஆப்பிள் மற்றும் பீட்ரூட்,கேரட் ஆகியவை சேர்த்து ஜுஸ் செய்து தினத்தோறும் குடிப்பதால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீக்கி முகப்பொலிவு பெறுவதுடன் முகப் பார்ப்பதற்கு  பளிச்சென்று இருக்கும்.

  •  முகச் சுருக்கங்கள் எளிதில் குறையத் தொடங்கும்.அத்துடன் திருமணம் நடக்கவிருக்கும் பெண்கள் இதனை எடுத்து கொள்ளாவதால் முகம் பொலிவுடன் அழகாக இருப்பீங்க.

  • முகப் பருக்கள்,கரும்புள்ளிகள் மற்றும் கண்ணின் கீழ் பகுதியில் ஏற்படும் கருவளையம் ஆகியவை எளிதில் நீங்கும்.

ஏபிசி ஜுஸ்  தயாரிப்பது எப்படி | How to prepare ABC juice at home?Representative Image

உடல்

  • உடலுக்கு அதிக அளவில் தேவைப்படும் வைட்டமின்களான ஏ,சி,இ ஆகியவையும் மற்றும் ஆண்டு ஆக்ஸிடண்ட் சத்துகளும் இதில் நிறைந்து உள்ளது. 

  • ஜுஸ் குடிப்பதால் உடலுக்கு வலிமை பெரும் வகையில் இரும்புச் சத்துகள் இதில் அதிகமாக இருப்பதாலும், உடலில் அதிக அளவில் இரத்தம் உற்பத்தி செய்யவும் உதவுகிறது.

  • நோய்கள் பெரும் அளவில் குறைவதாலும், மாரடைப்பு எளிதில் குறைக்கலாம்.நுரையீரல் மற்றும் புற்றுநோய் உள்ளவர்கள் இதனைக் குடிப்பதால் விரைவில் குணமாகும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.

  • செரிமான தொடர்பான பிரச்சனைகள் மற்றும் வயிற்றுப்புண்கள்,அல்சர்,போன்ற பல வகைப் பிரச்சனைகளை இந்த பழச்சாறு எளிதில் குணமாக்கும் வலிமையுடையது. 

  • உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கும் தன்மையுடையது.

  • கண்களின் பார்வைத்திறனை மேம்படுத்துவதுடன், மூளை செயல்பாடு அதிகரித்தல் போன்ற பல நன்மைகள் இந்த பழச்சாறு குடிப்பதால் கிடைக்கும்.

இவ்வாறு உடலுக்கு நன்மை தரக்கூடிய பழச் சாற்றைத் தினமும் அருந்திவந்தால் உடலில் உள்ள பிரச்னைகள் சரியாகி ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்