Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வீட்டுலேயே ஈஸியா வெள்ளரிக்காய வளர்க்கலாம்.. அதுக்கு இது மட்டும் பண்ணா போதும்..! | How To Grow Cucumber At Home

Gowthami Subramani Updated:
வீட்டுலேயே ஈஸியா வெள்ளரிக்காய வளர்க்கலாம்.. அதுக்கு இது மட்டும் பண்ணா போதும்..! | How To Grow Cucumber At HomeRepresentative Image.

கோடை காலத்தில், நாம் பெரும்பாலும் தண்ணீர் சார்ந்த காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுவது உடல் நலத்திற்கு நன்மை தரும். அந்த வகையில், வெள்ளரிக்காய் தண்ணீர் விடும் காய் ஆகும். வெள்ளரியின் பிறப்பிடம் இந்தியா என்றே கூறப்படுகிறது. வெள்ளரியை நம் வீட்டிலேயே இயற்கையாக வளர வைக்கலாம். மாடித் தோட்ட காய்கறிகளுள் வெள்ளையும் அடங்கும். கோடை காலத்தில் நாம் வெள்ளரியை வளர்ப்பது அவசியமாகக் கருதப்படுகிறது. இந்தப் பதிவில், விதையிலிருந்து வெள்ளரிக்காய் எப்படி வளர வைப்பது என்பதைப் பார்க்கலாம்.

வீட்டுலேயே ஈஸியா வெள்ளரிக்காய வளர்க்கலாம்.. அதுக்கு இது மட்டும் பண்ணா போதும்..! | How To Grow Cucumber At HomeRepresentative Image

வெள்ளரி வளர்க்கும் முறை

வெள்ளரிக்காய் வளர்ப்பின் பொதுவான முறை குறித்துக் காணலாம்.

✤ வீட்டிலேயே எளிமையாக வெள்ளரிகள் வளர்க்கலாம். தொட்டி, சமையலறை, மொட்டை மாடி வீட்டின் உட்புறம், வெளிப்புறம் என வெள்ளரி செடிகளை வளர்த்த முடியும்.

✤ இவை இரண்டு வடிவங்களில் உள்ளன. ஒன்று புதர் மற்றொன்று செடிகள். வெள்ளரி செடிகள் உட்புறத்திலும், கொள்கலன்களிலும் வளர்வதற்கு புதரில் வளரக்கூடியவை சிறந்த வழியாக உள்ளது.

வீட்டுலேயே ஈஸியா வெள்ளரிக்காய வளர்க்கலாம்.. அதுக்கு இது மட்டும் பண்ணா போதும்..! | How To Grow Cucumber At HomeRepresentative Image

விதைகளில் இருந்து வெள்ளரி செடி வளர்க்கும் முறை

✤ முதலில், வெள்ளரி செடியை நடவு செய்வதற்கு முன்னரே, அதற்கான இடத்தைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். இதில், செங்குத்துத் தோட்டக்கலைக்குச் செல்வது நல்லது.

✤ வெள்ளரிகளை நேரடியாக நடவு செய்வது, அதனை வளர்ப்பதற்கு சிறந்த வழியாக உள்ளது.

✤ இந்த செடிக்கு அதிக வெப்பம் மற்றும் வெளிச்சம் தேவை. எனவே, சூரிய ஒளி நிறைந்த இடத்தில் பானை / கொள்கலனை வைத்துக் கொள்ளலாம்.

✤ மண்ணில் குறைந்தது 1 அங்குல ஆழம் மற்றும் 4 அங்குல இடைவெளியில், விதைகளை விதைக்க வேண்டும். இந்த விதைகள் முளைப்பதற்குத் தொடர்ந்து தண்ணீர் ஊற்ற வேண்டும்.

✤ நுட்பமான செயல்முறைகளைப் பயன்படுத்தி, இதன் முளைக்கும் செயல்முறையை விரைவுபடுத்தலாம். அதன் படி, விதைகளை ஈரமான காகித துண்டில் ஊற வைக்கலாம் அல்லது 24 மணி நேரம் விதைகளைத் தண்ணீரில் ஊறவைத்து, பின், அவற்றை மண்ணில் விதைக்கலாம்.

வீட்டுலேயே ஈஸியா வெள்ளரிக்காய வளர்க்கலாம்.. அதுக்கு இது மட்டும் பண்ணா போதும்..! | How To Grow Cucumber At HomeRepresentative Image

வெள்ளரி செடி பராமரிப்பு மற்றும் அறுவடை செய்தல்

✥ பொதுவாக வெள்ளரி செடிகளை வளர்ப்பதற்கு கரிம பாட்டிங் கலவை அல்லது விதை ஸ்டார்டர் கலவையைப் பயன்படுத்தலாம். வயது முதிர்ந்த உரத்தை, பானை மண்ணின் சம பாகங்களாகக் கலந்து கொள்ளவும்.

✤ காற்றுப் பைகளை அகற்றுவதற்கு, கொள்கலனில் உள்ள மண்ணை சிறிது அழுத்த வேண்டும். மேலும், இதில் மண் முழுவதுமாக ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். அதாவது குறைந்தபட்சம் 20 டிகிரி முதல் அதிகபட்சம் 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம். அதே போல, மண்ணின் pH அளவானது 5.5 முதல் 6.8 வரை இருக்க வேண்டும்.

✤ விதைகளை விதைப்பதற்கு முன்பாக, வயதான உரம் சேர்த்து நட வேண்டும். இருப்பினும், அதிக அளவு பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவு நைட்ரஜன் கொண்ட உரம், வெள்ளரி பழங்களை சிறப்பாக வளர்க்க உதவுகிறது.

✤ பூச்சிகள் இளம் வயதிலேயே, அதன் நாற்றுகளுக்கு தீங்கு விளைவிப்பதாக அமையும். மேலும், வெள்ளரி செடிகள் அசுவினி, வெள்ளரி வண்டு, பூசணி பூச்சி போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றன. இதனை சோதனை அட்டவணையை பராமரிப்பதன் மூலமும், கரிம வேம்பு தெளிப்பதன் மூலமாகவும் இந்த பூச்சி தாக்குதலைத் தவிர்க்க முடியும்.

✤ வெள்ளரிக்காய்கள், அதன் உள்ளடக்கத்தில் 95% நீரைக் கொண்டுள்ளதால், இது நன்கு வளர ஈரமான திடப் பொருள் தேவைப்படுகின்றன.

✤ இவ்வாறு முறையாகப் பராமரித்து வந்தால், 55 முதல் 60 நாள்களிலேயே முளைத்த வெள்ளரிக்காய்களை அறுவடை செய்ய முடியும். காய், மஞ்சள் நிறமாக மாற விடாமல், முன்னரே அறுவடை செய்ய வேண்டும். நன்கு ஆரோக்கியமான வெள்ளரிக்காய் ஆனது பச்சை நிறம் மற்றும் உறுதியான வடிவத்தில் காணப்படும். இதனை ஒரு வாரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தாம் புதிது போல் இருக்கும்.

கோடை காலத்தில் அதிக வெப்பம் காணப்படுவதால், வெள்ளரிக்காய் ஆனது ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நல்க ஒரு வாய்ப்பாக அமையும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்