Thu ,May 16, 2024

சென்செக்ஸ் 72,987.03
-117.58sensex(-0.16%)
நிஃப்டி22,200.55
-17.30sensex(-0.08%)
USD
81.57
Exclusive

சாம்சங் லேட்டஸ்ட் ரிலீஸ்...எல்லாமே டாப் ஸ்பெக்...ரேட் இவ்ளோ தான் | Samsung Galaxy A05s Launched in India

Priyanka Hochumin Updated:
சாம்சங் லேட்டஸ்ட் ரிலீஸ்...எல்லாமே டாப் ஸ்பெக்...ரேட் இவ்ளோ தான் |  Samsung Galaxy A05s Launched in India Representative Image.

சாம்சங் நிறுவனம் தங்களின் லேட்டஸ்ட் சாம்சங் கேலக்ஸி A05s ஸ்மார்ட்போனை  இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் விலையில் வெளியாகியிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சாம்சங் கேலக்ஸி A05s-யின் விலை, விவரக்குறிப்பு, அம்சம் போன்ற முழு விவரங்களை பார்க்கலாம்.

Samsung Galaxy A05s விவரக்குறிப்புகள்

சாம்சங் கேலக்ஸி A05s ஸ்மார்ட்போன் 6.70-இன்ச் Full HD+ PLS LCD டிஸ்பிளேவுடன் வருகிறது. மேலும்  இது ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 SoC மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது. அத்துடன் 4G LTE, டூயல் பேண்ட் Wi-Fi, ப்ளூடூத் 5.1, GPS மற்றும் USB டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். எனவே, இந்த ஸ்மார்ட்போன் மேம்படுத்தப்பட்ட செயல்திறனுடன் இயங்கும் என்று கூறப்படுகிறது. 

கேமராவைப் பொறுத்த வரையில், 50எம்பி வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பீ பயன்பாட்டிற்கு 13எம்பி கேமரா செட்டப் அளிக்கப்பட்டுள்ளது. இது 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், 6ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய இரண்டு வேரியண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெமரி கார்டு பயன்படுத்தும் ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 68 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை அளிக்கும் 5000  எம்ஏஎச் பேட்டரி கொண்டு வருகிறது. இது Black, Silver, Light Green, Violet நிறங்களில் கிடைக்கும். இது ரூ.12,999/-க்கு விற்பனையாகும் என்று கூறப்படுகிறது. பிளிப்கார்ட் தளத்தில் இந்த போனை வாங்கி பயன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்