Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கவாஸாகி நிஞ்ஜா ZX-4R....ரூ.8.49 லட்சத்திற்கு...அப்படி என்ன இருக்கு? | Kawasaki Ninja ZX-4R Launch Date

Priyanka Hochumin Updated:
கவாஸாகி நிஞ்ஜா ZX-4R....ரூ.8.49 லட்சத்திற்கு...அப்படி என்ன இருக்கு? | Kawasaki Ninja ZX-4R Launch DateRepresentative Image.

இந்தியாவில் சும்மா வேற லெவல் அம்சங்களுடன் களமிறங்கியுள்ளது கவாஸாகி நிஞ்ஜா ZX-4R. சுமார் ரூ.8.49 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக் வெர்சிஸ் 650 அட்வென்ச்சர் டூரரை விட காஸ்டிலியாம். அப்படி கவாஸாகி பைக்கில் எந்த மாறியான அம்சங்கள் இருப்பதால் இவ்ளோ விலை என்று தெரிந்துகொள்ளலாம். இது பேஸ், ஹையர் ஸ்பெக் SE மற்றும் ZX-4RR என மொத்தம் மூன்று வேரியண்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்தியாவில் கவாஸாகி நிஞ்ஜா ZX-4R இன் பேஸ் வேரியண்ட் மட்டும் அறிமுகமாகியுள்ளது.

கவாஸாகி நிஞ்ஜா ZX-4R, 399cc லிக்விட்-கூல்டு இன்லைன்-ஃபோர் மோட்டார் உடன் வருகிறது. இது ரேம் ஏர் அசிஸ்டன்ஸ் உடன் 80hp மற்றும் அது இல்லாமல் 77hp உற்பத்தி செய்கிறது. மேலும் பைக்கின் பீக் பவர் ஆனது 14,500rpm என்ஜினில் இருந்து வருவதால் நீங்கள் எதிர்பார்த்த ரேன்ஜ் இதில் கிடைக்கும். இது டார்க்கை விட rpm இல் இருந்து தனக்கு தேவையான பவரை உற்பத்தி செய்து கொள்கிறது. இதனின் பிரேக் பற்றி கூறுகையில், டூயல்-சேனல் ஏபிஎஸ் பயன்படுத்தப்படுகிறது. எனவே, முன்பக்கத்தில் இரட்டை 290மிமீ டிஸ்க்குகள் மற்றும் பின்புறத்தில் ஒரு 220மிமீ யூனிட் மூலம் பிரேக்கிங் கையாளப்படுகிறது. பைக்கின் முன்பக்க டயர் 120/70-ZR17 மற்றும் பின்புறம் டயர் 160/60-ZR17 அளவுடன் வருகிறது.

இந்த பைக் தலைகீழான ஃபோர்க் மற்றும் மோனோஷாக் ஆகியவற்றில் இடைநிறுத்தப்பட்ட ட்ரெல்லிஸ் ஃப்ரேம் மூலம் ஒன்றாகப் பிடிக்கப்படுகிறது. இதனின் முக்கிய கன்ட்ரோல் சென்டர் 4.3-இன்ச் புளூடூத் பொருத்தப்பட்ட கலர் TFT டேஷ் தான். ஏனெனில், இது டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் நோட்டிபிகேஷன் அலெர்ட் ஆகியவற்றை செயல்படுத்துகிறது. பைக்கை பயன்படுத்தும் இடத்திற்கு ஏற்ப ட்ராக் மோடு பயன்படுத்தி கொள்ளும் அம்சம் உள்ளது. ஸ்போர்ட், ரெயின், ரோடு மற்றும் தனிப்பயனாக்கக்கூடிய ரைடர் மோடு என மொத்தம் நான்கு உள்ளது. இத்தனை அம்சங்களுடன் வந்துள்ள பைக் ரூ.8.49 லட்சத்திற்கு விற்பனையாகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்