Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வீட்டிலேயே சார்கோல் ஃபேஷியல் செய்வது எப்படி | How to do charcoal facial at home

Vaishnavi Subramani Updated:
வீட்டிலேயே சார்கோல் ஃபேஷியல் செய்வது எப்படி | How to do charcoal facial at homeRepresentative Image.

கோடைக்காலத்தில் அதிகளவில் வெயிலில் செல்வதால் முகப்பொலிவானது மிகவும் குறைந்தும், கருப்பாகவும் மாறுகிறது. அதனைச் சரிசெய்வதற்கும், முகப்பொழிவுப் பெறுவதற்கும் இந்த ஃபேஷியல் செய்வது மிகவும் நல்லது. இந்த ஃபேஷியலுக்கு பிளாக் டைமண்ட் ஃபேஷியல் (Black diamond facial) எனவும் மற்றொரு பெயர் உள்ளது. இந்த ஃபேஷியல் வீட்டிலேயே எப்படிச் செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

வீட்டிலேயே சார்கோல் ஃபேஷியல் செய்வது எப்படி | How to do charcoal facial at homeRepresentative Image

சார்கோல் ஃபேஷியல் எப்படிச் செய்வது

1.முகத்தைச் சுத்தப்படுத்துதல்(cleaning):

✤ எந்த ஃபேஷியல் செய்தாலும் முகத்தை முழுவதுமாக கழுவிய பின் செய்வது சிறந்தது. அதனால் முதல் படி முகத்தைச் சுத்தப்படுத்துதல். இந்த ஃபேஷியலில் முகத்தைச் சுத்தம்செய்வதற்கு கிவி க்ளென்சிங் க்ரீம் பயன்படுத்துவது நல்லது.

✤ இந்த கீரிமை முகத்தில் முழுவதுமாக வட்டமாக மசாஜ் செய்யவும். இந்த மசாஜின் பெயர் டிப் போர் க்ளென்சிங் (deep bore cleansing) ஆகும்.  இதைச் செய்வதன் மூலம் முகத்தில் உள்ள இறந்த செல்கள் முழுவதுமாக வெளியேறும். இதனை செய்தால் முகம் சுத்தமாக இருக்கும்.

வீட்டிலேயே சார்கோல் ஃபேஷியல் செய்வது எப்படி | How to do charcoal facial at homeRepresentative Image

2.முகத்தில் கீரிம் அப்ளை செய்தல்(ஸ்கரப்)

✤ ஃபேஷியல் இரண்டாம் நிலை முதலில் ஸ்கரப்பை முகத்தில் மென்மையாக மசாஜ் செய்யவும்.இந்த ஸ்கரப்பை முகத்திலிருந்து அகற்றுவது என்பது எளிதான காரியம் அல்ல. இதில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் துடைத்தால் இது வராது. இந்த ஸ்கரப் அகற்றுவதற்கு ஒரு மெஷின் உள்ளது. அந்த மெஷினியை முகத்திற்குப் பக்கத்தில்  கொண்டு வந்தால் மெஷினியில் உள்ள காந்த ஈர்ப்புத்தன்மை மூலம் சுத்தமாகும் போது முகத்தில் ஒரு புது புத்துணர்ச்சி தரும்.

✤ இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் முகம்பொழிவுட்டும். இதில் அதிகளவில் வைட்டமின் உள்ளதால்  முகத்தின் ஊட்டச்சத்து அதிகரிக்கும் மற்றும் முகம் மிகவும் மென்மையாகவும், அழகாகவும் இருக்கும். இந்த சார்கோல் ஃபேஷியலில் முக்கியமாகப் பார்க்கும் பகுதிதான் இந்த ஸ்கரப் பகுதியாகும்.

வீட்டிலேயே சார்கோல் ஃபேஷியல் செய்வது எப்படி | How to do charcoal facial at homeRepresentative Image

3.முகத்தில் மசாஜ்

✤ இந்த மசாஜில் நீங்கள் கிவி,பிஸ்தா கலந்த கீரிமை பயன்படுத்தி மசாஜ் செய்யவும்.இதை முகத்தில் மென்மையாக மசாஜ் செய்யவும்.இப்படிச் செய்வதால் எண்ணெய் சருமம் மற்றும் பருவ பிரச்சனைகளை இருக்கும் சருமத்தைச் சரிசெய்யலாம்.

✤ இதற்கு மேலே பிளாக் ஜெல் மாஸ்க்கை (black gel mask) அப்ளை செய்ய வேண்டும். இதை அப்ளை செய்த பின்,  கண்களுக்குப் பன்னீர் துணியில் நனைத்த பஞ்சை வைத்து 15 -20 நிமிடங்கள் அப்படியே விடவும்.

✤ அதற்குப் பிறகு, டோனர் தெளித்து காட்டன் துணியில் துடைத்து ஃபேஷியலை சுத்தப்படுத்தலாம்.இந்த ஃபேஷியலை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்துவது நல்லது. இந்த ஃபேஷியல் முகத்திற்கு அழகாகவும் மற்றும் முகப்பொலிவுடன் இருக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்