Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரூ.2.50 கோடிக்கு மிரட்டலாக களமிறங்கும் BMW-வின் லேட்டஸ்ட் மாடல் | BMW i7 M70 Price in India

Priyanka Hochumin Updated:
ரூ.2.50 கோடிக்கு மிரட்டலாக களமிறங்கும் BMW-வின் லேட்டஸ்ட் மாடல் | BMW i7 M70 Price in IndiaRepresentative Image.

நம்ப பட்ஜெட்டிற்கு ஏற்ப கார் வாங்கி மகிழும் மக்கள் மத்தியில், பணத்தை எப்படி செலவு செய்வது என்று தெரியாமல் விலை உயர்ந்த கார் வாங்கி மகிழ்பவர்களுக்கு BMW புது மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த பதிவில் BMW எலக்ட்ரிக் கார் i7 மற்றும் BMW 740d பெட்ரோல் காரின் விவரக்குறிப்புகளை முழுமையாக பார்க்கலாம்.

BMW i7 M70 xDrive

இந்த ஆண்டின் தொடக்கத்தில், BMW இன் முதல் M மாடல் எலக்ட்ரிக் கார் M70 டாப் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக, 650hp மற்றும் 1015Nm ஆற்றலை வெளிப்படுத்தும் ட்வின் மோட்டார் அமைப்பைக் கொண்டு i7 M70 மாடல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த மாடல் மிகவும் சக்திவாய்ந்த மின்சார BMW என்று கருதப்படும் என்று கூறப்படுகிறது. இந்த மோட்டார்களை 101.7kWh லித்தியம்-அயன் பேட்டரி பேக் இயக்குவதால், இந்த மாடல் 560km (WLTP) வரையிலான வரம்பில் வழங்குவதாகக் கூறப்படுகிறது.

காரின் உட்புறத்தில், M லெதர் ஸ்டீயரிங் வீல், ஒரு M ரூஃப்லைனர் மற்றும் 6 அப்ஹோல்ஸ்டரி சாய்ஸ் போன்றவற்றை பெற்றுள்ளது. அதோடு இந்த மாடல் காரை வாங்க விரும்புவார்கள், BMW இன்டிவிஜுவல் அப்ஹோல்ஸ்டரியை தேர்வு செய்துகொள்ளலாம். இதில் 9 அப்ஹோல்ஸ்டரி விருப்பங்கள் மற்றும் மூன்று இன்டீரியர் டிரிம் விருப்பங்கள் உள்ளன. இத்துடன் எக்ஸிகியூட்டிவ் லவுஞ்ச் சீட்டிங், டூயல் ஸ்கிரீன், சூடேற்றப்பட்ட (heated), காற்றோட்டம் (ventilated) மற்றும் மசாஜ் இருக்கைகள் பின்புற இருக்கை தியேட்டர் திரை, ஒரு போவர்ஸ் மற்றும் வில்கின்ஸ் டயமண்ட் ஆடியோ சிஸ்டம், நான்கு-மண்டல ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல், சாஃப்ட் க்ளோஸ் டோர்ஸ் மற்றும் பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

விலை - ரூ.1.95 கோடி.

BMW 740d M

சுமார் 286hp மற்றும் 650Nm டார்க்கை வெளிப்படுத்தும் 3.0-லிட்டர், இன்லைன் ஆறு-சிலிண்டர் டீசல் எஞ்சின் மூலம் இயங்குகிறது 740d மாடல். இது 6 வினாடிகளில் 0-100kph வேகத்தை நம்மால் செலுத்த முடியும். இந்த எஞ்சின் மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் 48V எலக்ட்ரிக் மோட்டாருடன் வருகிறது. அதனால் கூடுதல் 18hp மற்றும் 200Nm டார்க்கை வழங்குகிறது. மேலும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

விலை - ரூ.1.81 கோடி.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்