Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அப்படி என்னதான் இருக்கு இந்த ஈரோட்டுல? 

Udhayakumar November 13, 2021
அப்படி என்னதான் இருக்கு இந்த ஈரோட்டுல? Representative Image.

பக்திக்கு சென்னிமலை, பறவைக்கு வெள்ளோடு, புரண்டோடும் காவிரி, பளபளக்கும் பவானி, பொழுது போக வஉசி பார்க் இன்னும் ஏகப்பட்ட இடங்கள் இங்க இருக்கு. 

கொங்கு மண்டலத்தின் மையப் பகுதியான ஈரோடு மாவட்டம் பற்றியும் அதன் சுற்றுலாத்தளங்கள் பற்றியும் காண்போம்.

கந்த சஷ்டி கவசம் இயற்றப்பட்ட இடமும் இதுதான் கடவுளே இல்லை என முழங்கிய பெரியார் ஈவேரா பிறந்த இடமும் இதுதான். ஈரோட்டுக்கு வருகிறவர்கள் நிறைய பேர் இங்கு பொழுதுபோக்குக்காக எந்த இடமும் இல்லை என்றே நினைக்கின்றனர். ஆனால் உண்மை என்ன தெரியுமா? இங்கு அருகாமையிலேயே பல சுற்றுலாத் தளங்கள் நம் குடும்பத்தோடு பயணிக்க ஏதுவாக அமைந்துள்ளன. வாருங்கள் ஒரு ரவுண்டு போகலாம்

சென்னிமலை தண்டாயுதபாணி கோயில் அமைவிடம்

மங்களகரமா கோவில்ல ஆரம்பிக்கலாம். ஈரோட்டுல இருந்து 30கிமீ தூரத்துல அமைந்திருக்குற இடம்தான் சென்னிமலை. ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து தென்மேற்கு திசையில் 17 கிமீ தொலைவு பயணம் செய்யும்போது பெருந்துறை எனும் இடத்தை அடையலாம். அங்கிருந்து தெற்கு திசையில் 13 கிமீ தொலைவில்தான் இந்த சென்னிமலை இருக்கு. 

பயணம் செய்வது எப்படி ?

ஈரோடு - பெருந்துறை - சென்னிமலை பகுதி வழியாகவும் பயணிக்கலாம். இந்த பயணத்துக்கு குறைந்தது 45 நிமிடங்களாவது எடுக்கும்.

மாற்று வழி

ஒருவேளை நீங்கள் மாற்றுவழி தேடினால், வெள்ளோடு - கவிஞ்சிபாளையம் சாலை வழியாக பயணிக்கலாம். இந்த சாலை வழி பயணித்தாலும் கூட முக்கால் மணி நேரம் ஆவது உறுதி. 

இச்சிப்பாளையம் மலைக்குன்றின் மீது  அமைந்துள்ள இந்த கோவிலுக்கு செல்லும் வழியிலேயே மலைக்குன்றின் பாதையில் முத்துகுமாரவாசகர், கடம்பனேசுவரர்,  இடும்பன், வள்ளியம்மாள் பாதம், ஆற்றுமலை விநாயகர் என பல சந்நிதிகள் உள்ளன. 

துரட்டி மரம்

தண்டாயுதபாணி கோவிலுக்கு செல்லும் வழியிலுள்ள இந்த மரம் ஒரு பெருமைவாய்ந்த மரமாகும். இதன் இலைகள் மற்ற மரங்களைப் போலல்லாமல் வித்தியாசமாக நீளமாக அமைந்துள்ளன. கந்த சஷ்டி கவசம் இயற்றப்பட்டதற்கும் இந்த மரத்துக்கும் நெருங்கியத் தொடர்பு இருப்பதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. அதாவது அத்தனை பழமைவாய்ந்த மரம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் அமைவிடம்

ஈரோட்டிலிருந்து 40 கிமீ தொலைவில் கரூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில். இந்த கோவிலுக்கு வீரநாராயண பெருமாள் கோவில் என்ற பெயரும் உண்டு.

கோவிலின் சிறப்பு 

ராகு, கேது, செவ்வாய் தோஷ நிவர்த்திக்கான பரிகாரத் தலமாக விளங்குகிறது இந்த வீரநாராயண பெருமாள் கோவில்.   காவிரிக் கரையில் பல வருடங்கள் பழமையான இந்த கோவிலின் கட்டுமானம் காண்போரை பரவசமடையச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. 

கறையூர், கன்மாடபுரம், அரிகரபுரம், பிரம்மபுரி எனும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது இந்த இடம். வாயுதேவனுக்கும் ஆதி சேஷனுக்கும் இடையில் நடந்த சண்டையில் தகர்ந்த மேரு மலை 5 துண்டுகளாகச் சிதறி விழுந்ததாம். அதில் வைரம் விழுந்த இடம்தான் கொடுமுடி.

கொடுமுடி என்றால் பெரிய சிகரம் என்று பொருள். 

இந்த கோவிலின் இன்னுமொரு சிறப்பம்சம் என்னவென்றால் இங்கு மூலவர் அம்பாளுடன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். 

வெள்ளோடு பறவைகள் சரணாலயம் 

ஈரோடு நகரிலிருந்து 12 கிமீ தொலைவில் பெருந்துறை அருகே அமைந்துள்ளது வெள்ளோடு பறவைகள் சரணாலயம். நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் இங்கு சீசன் காலம்.  கரண்டி வாயன்,மஞ்சள் மூக்கு நாரை, கூழைக்கடா, வெள்ளை அரிவாள் மூக்கன், நத்தைக் குத்தி நாரை உள்ளிட்ட பறவைகள் இந்த காலத்தில் வெள்ளோடு பகுதிக்கு வருகை தரும். 

பல வகையான பறவைகளைப் பார்த்து ரசிப்பதற்கு ஏதுவான சுற்றுலாத் தளம் இதுவாகும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்