Wed ,May 15, 2024

சென்செக்ஸ் 73,190.49
85.88sensex(0.12%)
நிஃப்டி22,253.90
36.05sensex(0.16%)
USD
81.57

வீட்டுக் குறிப்புகள்

இனி வாட்டர் பாட்டிலின் உள்பக்கத்தை ஈஸியாக சுத்தம் செய்யலாம்.. எப்படி? | Water Bottle Cleaning Tips in Tamil

Nandhinipriya Ganeshan August 23, 2023

உடல் நீரேற்றமாக வைத்திருக்க அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். அதனால் அவ்வப்போது வீட்டில் இருக்கும் டம்ளர் அல்லது செம்பில் தண்ணீர் குடிப்போம். ஆனால் ஆஃபிஸ், ஸ்கூல் மற்றும் வெளியில் செல்லும்போது தண்ணீரை எடுத்துச் செல்வதற்காக வாட்டர் பாட்டிலை பயன்படுத்துவது வழக்கம். அப்படி தினமும் பயன்படுத்தும் வாட்டர் பாட்டில்களை 2 நாட்களுக்கு ஒருமுறையாவது சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். இல்லையென்றால், வாட்டர் பாட்டிலில் கிருமிகள் தங்கி உடலில் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தலாம். ஆனால், நம்மில் பலரும் வாட்டர் பாட்டிலின் உள்பக்கத்தை கழுவதற்கு சலித்துக்கொண்டு மேலோட்டமாக கழுவிவிட்டு மீண்டும் பயன்படுத்தும். இது முற்றிலும் தவறானது. அதுமட்டுமல்லாமல், தற்போது கிடைக்கக்கூடிய பெரும்பாலான வாட்டர் பாட்டில்களின் தண்ணீர் அருந்தும் பகுதி மிகவும் சன்னமானதாக தான் இருக்கிறது. இதன் உள்பகுதியை சுத்தம் செய்வது என்பது மிகவும் கடினமானது. ஆனால், இனி வாட்டர் பாட்டில்களின் உள்பகுதியை ஈஸியாக சுத்தம் செய்ய முடியும். கீழே உள்ள டிப்ஸை முயற்சித்து பாருங்கள். வாட்டர் பாட்டிலின் உள்பக்கத்தை சுத்தம் செய்வது எப்படி? டிப்ஸ் 1: உங்கள் வாட்டர் பாட்டிலின் தண்ணீர் அருந்தும் பகுதி பெரியதாக இருந்தால் கழுவுவது மிகவும் எளிது. முதலில் பாட்டிலில் வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி, பின்னர் அதில் பாத்திரம் கழுவும் லிக்குவிட் (liquid) சில துளிகள் சேர்த்து கொள்ளவும். இப்போது அதை நன்றாக குலுக்கிவிட்டு 5 நிமிடம் கழித்து பாட்டில் கழுவும் பிரஷை வைத்து நன்றாக தேய்க்கவும். கீழ் பகுதி, சுற்றியுள்ள பகுதி மற்றும் மூடி ஆகியவற்றை நன்றாக தேய்த்து, பைப்பில் தண்ணீரை திறந்துவிட்டு நன்றாக குலுக்கி அலசவும். 4 அல்லது 5 முறை குலுக்கி அலசிவிட்டு, வெயில் படும் இடத்தில் காய வைத்து, மூடி போட்டு வைத்துவிடுங்கள். டிப்ஸ் 2: ஒருவேளை உங்கள் வாட்டர் பாட்டிலின் தண்ணீர் அருந்தும்பகுதி சிறிதாக இருந்தால் ப்ளீச் மூலம் சுத்தம் செய்யலாம். அதற்கு வாட்டர் பாட்டிலில் சிறிதளவு பேக்கிங் சோடா போட்டு அதில் குளிர்ந்த தண்ணீரை முழுவதும் ஊற்றி, அதன் மூடியை மூடிபோட்டு நன்றாக குலுக்கவும். பின்னர், அதை அப்படியே இரவு முழுவதும் விட்டுவிட்டு, காலையில் எடுத்து அதேபோல் குலுக்கு ஓடும் தண்ணீரில் அலசிவிட்டு, வெயிலில் காய வைத்துவிடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் பாட்டிலில் இருக்கும் பாக்டீரியாக்கள் எளிதில் இறந்துவிடும். நோய்த்தொற்று பாதிப்பும் தவிர்க்கப்படும்.

ஓணம் பண்டிகை 2023: அழகான அத்தப்பூ கோலங்கள்.. | Simple Onam 2023 Pookalam Designs

Nandhinipriya Ganeshan August 21, 2023

கோலம் என்றாலே தனிக் கலைத்தான். அதிலும் விதவிதமான பூக்களாலே போடப்படும் அத்தப்பூ கோலம் ரொம்பவே ஸ்பெஷல். அந்தவகையில், கேரள மக்களின் மிகவும் சிறப்பு வாய்ந்த பண்டிகையான ஓணம் பண்டிகையில் போடப்படும் அத்தப்பூ கோலங்களுக்கு தனி சிறப்புண்டு.  கேரளத்து மன்னரான மகாபலி அரசரை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது இந்த திருவோணம் பண்டிகை. இவ்வாண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த பண்டிகையில், பெண்கள் பாரம்பரிய உடைய கசவு புடவையையும், ஆண்கள் வேஷ்ட்டி சட்டையையும் அணிந்துக் கொண்டு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அத்தப்பூக்களால் கோலம் போட்டு, சத்யா விருந்து படைத்து வழிபாடு செய்து வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள்.  திருவிழாவின் கடைசி நாளான திருவோணத்தன்று மட்டும் கோலத்தின் அளவு பெரியதாக இருக்கும். இந்த அத்தப்பூ கோலமிடுவதற்கு காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களை தான் அதிகம் பயன்படுத்துவார்கள். அந்த வகையில், இவ்வாண்டு புதுப்புது டிசைன்ஸ்களை கொண்ட அத்தப்பூ கோலங்களால் உங்க வீட்டை அழகரியுங்கள். 

வீட்டில் மறந்தும் இந்த திசைகளில் காலணிகளை விடாதீர்கள்.! இல்லைன்னா எதிர்பாராத கஷ்டங்கள் தான் வரும்.. | Vastu Tips For Footwear

Gowthami Subramani June 09, 2023

வீட்டில் உள்ள மூலைகள் வாஸ்து சாஸ்திரங்களின் படியே இருக்கும். அந்த வகையில் குபேர மூலையில் பீரோ வைப்பதன் மூலம் பொருளாதார மேம்பாடு அடையும் என்று கூறுவர். வாஸ்து சாஸ்திரங்களின் படி, காலணிகள் மற்றும் செருப்புகள் போன்றவற்றை வீட்டில் வைக்கக்கூடாத இடத்தில் வைப்பது எதிர்மறை சக்தியை அதிகரிக்கும் என்று கூறலாம். இதில், வீட்டின் எந்த திசையில் காலணி விடுவதால் பொருளாதா மேம்பாடு கிடைக்கும் மற்றும் வறுமை உண்டாகும் என்பதைக் காணலாம்.

வீட்டில் உள்ள மின் விசிறியைச் சுத்தம் செய்ய 4 டிப்ஸ் !!!

Vaishnavi Subramani March 24, 2023

பலரது வீட்டில் தினமும் வீட்டைச் சுத்தம் செய்ய மாட்டார்கள். சிலர் மூன்று மாதத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்வார்கள் மற்றும் சிலர் பண்டிகை, வீட்டு விழாக்கள் என நடந்தால் மட்டும் வீடு சுத்தம் செய்வார்கள். அப்படி சுத்தம் செய்யும் போது இந்த ஃபேன்னை சுத்த செய்வது என்பது கடினமாக இருக்கும். முதலில் இந்த ஃபேன்னை சுத்தம் செய்யாமல் கடைசியாகத் தான் சுத்தம் செய்வார்கள். இதை அவ்வளவு எளிதில் சுத்தம் செய்ய முடியாது.

வீட்டில் உள்ள கண்ணாடிகளை சுத்தம் செய்வது எப்படி | best tips to cleaning mirrors

Vaishnavi Subramani March 09, 2023

பொதுவாக அனைத்து வீட்டிலும் கண்ணாடி வைத்து சன்னல்கள் அமைப்பது என்பது வழக்கமாக மாறிவருகிறது. அதைச் சுத்தம் செய்வது என்பது வெறும் தண்ணீரை வைத்துத் துடைப்பார்கள் அப்படிச்செய்தால் அப்பொழுது மட்டும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் அடுத்த நாள் அந்த இடம் திட்டு திட்டாக இருக்கும். இதனால் அழுக்குகள் போகாது.  சிலர் சோப்பு தண்ணீர் வைத்துத் துடைப்பார்கள் அதுவும் நன்றாக அழுக்கு போகத் துடைத்து அரை மணிநேரத்தில் அந்த சோப்பு தண்ணீர் திட்டு திட்டாக இருக்கும்.

கடிகாரத்தை வீட்டில் இந்த திசையில் வைத்து பாருங்க! பணம் கொட்டோ கொட்டோனு கொட்டும்.. | Clock Direction as Per Vastu

Gowthami Subramani February 27, 2023

வாஸ்து, சாஸ்திர விதிமுறைகளின் படி, நாம் வீட்டை பாதுகாப்பாக எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என சில விஷயங்கள் உள்ளன. அவற்றில் கடிகாரத்தை வைத்தும் வாஸ்து சாஸ்திரங்கள் கூறப்படுகின்றன. அவற்றைப் பற்றி இங்குக் காணலாம். வீட்டில் கடிகாரத்தை எப்படி வைத்திருக்க வேண்டும் என்பதையும் இந்தப் பதிவில் காணலாம்.

வீட்டிலுள்ள பொம்மைகளை எளிமையான முறையில் சுத்தம் செய்வது எப்படி?| how to clean teddy bear at home

Vaishnavi Subramani February 23, 2023

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தது பொம்மை.பலருக்கும் கரடி பொம்மைகள் என்றால் பிடிக்கும். காதலிப்பவர்கள் பெரும்பாலும் இந்த கரடி பொம்மைகளைத் தான் பரிசாக வாங்கி தருகிறார்கள். அப்படிப்பட்ட பொம்மையை நாம் விளையாடுவதால் அந்த பொம்மைகள் அதிகளவில் அழுக்குகள்  மற்றும் தூசிகள் படிகிறது அதை எப்படி சுத்தம் செய்வது என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

வீட்டில் உள்ள டிவியை சுத்தம் செய்வது எப்படி | How to clean TV at home

Vaishnavi Subramani February 23, 2023

இப்பொழுது அனைவரது வீட்டிலும் தொலைக்காட்சி இருக்கும். வீட்டில் ஒருவராவது தொலைக்காட்சிகள் பார்ப்பது என்பது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் அந்த டிவியை சுத்தம் செய்வதைப் பற்றி யாரும் நினைக்க மாட்டார்கள். பல வீடுகளில் டிவியில் பல தூசிகள் மற்றும் அழுக்குகள் இருக்கும் அதனைச் சுத்தம் செய்யாமல் பயன்படுத்துவார்கள். சரிவாங்க வீட்டில் உள்ள டிவியை எப்படி சுத்தம் செய்வது என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

வெள்ளிப் பொருள்களை சுத்தம் செய்வது எப்படி |silver vessels cleaning

Vaishnavi Subramani February 22, 2023

வெள்ளிப் பொருள்களைக் கழுவுவது என்பது நம்மில் பலரும் கடைகளில் இருக்கும் பவுடர்களை வாங்கி பயன்படுத்துவோம். ஆனால் அதில் முழுவதுமாக பளபளப்பாக வராது. அதில் பல ரசனைகள் பயன்படுத்தித் தயாரிப்பதால் அதை நம் சாப்பிடும் தட்டுகள் அல்லது மற்ற பாத்திரங்களைக் கழுவினால் அதில் சிறிதளவு இருந்தால் கூட நம் உடலுக்குப் பல பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது. அதனைத் தவிர்ப்பதற்கும், மற்றும் வீட்டில் உள்ள பொருள்கள் பயன்படுத்தி வெள்ளி பாத்திரங்களை எப்படிச்  சுத்தம் செய்வது என்பதையும் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

குளியலறையில் உள்ள டைல்ஸ் சுத்தம் செய்வது எப்படி | how to clean bathroom tiles

Vaishnavi Subramani February 22, 2023

குளியலறை உள்ள டைல்ஸ் சுத்தம் செய்வது என்பது மாதத்திற்கு, ஒரு முறை சுத்தம் செய்வது என்பது வழக்கம். ஆனால் சுத்தம் செய்து இரண்டு வாரத்தில் அழுக்கு சேர்வதற்கு ஆரம்பிக்கும்.அதை எளிதில் எப்படிச் சரிசெய்வது என்பது பலரும் யோசிக்க கூடிய ஒரு விஷியம். குளியலறை எளிதில் சுத்தம் செய்வதற்குப் பல வகையான பொருள்கள் உள்ளது. அதில் சில பொருள்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.