Sun ,Mar 26, 2023

சென்செக்ஸ் 57,527.10
-398.18sensex(-0.69%)
நிஃப்டி16,945.05
-131.85sensex(-0.77%)
USD
81.57

வேளாண் தொழில்நுட்பங்கள்

வீட்டிலேயே மிக எளிமையான முறையில் ரோஸ்மேரி செடி வளர்ப்பது எப்படி? | How to Grow Rosemary at Home in Tamil

Nandhinipriya Ganeshan March 17, 2023

ரோஸ்மேரி (Rosemary) என்பது வாசனை மிகுந்த பசுமை மாறா மற்றும் ஊசி போன்ற இலைகளை கொண்ட பல ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு மூலிகை தாவரம். இந்த மூலிகை வெளிநாடுகளில் அழகுத் தாவரமாக வளர்க்கப்படுகிறது. இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் இந்த செடியின் சிறிதளவு தண்டை பறித்து தலையணைக்கு அடியில் வைத்து தூங்கியினால் நிம்மதியான தூக்கம் வரும். இந்த தாவரத்திலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் தலைமுடி வளர்ச்சிக்கு ரொம்பவே பயன்படுகிறது. 

வெறும் தண்ணீரில் மணி பிளாண்ட் வளர்ப்பது எப்படி? | How to Grow Money Plant in Water Faster

Nandhinipriya Ganeshan March 17, 2023

நாம் வீட்டில் வளர்ப்பதற்காகவே பல விதமான செடிகள் இருக்கின்றன. அவற்றில் அதிர்ஷ்ட செடியாக இருப்பது மணி பிளாண்ட். இந்த செடியை பெரும்பாலானோர் வீடுகளில் வளர்ப்பதை பார்த்திருப்போம். ஏனென்றால், இந்த செடி வளரும் வீட்டில் அதிர்ஷ்டம் தேடி வருமாம். பொதுவாக, இந்த செடியை மண்ணில் தான் வளர்ப்பார்கள். ஆனால், இதை வெறும் தண்ணீரிலும் வளர்க்கலாம். என்னாங்க சொல்றீங்க தண்ணீரிலா? ஆம், இந்த செடி தண்ணீரிலும் வளரக்கூடியது. சரி வாங்க, தண்ணீரில் வளர்ப்பது என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

மாடித்தோட்டம் டிப்ஸ்: விதையிலிருந்து முலாம் பழம் செடி வளர்ப்பது எப்படி? | How to Grow Muskmelon from Seed in Tamil

Nandhinipriya Ganeshan February 18, 2023

கோடைக்காலம் வந்துவிட்டாலே நாம் முதலில் தேடிவடுவது நீர்ச்சத்து அதிகமாக உள்ள பழங்களை தாங்க. அதிலும் தர்பூசணிக்கு அடுத்து கோடைக்காலங்களில் அதிகம் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று முலாம் பழம். இதை கிர்ணி பழம் என்று சொல்வார்கள். இந்த பழத்தில் 60% நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இந்த பழத்தை நம் வீட்டிலேயே எளிமையான முறையில் வளர்க்க முடியும். இதற்காக, அதிக நாட்களும் தேவையில்லை. சரி வாங்க நீர்ச்சத்து நிறைந்த முலாம் பழம் செடியை விதையிலிருந்து வளர்ப்பது எப்பது என்று விரிவாக பார்க்கலாம். முலாம் பழம் ஒரு கொடி வகையை சேர்ந்த ஒரு தாவரம். மற்ற கொடிவகை தாவரங்களுக்கு பந்தல் அமைக்க வேண்டியது அவசியம். ஆனால், இந்த முலாம் பழம் கொடியை வளர்க்க பந்தல் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. வெறும் மூன்றே மாதத்தில் [45 - 90 நாட்கள்] அறுவடைக்கு வரக்கூடிய பழம். எனவே, கோடைக்காலம் வருவதற்கு ஒரு 3-4 மாதங்களுக்கு முன்பாகவே விதையை விதைத்துவிட வேண்டும்.

வீட்டிலேயே தர்பூசணி வளர்க்கணுமா.? இப்படி பண்ணுங்க..!| How to Grow Watermelon at Home

Gowthami Subramani February 02, 2023

தர்பூசணி அனைவராலும் விரும்பப்படும் உணவுப் பொருள்களில் ஒன்றாகும். இந்தியாவில், இதன் உற்பத்தி சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னதாகவே துவங்கியது. வெயில் காலங்களில் தர்பூசணி பழம் அனைவருக்கும் மிகவும் பிடித்தவையாகவும், உடல் உஷ்ணத்தைக் குறைக்கக் கூடியவையாகவும் இருக்கும். வெயில் காலம் வந்து விட்டாலே, தர்பூசணிக்கு மக்கள் தேடி அலைவர். வாட்டி வதக்கும் வெயிலில், தர்பூசணி சாப்பிட வெளியே எங்கும் செல்ல வேண்டும். வீட்டிலேயே தர்பூசணியை எப்படி வளர்க்கலாம் என்பதைப் பற்றி இதில் காணலாம்.

மாட்டுப் பொங்கலின் சிறப்பு என்ன? எப்படி கொண்டாட வேண்டும்? | How to Celebrate Mattu Pongal 2023

Nandhinipriya Ganeshan January 06, 2023

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாளாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பண்டிகையானது விவசாயிகளுக்கு பக்கபலமாக நின்ற கால்நடைகளையும், உழவு பொருட்களையும் அலங்கரித்து வழிபடுவது தமிழர்களின் பாரம்பரிய மரபாக இருந்து வருகிறது. இதனை 'பட்டிப் பொங்கல்', 'கன்று பொங்கல்' என்று என்று வட்டார வழக்கத்துக்கு ஏற்ப மக்கள் அழைப்பதுண்டு. ஆண்டு முழுவதும் விவசாயத்துக்கு பேருதவியாக இருக்கும் காளையும், அவற்றின் உழைப்பையும் நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த பெருநாள், இந்த ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

எந்த மாதத்தில் என்ன பயிரிடலாம்? | Vegetable Growing Season Chart in Tamil Nadu

Nandhinipriya Ganeshan December 26, 2022

பருவநிலைக்கு ஏற்ப பயிர் செய்வதையே அக்காலத்தில் பட்டங்களாக பிரித்து வைத்திருந்தனர். பருவநிலைக்கு ஏற்ப பயிர் செய்தால் மட்டுமே பயிரின் விளைச்சலும் செழிப்பாக இருக்கும். உதாரணமாக், ஆடிப்பட்டத்தில் தானியப் பயிர்களும், காய்கறி பயிர்களும் சாகுபடி செய்வார்கள். தொடர்ந்து ஒரே பயிரை சாகுபடி செய்யாமல், மாற்றுப் பயிர்களுக்கு பழைய பயிரின் கழிவுகள் உரமாக பயன்படுவதோடு முந்தைய பயிரில் தங்கி வாழ்ந்த நோய்க்கிருமிகள் அதிகம் புதுப்பயிரை தாக்குவது கிடையாது. இப்படி, விவசாயத்தில் கைதேர்ந்தவர்களுக்கு என்ன பயிர் விதைக்க வேண்டும், அதை எப்போது அறுவடை செய்ய வேண்டும் என்று தெரியும். ஆனால், புதிதாக விவசாயம் செய்ய தொடங்கும் நபர்களுக்கு அந்த அளவிற்கு அனுபவம் இருக்காது அல்லவா? அந்த பிரச்சனையை போக்கவே இந்த பதிவு. இதில் 12 மாதங்களில் எந்த மாதிரியான பயிர்களை பயிர் செய்யலாம், அதை எத்தனை நாட்களில் அறுவடை செய்யலாம் என்பது பற்றிய முழுவிபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மழைக்காலங்களில் செடிகளை பராமரிப்பது எப்படி? | How to Take Care of Plants in Rainy Season in Tamil

Nandhinipriya Ganeshan December 13, 2022

நம் அனைவருக்குமே வீட்டைச் சுற்றி அழகழகான பூ செடிகள், காய்கறிகள் செடிகள், மரங்களை வளர்ப்பதற்கு ரொம்ப பிடிக்கும். பொதுவாக, எல்லா செடிகளுக்குமே தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டியது அவசியம் தான். ஆனால், அளவுக்கும் மீறி தண்ணீர் ஊற்றினால் அந்த செடியின் வேர் அழுகிவிடும். இப்படி செடிகளை எப்படி வளர்ப்பது என்று கூட தெரிந்து வைத்திருப்போம். ஆனால், பருவநிலை எல்லாநேரத்திலும் ஒரே மாதிரியாக இருக்காது அல்லவா? பெரும்பாலும் செடிகள் எல்லா பருவத்திலும் வளரக்கூடியவையாக இருந்தாலும் ஒரு சில செடிகளை மழைக்காலத்தில் பராமரிக்க வேண்டியது அவசியம். அந்த வகையில், மழைக்காலத்தில் உங்க செடிகளை எப்படி பராமரிப்பது என்பது பற்றி பார்க்கலாம். 

How to: SBI விவசாய தங்க நகைக் கடன் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? | How to Apply Sbi Agri Gold Loan Scheme?

Nandhinipriya Ganeshan December 13, 2022

விவசாயிகளின் தேவைகளை கவனத்தில் கொண்டு எஸ்.பி.ஐ வங்கி இரண்டு வகையான தங்க நகைக்கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. 1. பயிர் உற்பத்தி வேளாண் தங்கக்கடன், 2. பல்முனை பயன்பாட்டு தங்கக்கடன். இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் ஏராளமான நன்மைகளை பெற முடியும். பயிர் உற்பத்தி வேளாண் தங்கக்கடன் திட்டத்தில் ரூ. 3 லட்சம் வரை கடன் வாங்கும் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 7% வட்டி விதிக்கப்படுகிறது. அடுத்து, ரூ. 3 லட்சத்திற்கு மேல் வாங்கும் விவசாய கடனிற்கு ஆண்டுக்கு 9.95% வட்டி வசூல் செய்யப்படும். அதுவே, பல்முனை பயன்பாட்டு தங்கக்கடன் திட்டத்தில் வாங்கும் கடன் தொகைக்கு ஆண்டுக்கு 9.95% வட்டி வசூலிக்கப்படும்.

ப்ரோக்கோலியை வீட்டிலேயே இயற்கையான முறையில் வளர்ப்பது எப்படி..? இந்த ஸ்டெப்ஸ் மட்டும் ஃபாலோப் பண்ணுங்க…

Gowthami Subramani December 05, 2022

இயற்கையான முறையில் நம் மாடித் தோட்டத்திலேயே, ப்ரோக்கோலியை வீட்டில் நன்றாக வளர்க்க முடியும். மாடித் தோட்டத்தில் ப்ரோக்கோலி வளர்க்கும் முறைகளையும், அதற்கான சில குறிப்புகளையும் பற்றி இந்தப் பதிவில் காணலாம். உலகெங்கிலும் உள்ள உணவுப் பிரியர்களால் விரும்பப்பட்டு எடுத்துக் கொள்ளப்படும் மிகவும் சத்தான காய்கறி ப்ரோக்கோலி ஆகும். இது சாலட்களில் பொதுவான மூலப் பொருளாகும். இதனை சமைத்தோ அல்லது பச்சையாகவோ உண்ணலாம். முட்டைகோஸ், காலிஃபிளவர் குடும்பத்தைச் சேர்ந்த காய்கறியாகவும், நார்ச்சத்து மிகுந்ததாகவும் இருப்பது ப்ரோக்கோலி ஆகும். இதில் உள்ள ஊட்டச்சத்து சக்தியை வைத்து இதனை சூப்பர் ஃபுட் என்றே கூறலாம்.

எந்த வயசுலயும், எந்த பிரச்சனையும் வராம இருக்க இத சாப்பிடுங்க…

Gowthami Subramani November 28, 2022

உடலில் எந்த பிரச்சனைகளும் வராமல் இருக்க, நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் உணவுப் பொருள்களை கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு காரத்தைக் கூட தினந்தோறும் எடுத்துக் கொண்டால், அது நம் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமையும். அதிலும் குறிப்பாக கீரை வகைகளை நாம் பயன்படுத்தி வந்தால் நமக்கு எந்த நோய்களும் வராது. நம் உணவில் கீரையைச் சேர்ந்து உண்பதால், எந்தவித பிரச்சனைகளும் நம்மை நெருங்காது. பொதுவாக அனைத்து வகைக் கீரைகளிலும் ஒரு தனிப்பண்பு உள்ளது. இதன் மூலம், நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.