Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஜியோ பாரத் போன் ரூ.999/-க்கு வாங்கலாம்...முழு விவரங்கள்! | Jio Bharat K1 Karbonn Recharge Plan

Priyanka Hochumin Updated:
ஜியோ பாரத் போன் ரூ.999/-க்கு வாங்கலாம்...முழு விவரங்கள்! | Jio Bharat K1 Karbonn Recharge PlanRepresentative Image.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் மலிவு விலையில் போன்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில், Jio Bharat K1 Karbonn போன் வெறும் ரூ.999/-க்கு விற்பனையாகிறது. இந்த போனின் அம்சங்கள், விலை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பார்க்கலாம்.

ஜியோ பாரத் கே1 கார்பன் அம்சங்கள்:

இது 1.77 இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேலும் Li-Po 1000mAh பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. இது மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 128ஜிபி வரை ஸ்டோரேஜை அதிகரிக்க உதவுகிறது. கேமராவைப் பொறுத்த வரையில், எல்இடி ப்ளாஷ் கொண்ட 0.3 மெகாபிக்சல் (VGA) சென்சார் கொண்டுள்ளது. இது 3.5mm ஆடியோ ஜாக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஜியோ பாரத் போன் 4G இணைப்பை ஆதரிக்கிறது, ஒரு நானோ சிம் கொண்டுள்ளது மற்றும் USB v2.0, LTE மற்றும் VoLTE போன்ற கனெக்டிவிட்டி அம்சங்களை ஆதரிக்கிறது. இது இந்திய பிராந்திய மொழிகள் உட்பட 23 மொழிகளை ஆதரிக்கிறது. திரைப்படங்கள், டிவி சீரிஸ், ஸ்போர்ட்ஸ் மற்றும் மியூசிக் போன்ற பொழுதுபோக்கு விஷயங்களை அணுக JioCinema மற்றும் JioSaavn உள்ளிட்டவை முன்பே நிறுவப்பட்டுள்ளது. மேலும் இன்-பில்ட் JioPay இருப்பதால் பயனர்கள் UPI payments மூலம் பணம் செலுத்தலாம்.

ரீசார்ஜ் திட்டம்:

இந்த ஜியோ பாரத் போனை பயன்படுத்த வேண்டும் என்றால், பயனர்கள் ரூ.123/- ரீசார்ஜ் திட்டத்தை வைத்திருக்க வேண்டும். இது 14ஜிபி 4ஜி டேட்டா, 28 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும். அப்படி இல்லை என்றால், வருடாந்திர திட்டம் ரூ.1,234/- செலுத்தி பயன் பெறலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்