ஜியோ வி2 சீரிஸ் மற்றும் ஜியோ கே2 கார்பன் வரிசையில் ஜியோ தனது புதிய மலிவு விலை 4ஜி ஃபீச்சர் போனான ஜியோ பாரத் பி1-ஐ கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய போன் ஆனது, பல ஜியோ பயன்பாடுகளுடன் ப்ரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. அதோடு இந்தியாவில் பயன்படுத்தப்படும் பல மொழிகளை ஆதரிக்கிறது. மிகவும் மலிவாக ரூ.1299/-க்கு விற்பனையாகும் இந்த போன் சிங்குலர் பிளாக் கலர் ஆப்ஷனில் கிடைக்கிறது. மேலும் இந்த போனை ஜியோவின் அதிகாரபூர்வ வெப்சைட் மற்றும் அமேசானில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
ஜியோ பாரத் பி1 அம்சங்கள்:
இது 2.4 இன்ச் QVGA ரெக்டாங்குலர் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. அதோடு Threadx RTOS இல் இயங்கும் இந்த போன் 0.05GB RAM உடன் வருகிறது. மேலும் 2,000mAh பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளதால், ஒரு முறை சார்ஜ் செய்தால் 343 மணிநேரம் வரை பேட்டரி ஆயுள் வழங்குகிறது. இது மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 128ஜிபி வரை ஸ்டோரேஜை அதிகரிக்க உதவுகிறது. இது 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் பொருத்தப்பட்டுள்ளது, 110 கிராம் எடையும், 125mm x 52mm x 17mm அளவும் கொண்டது.
இந்த ஜியோ பாரத் போன் 4G இணைப்பை ஆதரிக்கிறது, ஒரு நானோ சிம் கொண்டுள்ளது மற்றும் புளூடூத், வைஃபை மற்றும் யூ.எஸ்.பி இணைப்பை போன்றவற்றை ஆதரிக்கிறது. இதில் குறிப்பிடப்படாத பின்புற கேமரா யூனிட்டையும் கொண்டுள்ளது. இது இந்திய பிராந்திய மொழிகள் உட்பட 23 மொழிகளை ஆதரிக்கிறது. திரைப்படங்கள், டிவி சீரிஸ், ஸ்போர்ட்ஸ் மற்றும் மியூசிக் போன்ற பொழுதுபோக்கு விஷயங்களை அணுக JioCinema மற்றும் JioSaavn உள்ளிட்டவை முன்பே நிறுவப்பட்டுள்ளது. மேலும் இன்-பில்ட் JioPay இருப்பதால் பயனர்கள் UPI payments மூலம் பணம் செலுத்தலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…