Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குழந்தைகள், அதிக எடையுடன் பிறப்பதற்கு என்ன காரணம் தெரியுமா..? | Reasons for Increased Birth Weight

Gowthami Subramani Updated:
குழந்தைகள், அதிக எடையுடன் பிறப்பதற்கு என்ன காரணம் தெரியுமா..? | Reasons for Increased Birth WeightRepresentative Image.

பிறக்கும் குழந்தைகள், இந்த எடையுடன் தான் பிறக்க வேண்டும், இந்த அளவு உயரத்தில் தான் இருக்க வேண்டும் என உண்டு. ஆனால், குழந்தைக்கு எடை மற்றும் உயரம் அதிகமாக இருந்தாலும், குறிப்பிடப்பட்ட அளவை விட குறைவாக இருந்தாலும், அது ஆபத்தையே விளைவிக்கும். இது குறித்த முழு விவரங்களைப் பற்றி இதில் காணலாம்.

குழந்தைகள், அதிக எடையுடன் பிறப்பதற்கு என்ன காரணம் தெரியுமா..? | Reasons for Increased Birth WeightRepresentative Image

உலகிலேயே அதிக எடை உடைய குழந்தை

சமீபத்தில், பிரேசிலில் பிறந்த குழந்தை ஒன்று, 7.3 கிலோ எடையைக் கொண்டுள்ளது.

இந்த குழந்தையின் பெயர் ஆன்கர்சன் சான்டோஸ் ஆகும். இந்த குழந்தையானது பாரிண்டின்ஸ் என்ற பகுதியில் உள்ள பார்ட்ரே கொலம்போ எனும் மருத்துவமனையில் பிறந்துள்ளது. இதற்கு முன்னதாக, 1955 ஆம் ஆண்டு 10.2 கிலோ எடையுடன் கூடிய குழந்தை பிறந்ததாகக் கூறப்படுகிறது. இது உலகில் அதிக எடையுடன் பிறந்த குழந்தை எனக் கூறப்படுகிறது.

குழந்தைகள், அதிக எடையுடன் பிறப்பதற்கு என்ன காரணம் தெரியுமா..? | Reasons for Increased Birth WeightRepresentative Image

குழந்தையின் சராசரி எடை

பொதுவாக, குழந்தைக்கு சராசரியாக இவ்வளவு எடை தான் இருக்க வேண்டும் என்பது, குழந்தையின் உடல் மற்றும் தாயின் உடல் நிலையைப் பொறுத்தே இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் படி, ஆண் குழந்தையின் சராசரி உடல் எடை 3.3 கிலோ என்றும், பெண் குழந்தையின் சராசரி உடல் எடை 3.2 கிலோ ஆகவும் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த குறிப்பிடப்பட்ட எடையை விட, அதிக அளவில் எடை கூடப்பட்டு பிறக்கிறது.

குழந்தைகள், அதிக எடையுடன் பிறப்பதற்கு என்ன காரணம் தெரியுமா..? | Reasons for Increased Birth WeightRepresentative Image

அதீத எடை கொண்ட குழந்தை

இது போல, அதீத எடையில் குழந்தைகள் பிறக்கும் போது, அதன மாக்ரோசோமியா என அழைக்கின்றனர். இதற்கு கிரேக்கத்தில், ”பெரிய குழந்தை” என்று அர்த்தம். உலகளவில் இது போல மாக்ரோசோமிக் குழந்தைகள் 12 சதவீத அளவில் பிறப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இம்மாதிரியான அதிக அளவில் எடை கொண்ட குழந்தைகள் பிறப்பதற்கு சில காரணங்கள் உண்டு.

குழந்தைகள், அதிக எடையுடன் பிறப்பதற்கு என்ன காரணம் தெரியுமா..? | Reasons for Increased Birth WeightRepresentative Image

அதிக எடையுடன் பிறப்பதற்குக் காரணம் –கூடுதல் எடை

✤ கர்ப்ப காலத்தில் தாய்மார்களின் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது, 15 முதல் 45 சதவீத அளவில் இது போல, மாக்ரோசோமிக் குழந்தைகள் பிறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதற்கு இன்னும் பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

✤ முதலில் கூறுவது உடல் பருமன். அதிக எடை கொண்ட கர்ப்பிணிப் பெண்கள், மாக்ரோசோமிக் குழந்தைகளைப் பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

✤ அதே சமயம், கர்ப்பம் தரித்திருக்கும் நேரத்தில் எடை கூடுவதும், இந்த மாக்ரோசோமிக் குழந்தைகளைப் பெறுவதற்கு ஒரு காரணமாக அமையும்.

✤ அதாவது, ஜெஸ்டேஷனல் டயபெட்டிஸ் என அழைக்கப்படுவது கர்ப்ப காலத்தில் சர்க்கரை அதிகரிக்கும் நிலை ஆகும்.

✤ தாய்மார்களின் இன்சுலின் எதிர்ப்புத் தன்மை அதிகமாக இருக்கும் பட்சத்தில், அதிக அளவிலான குளூக்கோஸ், குழந்தைக்கு தொப்புள் கொடி வழியாக சென்றடையும். இதன் காரணமாகவும், குழந்தைகள் அதிகமாக வளர்வதாகக் கூறப்படுகிறது.

✤ இவ்வாறு இன்சுலின் அதிகமாகச் சுரக்கப்படும் நேரத்தில் அதிக அளவிலான கொழுப்பு குழந்தையைச் சென்றடைவதால், குழந்தைகள் அதீத வளர்ச்சியடைகின்றனர்.

குழந்தைகள், அதிக எடையுடன் பிறப்பதற்கு என்ன காரணம் தெரியுமா..? | Reasons for Increased Birth WeightRepresentative Image

மற்றொரு காரணம் – தாமதமான கர்ப்பம்

✤ குழந்தையின் அதீத வளர்ச்சிக்கு, தாமதமான கர்ப்பமும் ஒரு காரணமாகும். குறிப்பாக, 35 வயதுக்கு மேற்பட்ட தாய்மார்கள், கர்ப்பமாகும் போது, இந்த எடை கூடுதல் ஆபத்து 20% உள்ளது.

✤ தாய்மார்கள் மட்டுமல்லாமல், தந்தையின் வயதும் 35-க்கு மேல் இருக்கும் போது, 10% அளவிலான ஆபத்து ஏற்படுகிறது.

✤ இதில் தாய்மார்கள் அடுத்தடுத்த கர்ப்பங்கள் அடையும் போது, குழந்தையின் எடை அதிகரிப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.

✤ பொதுவாக, பெண் குழந்தைகளைக் காட்டிலும் ஆண் குழந்தைகளே மாக்ரோசோமிக்காக இருப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதில், ஆண் குழந்தைகளுக்கு பெண் குழந்தைகளை விட ஆபத்து 3 மடங்கு அதிகம் எனவும் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்