Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Jiivi 2 படம் எப்படி இருக்கு? ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?

UDHAYAKUMAR August 18, 2022 & 19:57 [IST]
Jiivi 2 படம் எப்படி இருக்கு? ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?Representative Image.

விஜே கோபிநாத் இயக்கத்தில் ஜீவி 2 திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.  நேரடியாக ஓடிடியில் வெளியாகும் இந்த ஜீவி 2 திரைப்படம் கடந்த 2019ம் ஆண்டு வெளியான ஜீவி படத்தின் தொடர் பாகம். ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தைப் பார்த்தவர்கள் நல்ல அனுபவத்தை தந்திருப்பதாக கூறி வருகின்றனர். 

வெற்றி, ரோஹினி, மைம் கோபி, கருணாகரன், அஸ்வினி சந்திரசேகர், மோனிகா சின்னகோட்லா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.  கேஎஸ் சுந்தரமூர்த்தி இசையில் பாடல்கள் உருவாகியுள்ளன.  பிரவின் கே எல் எடிட்டராக பணியாற்றியுள்ளார். 

ஒரு திரில்லர் வகை படமாக உருவாகியிருந்த திரைப்படத்தின் தொடர்ச்சி இந்த திரைப்படமும், அதே பாணியில் நொடிக்கு நொடி சஸ்பென்ஸை உடைக்கும் படமாக வந்துள்ளது. 

எப்படி இருக்கு?

தன்னுடைய வாழ்க்கையில் நடந்தது அப்படியே ஏற்கனவே தான் திருடிய வீட்டிலும் நடக்கிறதே என நூல் பிடித்துக் கொண்டே போய் கதை அப்படியே வேறொரு பரிமாணத்தில் பயணிக்கிறது. இந்த கதையில் முக்கோணவியலைத் திறந்த நம் கதையின் நாயகன் அதை திரும்புவும் நடக்கவிடாமல் தடுக்க, அந்த விதியை உடைக்க முடிவு செய்கிறான். 

தன்னுடைய திருட்டால் நின்று போன திருமணத்தை நடத்த முயற்சித்து, அந்த பெண்ணை தானே திருமணம் செய்ய முடிவு செய்கிறான். 

திருமணம் செய்ததும் தான் நினைத்தது நடிக்கிறதா என பார்த்தவனுக்கு பேரதிர்ச்சி. ஏனென்றால், அந்த நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்க, அதனை எப்படி நிறுத்துவது, அதிலிருந்து எப்படி மீள்வது என்பதுதான் கதை. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்