Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57

செங்கல்பட்டு

ஒன்றன் பின் ஒன்றாக மோதிய அரசுப் பேருந்துகள் - சம்பவ இடத்தில் ஒருவர் பலி!

Saraswathi July 03, 2023

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசுப் பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மாமண்டூர் என்ற இடத்தில், திருவாரூரில் இருந்து அரசு விரைவு பேருந்து ஒன்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. விரைவு பேருந்துக்கு முன்னால், அரசு சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

செங்கல்பட்டில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்.. | Chengalpattu Power Shutdown Today

Priyanka Hochumin July 02, 2023

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒருநாள் மின்தடை (மாதாந்திர பவர் கட்) அறிவிக்கப்படும். அதன்படி, அனைத்து இடங்களிலும் வெவ்வேறு மணி நேரத்தில் மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், பெரும்பாலான பகுதிகளில் காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரையிலும் மின் இணைப்பு துண்டிக்கப்படும். மின்சார வாரியத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தேதியில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

வேடந்தாங்கல் சரணாலயத்தில் அடிப்படை வசதிகள் - செங்கல்பட்டு ஆட்சியர் உத்தரவு

Saraswathi June 17, 2023

செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் ஊராட்சியில் வலையபுத்தூரில் ஏரியில் இருந்து வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் உள்ள ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக வரத்துகால்வாயினை தூர்வாரி அகலப்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பார்வையாளர்கள் குறைவாக காணப்படுவதால் அதனை மேலும் அழகுப்படுத்தும் முயற்சியை மேற்கொள்ளவும், பொதுமக்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, இருக்கை வசதி போன்றவற்றை ஏற்பாடு செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஆட்சியர் அப்போது கூறினார்.

செங்கல்பட்டு அருகே பாமக நிர்வாகி வெட்டிக்கொலை - இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் வெறிச்செயல்

Saraswathi June 12, 2023

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் டீ குடித்துக்கொண்டிருந்த பாமக நிர்வாகியை, இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் காளி (வயது45). இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நகர சங்க தலைவராக இருந்துவந்தார். இந்நிலையில், இன்று வழக்கம்போல் மறைமலைநகர் நகராட்சி தேசிய நெடுஞ்சாலை அருகே ஓலாலா என்கிற தனியார் டீக்கடையில்  டீ அருந்தியபோது திடீரென 2 இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல்,  காளியை சரமாரியாக அறிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பிச்சென்றது.   இதில் படுகாயம் அடைந்த  காளியை மறைமலைநகர் போலீசார் மீட்டு பொத்தேரி உள்ள தனியார் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கொலை குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய மர்ம கும்பலைத் தேடிவருகின்றனர்.  

பள்ளி மாடியில் இருந்து தற்கொலை முயற்சி.. 10 ஆம் வகுப்பு மாணவியின் செயலால் அதிர்ச்சி!!

Sekar November 03, 2022

கணித பாடத்தில் தோல்வியடைந்ததால் விரக்தியடைந்த 10 ஆம் வகுப்பு மாணவி பள்ளியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பாலாஜிநகர் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் அதே பகுதியில் உள்ள சரஸ்வதி மெட்ரிக்குளேஷன் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த இரண்டு மாதங்களாக சரியாக படிப்பில் கவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த தேர்வில் கணித பாடத்தில் அவர் தோல்வியடைந்ததாகத் தெரிகிறது. இதனால் அவர் சோகத்தில் இருந்த நிலையில், இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற மாணவி, பிற்பகலில் யாரும் பார்க்காத நேரத்தில் பள்ளியின் மூன்றாவது மாடிக்குச்சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஐடி பெண் ஊழியர்...9வது மாடியில் இருந்து...குதித்து தற்கொலை! வெளியான அதிர்ச்சி தகவல்!

Priyanka Hochumin October 18, 2022

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஐடி பெண் ஊழியர் 9 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். சென்னை அருகே இருக்கும் செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர் ஊராட்சியில் இருக்கும் ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 33 வயது ஐடி பெண் ஊழியர் மதுமொழி ஒருவர் 9 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

செங்கல்பட்டில் கரண்ட் கட்! எப்ப கரண்ட் போகும்... எப்ப வரும்?

UDHAYA KUMAR October 03, 2022

செங்கல்பட்டுயில் எங்கெல்லாம் மின்தடை ஏற்படும். எப்போது மின்சாரம் திரும்ப வரும் உள்ளிட்ட தகவல்களை இங்கு காண்போம். செங்கல்பட்டுயில் இருக்கும் முக்கியமான பகுதிகளின் பட்டியல். ,  Thiruninravur, Poonjeri, Thirukalukundram, Vengambakkam, Omega, Moosivakkam, Nokia SS, Thirumazhisai, ILLEEDU திருநின்றவூர், பூஞ்சேரி, திருக்கழுகுன்றம், வெங்கம்பாக்கம், ஒமேகா, மூசிவாக்கம், நோக்கியா எஸ்எஸ், திருமழிசை, இல்லீடு