Nandhinipriya Ganeshan January 31, 2023
ஜோதிடத்தில் மிக முக்கியமானதாக கருதப்படுவது நட்சத்திரங்கள் தான். கிரகங்களை விட நட்சத்திரங்களுக்கு பலம் அதிகம். பொதுவாக நமது பிறந்த ஜாதகமானது நாம் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் தான் அமைகிறது. அந்தவகையில், மொத்தம் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன. ராசிகளுக்கு எப்படி ராசி அதிபதி இருக்கிறதோ அதேபோல் நட்சத்திரங்களுக்கும் நட்சத்திர அதிபதி உள்ளன. சரி வாங்க, உங்க நட்சத்திரத்திற்கு உண்டான நட்சத்திர அதிபதியை தெரிந்துக்கொள்வோம்.
Nandhinipriya Ganeshan January 31, 2023
ஜோதிடத்தில் கண்ணாக திகழ்வது ராசிகள் தான். மொத்தம் 12 ராசிகள் உள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு அதிபதி இருப்பார். நவகிரங்களே நமது ராசியின் அதிபதிகளாக திகழ்கின்றனர். நவகிரங்களில் இருக்கும் 9 கிரகத்திற்கும் ஒரு ராசி வீடு உண்டு. சில கிரகத்திற்கு 2 வீடுகள் உள்ளன. நிழல் கிரகங்கள் என்று சொல்லப்படும் ராகு - கேது கிரகத்திற்கு மட்டும் வீடு கிடையாது. மாறாக அவர்கள் ஒரு ஜாதகத்தில் எந்த ராசியில் அமர்ந்திருக்கிறார்களோ அதுவே அவர்களின் வீடாக கருதப்படுகிறது. ஒரு கிரகமானது அதன் சொந்த வீட்டில் (ஆட்சி வீடு) இருந்தால், அந்த கிரகத்துக்கு சக்தி மூன்று மடங்காக இருக்கும். அதேபோல், ஒருசில கிரகங்களுக்கு வீடுகள் நீச வீடாகவும், உச்ச வீடாகவும் இருக்கும். அதாவது, உச்ச வீட்டில் இருக்கும்போது அந்த கிரகம் ஐந்து மடங்கு சக்தியுடன் உச்ச பலமாக இருக்கும். அதுவே, நீச வீட்டில் இருக்கும்போது கிரகம் பலம் இழந்து காணப்படும். சரி வாங்க, 12 ராசிகளுக்கு உண்டான ராசி அதிபதிகள் பற்றி பார்க்கலாம்.
Nandhinipriya Ganeshan January 17, 2023
நவக்கிரகங்களில் நீதிகாரகனாக விளங்கும் சனிபகவான், ஒருவரது ஜாதகத்தில் 1 முதல் 12 கட்டங்களில் பயணம் செய்வார். அவ்வாறு சனிபகவான் பயணிக்கும் ஒவ்வொரு கட்டங்களுக்கும் ஒவ்வொரு பெயரால் அழைக்கப்படும். அப்படி பயணம் செய்யும்போது, ஒவ்வொரு நிலையிலும் பல நன்மைகளையும், சில இன்னல்களையும் கொடுப்பார். அந்தவகையில், அர்த்தாஷ்டம சனி காலத்தில் சனி பகவான் எந்தமாதிரியான பலன்களை கொடுப்பார், அதற்கான பரிகாரங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
Nandhinipriya Ganeshan January 17, 2023
நீதி பகவானாக பார்க்கப்படும் சனி பகவானின் ஆதிக்கம் தான், நம் வாழ்க்கையின் சகலத்துக்கும் காரணம். ஒருவர் தன் கடமை, நேர்மையில் இருந்து தவறும் போது அதற்கான தண்டனையை, சனி பகவான் ஏழரை சனி வரும்போது கடுமையாக தண்டிப்பார். அதனால் தான் சனிப்பெயர்ச்சி என்றாலே நாம் பயப்படுகிறோம். என்ன ஆகுமோ, எப்படி இருக்குமோ? என்று நடுங்குவோம். ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்களின் நெஞ்சங்களிலும் பயத்தை கொடுப்பவர் சனி பகவான். பொதுவாக, ஜோதிடத்தின் பார்வையில் சனி பகவான் இரண்டரை ஆண்டுகள் ஒரு ராசியில் சஞ்சரிப்பார். அந்தவகையில், 12 ராசிகளையும் கடப்பதற்காக 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். இவ்வாறு ஒவ்வொரு முறையும் சனிபகவான் பெயர்ச்சி அடையும்போது அனைத்து ராசிகளிலும் ஆக்கப்பூர்வமானதாக இருப்பதில்லை. அந்தவகையில், ஏழரை நாட்டு சனி என்றால் என்ன? ஏழரை நாட்டு சனி காலத்தில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை பற்றி பார்க்கலாம்.
Nandhinipriya Ganeshan January 15, 2023
ஜோதிட சாஸ்திரத்தில் சனி, குரு, ராகு - கேது ஆகிய 3 கிரகங்களின் பெயர்ச்சிகளே முக்கியமானவையாக கருதப்படுகிறது. அதிலும், சனி பெயர்ச்சி என்றாலே எல்லோருக்கும் ஒருவிதமான பயம் இருக்கும். ஏனென்றால், நாம் தெரியாத தவறுகளுக்கும் தண்டனையை கொடுப்பவர் சனி பகவான் தான். இருப்பினும், சனி பகவானை போல் அருளை கொடுப்பவரை யாரும் கிடையாது. சனி பகவான் ஒவ்வொரு ராசிக்கு சுமார் இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை பெயர்ச்சியாவார். ஒருவரின் ஜாதகத்தில் சனி கிரகத்தில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு வீட்டிலும் இருப்பதை பொறுத்து அதன் பலன்கள் மாறுபடும். அந்தவகையில், ஜென்ம சனியால் ஏற்படும் பாதங்கள் என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
Nandhinipriya Ganeshan January 14, 2023
நவகிரங்களில் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாகவும், ஒரு ராசியில் அதிகம் காலம் சஞ்சாரம் செய்யும் கிரகமாகவும் இருப்பது சனி கிரகம் மட்டுமே. நீதிகாரகனாக விளங்கும் சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசிக்கு வருகை தருவார். இவருடைய பெயர்ச்சியால் குறிப்பிட்ட ராசியினருக்கு பாத சனி, ஏழரை சனி, ஜென்ம சனி என பலவிதமான தோஷங்களை ஏற்படுத்துவார். அப்படி, ஒரு நபரின் ஜாதகத்தில் சனிக்கிரகம் அவரது ராசிக்கு 2 ஆம் வீட்டில் பெயர்ச்சியடைந்து, அந்த வீட்டில் இரண்டரை ஆண்டு காலம் சனி சஞ்சாரம் செய்வதை தான் "பாத சனி" என்பார்கள்.
Nandhinipriya Ganeshan January 11, 2023
திருமணம் என்பது ஆண், பெண் இருவர்களின் வாழ்க்கையிலும் திருப்பு முனையை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாகும். அந்த திருப்பு முனை சிறப்பாகவும் இருக்கலாம், அதற்கு மாறாகவும் இருக்கலாம். அது அவர்களின் வாழ்க்கை துணையை பொருத்தே அமைகின்றது. மேலும், சோஷம் இருப்பவர்களை திருமணம் செய்வதாலும் வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திக்க நேரிடும். தோஷங்களில் களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், நாக தோஷம், ராகு, கேது தோஷம், மாங்கல்ய தோஷம் என பல தோஷங்கள் இருக்கின்றன. அந்தவகையில் இப்போது மாங்கல்ய தோஷம் என்றால என்ன? அது எதனால் ஏற்படுகிறது? மாங்கல்ய தோஷத்தை நீக்குவதற்கான பரிகாரம் என்ன? என்பது பற்றியெல்லாம் இப்பதிவில் பார்க்கலாம்.
Priyanka Hochumin January 10, 2023
மனிதர்கள் மட்டும் அல்லாது தேவர்களும் பார்த்து நடுங்கும் ஒருவர் தான் சனி பகவான். இவரின் பார்வையானது நமக்கு தீமைகளை அளிக்கும் என்று பலரும் கருதுகின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறான எண்ணமாகும். சனீஸ்வரர் அவரவரின் கர்ம வினைகளுக்கு ஏற்ப தான் பலன் அளிப்பார். நவகிரகங்களில் மெதுவாக நகர்வது இவர் மட்டும் தான். ஜென்ம சனி, ஏழரை சனி, அஷ்டம சனி ஆகியவற்றை இவரின் காலத்தில் நாம் அனுபவிக்க நேரிடும். இந்த காலங்களில் நாம் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.
Nandhinipriya Ganeshan January 10, 2023
நம் வாழ்க்கையில் அதிக கஷ்டங்கள் வந்தால் உடனே நமக்கு நினைவுக்கு வருவது சனி பகவான் தான். ஏனென்றால், நீதிகாரகனான சனி பகவான் வாழ்க்கையில் ஒருவர் செய்யும் தவறுகள் அனைத்திற்கும் பெயர்ச்சிக் காலத்தில் தண்டனையை கொடுப்பார். ஜென்ம சனி, அஷ்டம சனி, ஏழரை சனி, கண்டக சனி என பல சனி பெயர்ச்சிகள் இருக்கின்றன. அந்த வகையில், ஒருவருக்கு கண்டக சனி இருந்தால் என்ன நடக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.
Gowthami Subramani January 10, 2023
சனி பகவான் மிக மெதுவாக நகரக்கூடிய கிரகம் ஆகும். ஒரு ராசியில் இரண்டரை ஆண்டு காலம் சனி பகவான் தங்கி, 12 ராசிகளையும் சுற்றி வர 30 ஆண்டு காலம் எடுத்துக் கொள்வார். நீதி பகவானாகச் செயல்பட்டு, மக்களின் கர்ம வினைகளுக்கு ஏற்ற பலன்களை அளிப்பார். அந்த வகையில், சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனி நடக்கிறது. இதில் சனி பகவான் அசுப நிலையில் இருந்தால், மோசமான பாதிப்புகள் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கு சில ராசிக்காரர்கள் பரிகாரங்களை மேற்கொள்வது அவசியம் ஆகும். இது சனி பகவானின் வக்ர பார்வையில் இருந்து அவர்களுக்கு நிவர்த்தி அளிக்கும்.