Wed ,May 15, 2024

சென்செக்ஸ் 72,881.04
-223.57sensex(-0.31%)
நிஃப்டி22,183.25
-34.60sensex(-0.16%)
USD
81.57
Exclusive

குரு வக்ர பெயர்ச்சி 2023 எப்போது? தேதி, நேரம் குறித்த முழுத்தகவல்கள்... | Guru Vakra Peyarchi 2023 Date and Time

Nandhinipriya Ganeshan Updated:
குரு வக்ர பெயர்ச்சி 2023 எப்போது? தேதி, நேரம் குறித்த முழுத்தகவல்கள்... | Guru Vakra Peyarchi 2023 Date and TimeRepresentative Image.

வியாழன் கிரகம் தான் தேவர்களின் குரு என்று அழைக்கப்படுகிறார். என்ன தான் நாம் பணம், பொன், பொருளோடு இருந்தாலும் இவர் மனம் வைத்தால் மட்டுமே அவை அனைத்தும் நிலைத்து நிற்கும். அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, திருமணம் யோகம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக விளங்கும் குருபகவான் ஒருவருடைய ராசியில் சுபமாக இருந்தால் அவருக்கு அதிர்ஷ்ட மழை தான். அதேபோல், குரு பகவானின் அனுகூலமான நிலை மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைத் தரக்கூடியவை.

குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாக குறைந்தது 12 மாதங்களாவது எடுத்துக் கொள்வார். அந்தவகையில், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். இதுவரை மேஷ ராசியில் நேர்கதியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் வருகின்ற செப்டம்பர் 05 ஆம் தேதி முதல் வக்ர கதியில் பயணம் செய்ய இருக்கிறார். அதாவது, பின்னோக்கி நகரப்போகிறார். இதை தான் வக்ர பெயர்ச்சி என்பார்கள். 

டிசம்பர் 31 ஆம் தேதி வரை வக்ர கதியிலேயே பயணம் செய்ய இருக்கிறார். வக்ர நிவர்த்தியும் அதே தேதியில் தான் வரும். அந்த வகையில், கிட்டத்தட்ட 115 நாட்கள் குரு பகவான் வக்கிரகதியிலேயே பயணம் செய்கிறார். இப்படி வக்கிர கதி நிலை அடையும் போது ஒரு கிரகம் தான் கொடுக்க வேண்டிய பலனுக்கு அப்படியே எதிராக கொடுக்க நேரிடும். அதாவது சுப கிரகம் நன்மை செய்வதற்குப் பதிலாக கெடு பலன் கொடுப்பது அல்லது எந்த பலனும் தராமல் போதல் நிகழ்வும், அசுப கிரகம் நல்ல பலன்கள் தரக் கூடிய நிலை கூட இருக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்