Wed ,May 15, 2024

சென்செக்ஸ் 72,965.98
-138.63sensex(-0.19%)
நிஃப்டி22,199.25
-18.60sensex(-0.08%)
USD
81.57
Exclusive

ஓணம் சத்யா விருந்தில் இடம்பெறும் 27 வகையான உணவுகள்.. | Onam Sadhya Items List in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
ஓணம் சத்யா விருந்தில் இடம்பெறும் 27 வகையான உணவுகள்.. | Onam Sadhya Items List in TamilRepresentative Image.

கேரளத்து மன்னர் மகாபலி சக்ரவர்த்தி மக்களை காண வரும் நாளே ஓணம் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கப்படும் கேரள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் தொடர்ந்து 10 நாட்கள் கொண்டாடப்படும். அந்த பத்து நாட்களில் கடைசி நாளான திருவோணத்தன்று, மகாபலி மன்னரை வரவேற்கும் விதமாக வீட்டு வாசலி அத்தப்பூ கோலமிட்டும், கேரள பாரம்பரிய புத்தாடை அணிந்தும், இனிப்புகள் பரிமாறியும் மகிழ்ச்சியோடு கொண்டாடுவார்கள். அந்தவகையில், இவ்வாண்டு திருவோணம் பண்டிகை ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது. இதற்காக அனைத்து கேரள மக்களும் தயாராகி வருகின்றனர். 

திருவோணம் தினத்தன்று, கேரள மக்களால் உறவினர்களுக்கு அன்போடு பரிமாறப்படுகிறது ஓணம் சத்ய விருந்து. தலைவாழை இலையில் தரையில் அமர்ந்து கேரளத்தின் பாரம்பரிய உணவு வகைகள் பரிமாறப்படும். இவ்வாறு உண்பதன் மூலம் ஆரோக்கிய மேம்படுவதாகவும் ஐதீகம். கேரள உணவுகளை பொறுத்தவரை ஆரோக்கியத்துக்குத்தான் முதலிடம். ஏனென்றால், அவை முழுவதும் தேங்காய் எண்ணெய், தேங்காய் பால், நெய் உள்ளிட்ட பொருட்களை மட்டுமே பயன்படுத்தி தயாரிப்பார்கள். அந்தவகையில், கேரள சத்யா விருந்தில் இடம்பெறும் 27 வகையான உணவுகளை பற்றி பார்க்கலாம். 

அப்பளம்

சாதாரணமாக கடைகளில் வாங்கி செய்யப்படும் அப்பளம் இல்லாமல், அரிசி மாவில் இருந்து தயார் செய்யப்படும் அப்பளம் தான் இடம் பெறும்.

அப்பேரி

அப்பேரியா? அப்படினா என்ன என்று தானே உங்க கேள்வி. அது வேறு எதுவும் அல்ல. இனிப்பு வாழைக்காய் சிப்ஸை தான் கேரளாவில் அப்பேரி என்று அழைப்பார்கள். வாழைக்காய் சிப்ஸ் என்றாலே கேரளா தானே நம் அனைவருக்கும் நினைவுக்கும் வரும். இதுவும் அந்த விருந்தில் ஒரு உணவுப்பொருளாக வைக்கப்படும்.

பருப்பு கறி

பருப்பு கறியா என்று யோசிக்காதீங்க. பருப்பு குழம்பை தான் ஆனால் கேரளத்து ஸ்டைலில் இருக்கும். பருப்பு, தேங்காய், மஞ்சள் மற்றும் நெய் கொண்டு தயாரிக்கப்படுகிறது. 

வாழைக்காய் பொறியல்

பச்சை வாழைக்காயை கொண்டு தயாரிக்கப்படும் இந்த வாழைக்காய் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தி செய்யப்படுகிறது.

மலபார் அவியல்

நமது தென்னிந்திய உணவில் அவியல் முக்கிய பங்கு வகிக்கிறது. அது இல்லாமல் எந்த திருமணமோ அல்லது திருவிழா மெனுவோ முழுமையடையாது. முழுக்க முழுக்க காய்கறிகளை கொண்டு செய்யப்படும் இந்த அவியலுக்கு ஓணம் சத்யா விருந்தில் தனி இடமுண்டு. 

மாம்பழ பச்சடி

பழுத்த மாம்பழம், தேங்காய், தயிர் மற்றும் மசாலாப் பொருட்களால் செய்யப்படும் ஒரு சுவையான கேரள குழம்பு. 

பீன்ஸ் பொரியல்

ஆரோக்கியமான பச்சை பீன்ஸ் காயை கொண்டு தயாரிக்கப்படும் பொரியல். ஆனால், தேங்காய் துருவல் கொஞ்சம் தூக்கலாக இருக்கும்.

கேரட் பொரியல்

ஃபிரஸான கேரட் காய், தேங்காய் துருவல், மற்றும் சில மசாலாப் பொருட்களுடன் செய்யப்படுகிறது. 

முட்டைக்கோஸ் பொரியல்

வெறும் 15 நிமிடத்தில் செய்யப்படும் கேரள ஓணம் சத்யா சைட் டிஷ்களில் ஒன்றாகும். முட்டைக்கோஸை பொடிப்பொடியாக துருவி, தேங்காய் துருவலை கொண்டு செய்யப்படும் டேஸ்ட்டான ஒரு பொரியல்.

காலன்

இந்த ரெசிபி கேரளாவின் பாரம்பரிய உணவு. இந்த ருசியான உணவு முக்கியமாக கிழங்கு, பச்சை வாழைப்பழம், தேங்காய் மற்றும் தயிர் ஆகியவற்றால் செய்யப்படுகிறது.

பீட்ரூட் பொரியல்

பீட்ரூட் பொரியல் எப்போதும் செய்யப்படுவதான். ஆனால், ஓணம் சத்யாவில் இடம் இந்த பீட்ரூட் பொரியலில் முள்ளங்கியும் சேர்த்து சமைக்கப்படும்.

தட்டைப்பயிர் மசாலா

சேனக்கிழங்கு, தேங்காய் எண்ணெய், தட்டைப்பயிரை கொண்டு செய்யப்படும் சூப்பரான, ஆரோக்கியமான ஒரு டிஷ் இது.

வெண்டக்காய் கிச்சடி

தேங்காய் எண்ணெயில் மிருதுவாக வதக்கி தயாரிக்கப்படும் சூப்பரான டிஷ். 

ரசம்

ரசம் சைவமோ அல்லது அசைவமோ இரண்டிலும் இடம்பெறும் ஒரு டிஷ். அதிகளவிலான உணவு சாப்பிடும்போது ஜீரணத்திற்காக உணவில் சேர்க்கப்படும் ஒரு டிஷ். ஆனால், கேரள ஸ்டைலில் இருக்கும்.

வாழைப்பழ சிப்ஸ்

நேந்திரம் வாழைப்பழத்தை கொண்டு செய்யப்படும் சுவையான சிப்ஸ். இதுவும் சத்யா விருந்தில் இடம்பெறும் ஒரு உணவுப்பொருளாகும்.

அடை பிரதமன்

பச்சரி, வெல்லம், தேங்காயை பயன்படுத்தி தயாரிக்கப்படும் சுவையான பாயசம். எத்தனையோ பாயச வகைகள் இருக்கலாம், அதிலும் மிகவும் முதன்மையானது. 

புளி, இஞ்சி ஜாம்

இஞ்சி, புளி, மசாலாப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பிரபலமான கேரளா ரெசிபி, கெட்டியான ஜாம் போன்ற சமைக்கப்படுகிறது.

அரிசி பால் பாயசம்

அரிசியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் சுவையான கேரள ஸ்டைல் ஸ்வீட் இது. ஓணம் சத்யாவில் இடம்பெறும் முக்கியமான ஒரு ஸ்வீட் ரெசிபி.

பீட்ரூட் பச்சடி

பீட்ரூட், தேங்காய், தயிர் மற்றும் மசாலாப் பொருட்களால் செய்யப்பட்ட கலர்ஃபுல்லான மற்றும் கிரீம் பீட்ரூட் பச்சடி.

மாங்காய் ஊறுகாய்

சர்க்கரை, தயிர், மற்றும் மாம்பழத்தை கொண்டு செய்யப்படும் இனிப்பு மற்றும் காரமான சுவையான ஊறுகாய் இது. எந்த ஒரு விருந்தும் ஊறுகாய் இல்லாமல் முழுமையடையாது.

மோர்

மோர், காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை கொண்டு செய்யப்படும் ருசியான ஆரோக்கியமான மோர். 

சாம்பார்

எல்லா விருந்துகளிலும் இடம்பெறும் மிகவும் முக்கியமான ஒரு ரெசிபி இந்த சாம்பார். பருப்பு மற்றும் பலவிதமான காய்கறிகளை கொண்டு செய்யப்படும் சுவையான சாம்பார்.

அன்னாசி பச்சடி

அன்னாசி, தேங்காய், மசாலாப் பொருட்களால் செய்யப்படும் இனிப்பு அன்னாசி பச்சடி. இத்துடன் நெய், உப்பு, சாப்பாடு மற்றும் வாழைப்பழம் போன்றவையும் அடங்கும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்