Mon ,Jun 17, 2024

சென்செக்ஸ் 76,992.77
181.87sensex(0.24%)
நிஃப்டி23,465.60
66.70sensex(0.29%)
USD
81.57

டிவி பெட்டி

யாரும் எதிர்பார்க்காத புது போட்டியாளர்களுடன் பிக்பாஸ் சீசன் 7.. | Bigg Boss Tamil Season 7

Nandhinipriya Ganeshan July 26, 2023

இந்தியாவின் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோவான 'பிக் பாஸ் தமிழின்' முதல் சீசன் தமிழ் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பொழுதுபோக்கு, நாடகம், சிரிப்பு என அனைத்தையும் கொண்ட இந்த ரியாலிட்டி ஷோவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஒவ்வொரு சீசன் முடிந்ததும் அடுத்த சீசனுக்காக எதிர்பார்த்து காத்திருப்பது வழக்கம். அந்தவகையில், கடந்த ஆறாவது சீசனில் முகமது அசீம் வெற்றியாளாராக தேர்தெடுக்கப்பட்டார். விக்ரமன் ராதாகிருஷ்ணன் இரண்டாவது இடத்தை பிடித்தார். மேலும், இந்த சீசனுக்கு டிஆர்பி ரேட்டிங்கும் மிகவும் அதிகமாக இருந்தது. இந்த நிலையில், ஆறாவது சீசன் முடிவடைந்ததில் இருந்து ஏழாவது சீசனுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது அவர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகவுள்ளது. ஆம்! பிக் பாஸ் தமிழ் 7வது சீசன் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் தமிழ் சீசன் 7 தொடங்கும் தேதி 2023: பிக் பாஸ் தமிழ் 7 சீசன், 08 அக்டோபர் 2023 அன்று ஒளிபரப்பாகவுள்ளது. ப்ரீ புரொடக்ஷன் ஏற்கனவே தொடங்கிவிட்டது, வீட்டு வேலைகள் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறையும் உலகநாயகன் கமல்ஹாசன் தான் நிகழ்ச்சியை மீண்டும் தொகுத்து வழங்கவுள்ளார். முந்தைய சீசனின் அமோக வெற்றியின் காரணமாக இந்த முறை எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. பிக் பாஸ் தமிழ் சீசன் 7 போட்டியாளர்கள் பட்டியல்: ஒவ்வொரு பிக் பாஸ் ரசிகர்களும் பங்கேற்பாளர்களைப் பற்றி அறிய காத்திருக்கிறார்கள். பிக்பாஸ் தமிழ் சீசன் 7ல் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு சில பெயர்களை பட்டியலிட்டுள்ளோம். உமா ரியாஸ் கான் பாவனா மகபா ஆனந்த் கேபிஒய் சரத் ஷிவின் கணேசன் ஆயிஷா மணிகண்ட ராஜேஷ் ரோஷினி ஸ்ரீதரன் ஜனனி அமுதவன் விஜே கதிரவன் ஜாக்குலின் லிடியா ரவீனா தாஹா இர்ஃபான் மிலா சசிலாயா சஞ்சனா சிங் சௌந்தர்யா பாலா டி.எஸ்.கே ஷாலு பிக் பாஸ் முந்தைய சீசன்களின் வெற்றியாளர்கள்: பிக் பாஸ் தமிழ் சீசன் 1: ஆரவ் நபீஸ் பிக் பாஸ் தமிழ் சீசன் 2: ரித்விகா பிக் பாஸ் தமிழ் சீசன் 3: முகன் ராவ் பிக் பாஸ் தமிழ் சீசன் 4: ஆரி அர்ஜுனா பிக் பாஸ் தமிழ் சீசன் 5: தர்ஷன் தியாகராஜா பிக் பாஸ் தமிழ் சீசன் 6: முகமது அசீம் 

விஜய் டிவியில் முற்றிலும் புதுமையாக 'ரெடி ஸ்டெடி போ' சீசன் 3 வரப்போகிறது | Ready Steady Po Season 3

Priyanka Hochumin June 09, 2023

தமிழக மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த 'Ready Steady Po' நிகழ்ச்சி மீண்டும் விஜய் டிவியில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாக உள்ளது. 11 ஜூன் 2023 முதல் வரும் ஒவ்வொரு ஞாயிறும் விஜய் டிவியில் மதியம் 1.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். இந்த முறை பாக்கியலட்சுமி தொடரில் நடித்த எழில் மற்றும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ரக்ஷன் இருவரும் சேர்ந்து ரெடி ஸ்டெடி போ நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளனர்.

KPY தீனாவுக்கு திருமணம்... பொண்ணு யாரு தெரியுமா? | KPY Dheena Marriage Photos

Nandhinipriya Ganeshan June 01, 2023

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தீனா. அதில் சரத் உடன் சேர்ந்து இவர் செய்த காமெடி கலாட்டா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பேமஸ் ஆனது. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஸ்பெஷல் ஷோக்களில் கலந்துகொள்ள வரும் பிரபலங்களுக்கு போனில் அழைத்து அவர்களை சரமாரியாக கலாய்த்து தள்ளி வந்தார் தீனா. அவரின் டைமிங் காமெடி வேறலெவலில் ரீச் ஆனது. இது தவிர தனுஷ் இயக்கிய பவர் பாண்டி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து, தீனாவுக்கு திருப்புமுனையாக கைதி படம் அமைந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் படம் முழுக்க கார்த்தியுடனே பயணிக்கும் கேரக்டரில் நடித்திருந்தார் தீனா.   கைதி படத்துக்கு பின்னர் மீண்டும் லோகேஷ் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற தீனா, மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடித்து அசத்தினார். மாஸ்டர் படத்துக்கு பின்னர் சினிமாவில் தீனாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இதனால் படிப்படியாக வளர்ந்து வந்த தீனா, சமீபத்தில் தன் சொந்த ஊரில் மூன்று அடுக்கில் பிரம்மாண்டமான மாடி வீடு கட்டி பால்காய்ச்சினார். அதன் புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின. இந்நிலையில், புது வீடு கட்டிய கையோடு நடிகர் தீனாவுக்கு திருமணமும் நடந்து முடிந்துள்ளது. கிராபிக் டிசைனரான பிரகதி என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாம். இவர்களது திருமணத்தில் கலக்கப்போவது யாரு சரத் உள்பட ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். தற்போது தீனாவின் திருமண போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வருங்கால கணவருடன் சுற்றுலா சென்ற நடிகை நேர்ந்த பரிதாபம்..

Nandhinipriya Ganeshan May 26, 2023

'சாராபாய் vs சாராபாய்’ என்ற இந்தி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை வைபவி உபாத்யாயா. 2004 - 2006 வரை ஸ்டார் ஒன் சேனலில், ஒளிப்பரான தொடர் ‘சாராபாய் vs சாராபாய்'. இரண்டு சீசன்களாக ஒளிபரப்பான இத்தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதில் வைபவி உபாத்யாயா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தத் தொடருக்கு பிறகு வைபவி பல்வேறு சீரியல்களிலும், பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில், கடந்த மே 23 ஆம் தேதி வைபவி தனது வருங்கால கணவருடன் இமாச்சல் பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றிருந்த போது எதிர்பாராத விதமாக அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கு ஒன்றில் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் வைபவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது வருங்கால கணவரின் நிலை குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

சாலை விபத்தில் இளம் நடிகை மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகினர்..

Nandhinipriya Ganeshan May 23, 2023

பெங்காலில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சுசந்திர தாஸ்குப்தா. இந்த நிலையில் நேற்றைய தினம், சுசத்ரா மேற்கு வங்க மாநிலம் பாரா நகரில் படப்பிடிப்பு முடிந்து பைக் டாக்சியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவர்களின் பைக்கிற்கு முன்னால் திடீரென சைக்கிளில் வந்த நபர் குறுக்கிட்டுள்ளார். இதனால், நிலைதடுமாறி பைக் ஓட்டுநர் மற்றும் நடிகை இருவரும் கீழே விழுந்துள்ளன. அப்போது அவ்வழியாக சென்ற லாரி அவர் மீது மோதியுள்ளது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை மீட்டு பராநகர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர், மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர், நடிகை மீது மோதிய லாரியின் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  29 வயதான இளம் நடிகை சாலை விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

திருமணமான ஒரே மாதத்தில் விவாகரத்தில் முடிந்த விஜய் டிவி பிரபலங்களின் பல வருட காதல்.. காரணம் இதுதான்..!!

Nandhinipriya Ganeshan May 17, 2023

பொதுவாக விஜய் டிவியில் இணைந்து நடிக்கும் ஜோடிகள் காதலித்து திருமணம் செய்துக் கொள்வது வழக்கமான ஒன்று தான். ஆனால், ஒரு சில ஜோடிகளின் காதலை ரசிகர்களால் எதிர்பார்க்க கூட முடியாத அளவிற்கு இருக்கும். அப்படி நடந்த காதல் திருமணம் தான் நடிகர் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தாவின் திருமணம். விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சிப்பிக்குள் முத்து' சீரியலில் ஒன்றாக இணைந்து நடித்த போது, உருகி உருகி காதலித்த சம்யுக்தாவும் விஷ்ணுகாந்தும் கடந்த மார்ச் 3 ஆம் தேதி பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். தற்போது, திருமணமான ஒரே மாதத்தில் இந்த இளம் ஜோடி குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்துள்ளது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தங்களுடைய பிரிவு குறித்து, சீரியல் நடிகரான விஷ்ணுகாந்த் பிரபல ஊடகம் ஒன்றில் பேட்டி ஒன்றை அளித்தார். அதில், பிரைவசியான டைம் மற்றும் பாண்டிங் ஆகுற டைம்ல அவங்க அப்பா வந்து டிஸ்டர்ப் பண்ணுறாரு என்பது போல் பேசி இருந்தார். விஷ்ணுகாந்த் பேசிய பல விஷயங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் சம்யுக்தா. இது குறித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகின்றன. அந்த வீடியோவில், "தனக்கும் விஷ்ணு காந்துக்கும் மார்ச் மூன்றாம் தேதி திருமணமானதாகவும், மார்ச் எட்டாம் தேதி சென்னைக்கு வந்ததாக கூறி உள்ள சம்யுக்தா. அதுவரை ஈரோட்டில் உள்ள விஷ்ணுகாந்தின் வீட்டில் தான் இருந்தோம் என தெரிவித்துள்ளார். மேலும் ஏப்ரல் மூன்றாம் தேதி வீட்டை விட்டு வெளியேறி விட்டேன். சரியாக ஒரு மாதம் மட்டுமே அவருடன் இருந்ததாக தெரிவித்துள்ளார். இருவரும் ஒன்றாக சென்னையில் இருந்த போது, அவருக்கு இரண்டு நாட்கள் மட்டுமே ஷூட்டிங் இருந்தது. எனக்கு மூன்று நாட்கள் ஷூட்டிங் இருந்தது. இதைத் தவிர மற்ற நாட்கள் இருவருமே வீட்டில் தான் இருந்தோம். வேலை என்று எதுவும் இல்லை. ஆனால் விஷ்ணுகாந்த் 15 நாட்கள் ஷூட்டிங் இருந்தது என்று சொல்வதெல்லாம் சுத்த பொய் என்று தெரிவித்துள்ளார்". மேலும், தற்போது பிரச்சனை எனக்கும் விஷ்ணுகாந்துக்கும் மட்டுமே நடக்கிறது. ஆனால் விஷ்ணுகாந்த் என்னுடைய அப்பா பற்றி பேசி இருக்க கூடாது. என்னுடன் பிரச்சனை என்றால் என்னை பற்றி மட்டும் பேசுங்கள் என கூறிய சம்யுக்தா, அவர் கேட்ட பிரைவசி ஆகுறதுக்கும், பாண்டிங் ஆகுறதுக்கும் 24 மணி நேரம் வேணும். நான் அவரை விட 10 வயது சின்ன பொண்ணு அதை கூட நினைத்து மாட்டாரு. நான் அவருக்கு ஒத்துழைக்கணும். நான் அதையும் பண்ணுனேன். அவர் எது சொன்னாலும் சரி சரி என்று தலையை ஆட்டிக்கொண்டு செய்தேன் என கூறியுள்ளார்.

சன் குடும்பம் விருதுகள் 2023: ஒளிபரப்பு தேதி, நேரம், வெற்றியாளர் பெயர்கள் மற்றும் முழு விவரங்கள் | Sun Kudumbam Viruthugal 2023

Gowthami Subramani April 26, 2023

சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அதன் படி சின்னத்திரையில் நடிகர், நடிகைகள் மட்டுமல்லாமல், இயக்கம், தயாரிப்பு, தொழில்நுட்பம் என அனைத்து பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

விஜய் டிவி விருதுகள் 2023: சிறந்த நடிகர், நடிகைக்கான விருதை பெற்றது யாரு தெரியுமா? | Vijay Television Awards 2023 Winners List

Nandhinipriya Ganeshan April 26, 2023

ஸ்டார் விஜய் ஒவ்வொரு வருடமும் சிறந்த நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கி வருகிறது. தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே சின்னத்திரை நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை பாராட்டி வழங்கப்படும் 2வது விருதுகள் நிகழ்ச்சி இதுவாகும். அதுமட்டுமல்லாமல், தமிழ் பொழுதுபோக்கு துறையில் திறமைகளை வளர்ப்பதிலும், நட்சத்திரங்களை வளர்ப்பதிலும் தலை சிறந்த ஒரு தொலைக்காட்சியாகவும் ஸ்டார் விஜய் விளங்குகிறது. இந்த விருதை பெறுவதற்காகவே ஒவ்வொரு ரியாலிட்டி நிகழ்ச்சிகளும், சீரியல்களும் பங்குபெறும் நட்சத்திரங்கள் போட்டி போட்டிக்கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிபடுத்துவார்கள். அந்தவகையில், இந்த வருடத்திற்கான விஜய் டிவி விருதுகள் நடந்து முடிந்துள்ளது. இதில் பல்வேறு நட்சத்திரங்கள் விருதுகள் வென்றுள்ளனர். அந்த போட்டியாளர்களின் பட்டியலை பார்ப்போம். விஜய் டெலிவிஷன் விருதுகள் வின்னர்ஸ் லிஸ்ட் 2023:  ➺ சிறந்த ஹீரோ [Best Hero] - வெங்கட் ரங்கநாதன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் ➺ சிறந்த கதாநாயகி [Best Heroine] - சுசித்ரா - பாக்கியலட்சுமி ➺ சிறந்த துணை நடிகர்  - ஆண் - சரவணன் விக்ரம் - பாண்டியன் ஸ்டோர்ஸ் ➺ சிறந்த துணை நடிகர் - பெண் – தர்ஷிகா – தென்றல் வந்து என்னை தொடும் ➺ சிறந்த குழந்தை கலைஞர் - கண்மணி - மலர் ➺ சிறந்த ஜோடி [Fiction] - சித்தார்த் & கேபிரெல்லா (ஈரமண ரோஜாவே 2) ➺ சிறந்த ஜோடி [Non-Fiction] - மதுரை முத்து & ராமர் ➺ ஆண்டின் கண்டுபிடிப்பு [Fiction] - சுவாதி கொண்டே – ஈரமான ரோஜாவே 2 ➺ ஆண்டின் கண்டுபிடிப்பு [Non-Fiction] - ஷிவின் கணேசன் ➺ சிறந்த நகைச்சுவையாளர் [Fiction] - கஸ்தூரி - பாக்கியலட்சுமி ➺ பிடித்த நகைச்சுவை நடிகர் [Non-Fiction] - குரைஷி - கோமாலியுடன் சமைக்கவும் ➺ சிறந்த தொகுப்பாளர் [ஆண்] - ம கா பா ஆனந்த் ➺ சிறந்த தொகுப்பாளர் [பெண்] - பிரியங்கா தேஷ்பாண்டே ➺ சிறந்த மகன் - VJ விஷால் - பாக்கியலட்சுமி ➺ சிறந்த டப்பிங் கலைஞர் - மீனலோச்சனி ➺ சிறந்த இயக்குனர் - மதியம் - அப்துல் கபீஸ் - தென்றல் வந்து என்னை தொடும் ➺ சிறந்த தொடர் - மதியம் - முத்தழகு ➺ பிடித்த நிகழ்ச்சி - ஓ சொல்ரியா ஓ ஓஓம் சொல்ரியா ➺ சிறந்த தொடர் [Best Serial] - பாக்கியலட்சுமி ➺ தூல் மொமண்ட் விருது [Dhool Moment Award] - DJ பிளாக் ➺ சிறந்த மருமகள் விருது - ஷோபனா - முத்தழகு ➺ சிறந்த தாய் - ரூபா ஸ்ரீ - பாரதி கண்ணம்மா 2 ➺ சிறந்த டிஓபி - சரவணன் (தென்றல் வந்து என்னைத் தொடும்) ➺ சிறந்த இயக்குனர் - தாய்செல்வம் (ஈரமண ரோஜாவே 2) ➺ சிறந்த வில்லி - ரேஷ்மா பசுப்புலெட்டி - பாக்கியலட்சுமி ➺ வளரும் இளம் ஜோடி - பிரியங்கா & சுவாமிநாதன் (காற்றுக்கென வெளி) ➺ பிடித்த பாடகி - ரக்ஷிதா சுரேஷ் ➺ விஜய் டிவியில் 15 வருட பயணம் - சிறப்பு விருது - ஈரோடு மகேஷ் தேதி, நேரம் மற்றும் டெலிகாஸ்ட் விவரங்கள்: ➺ தேதி – 14 மே 2023 ➺ நேரம் – பிற்பகல் 3.00 ➺ டெலிகாஸ்ட் சேனல் – விஜய் டிவி

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் கோபி 'சதீஷ்'.. இதுதான் காரணமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்.. | Baakiyalakshmi Gopi

Nandhinipriya Ganeshan April 24, 2023

விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலாக பட்டைய கிளப்பி வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். பெண் என்பவள் அடிமையாக தான் இருக்க வேண்டுமா என்பதை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கும் இந்த சீரியலுக்கு ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சீரியல் இந்தளவிற்கு டாப் ஹிட் அடிக்க பாக்கியா ஒருபுறம் இருந்தாலும், அதில் இன்னொரு புறம் கோபி கதாப்பாத்திரம் தான் என்றே சொல்லலாம். தனது பக்காவான நடிப்பால் கோபி என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தவர் சதீஷ். இவரை அந்த ரோலில் நடிப்பதற்காக மொத்த ரசிகர்களும் திட்டி வந்தார்கள். ஒரு கணவனாக அவர் தப்பு செய்திருந்தாலும், ஒரு தந்தையாக நல்லவராகவே நடித்துவருகிறார். தற்போது கோபி, ராதிகாவும் அவருடைய வீட்டுக்கே வந்து இருப்பது போன்று கதை நகர்ந்து வருகிறது. இதற்கு அப்பறம் என்ன நடக்குமோ, பாக்கியா வீட்டை விட்டு வெளியேறிவிடுவாரா என பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேலையில், ஒரு ஷாக்கிங் நியூஸ் வெளியாகியுள்ளது. அதாவது, கோபி (சதீஷ்) தான் பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகுவதாக அறிவித்து இருக்கிறார். இந்த முடிவை எடுக்க பல காரணங்கள் இருக்கிறது என குறிப்பிட்டு இருக்கும் அவர், சொந்த காரணங்களுக்காக விலகுவதாக தெரிவித்து இருக்கிறார். இதை அவரே கண்கலங்கியபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த நியூஸ் ஒட்டுமொத்த பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை இவர் விலகினால் அவருக்கு பதில் வேறொருவரை கொண்டுவந்து நடிக்க வைக்கத் தான் போகிறார்கள். இருந்தாலும் இவருடைய இடத்தை நிரப்புவது என்பது சற்று யோசிக்க வேண்டிய விஷயமாக தான் இருக்கிறது.

சைலண்டாக நடந்து முடிந்த விஜய் டிவி சீரியல் ஜோடியின் திருமணம்..

Nandhinipriya Ganeshan March 04, 2023

பொதுவாக விஜய் டிவியில் இணைந்து நடிக்கும் ஜோடிகள் காதலித்து திருமணம் செய்துக் கொள்வது வழக்கமான ஒன்று தான். ஆனால், ஒரு சில ஜோடிகளின் காதலை ரசிகர்களால் எதிர்பார்க்க கூட முடியாத அளவிற்கு இருக்கும். அப்படி தான் இப்போது ஒரு சீரியல் ஜோடி திருமணம் செய்துள்ளனர். சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் காதலித்து வந்த நிலையில் நேற்று (மார்ச் 3) திருமணம் செய்துள்ளனர். சைலண்டாக நடைபெற்ற இவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என வாழ்த்து கூறி வருகிறார்கள்.