Nandhinipriya Ganeshan February 08, 2023
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்காவை சேர்ந்தவர்கள் சந்திரன்- ரேவதி தம்பதியினர். இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். இருளர் இனத்தைச் சேர்ந்த இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவதாக ரேவதி கர்ப்பம் தரித்திருந்தார். இந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில் ரேவதிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதாக தெரிகிறது. பிரசவ வலியால் துடித்த ரேவதியை அருகில் உள்ள களியாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மருத்துவர் சரண்ராஜ், செவிலியர் பிருந்தா ஆகியோர் ரேவதிக்கு பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது காலை 10.15மணியளவில் ரேவதிக்கு அழகான ஆண் குழந்தை 2.9 கிலோ எடையுடன் சுகபிரசவத்தில் பிறந்துள்ளது.
காஞ்சிபுரத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
டாடா ஏசி வாகனம் நிலைகுலைந்த சமயத்தில், பின்னால் வந்த மற்றொரு சரக்கு லாரியும் மோதியுள்ளது. இரண்டு வாகனங்களுக்கும் சிக்கிய டாடா ஏசி வாகனம் முற்றிலும் சிதைந்த நிலையில், அதில் பயணித்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். படுகாயம் அடைந்த 4 பேர் சிகிச்சைக்காக அருகேயுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.
காஞ்சியில பவர் கட்! கரண்ட் எப்ப போகும் எப்ப திரும்ப வரும்...