Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,058.11
-690.31sensex(-0.95%)
நிஃப்டி21,832.60
-223.10sensex(-1.01%)
USD
81.57

தலங்கள்

திருப்பதி ஸ்பெஷல் தரிசனம் டிக்கெட் முன்பதிவு விவரங்கள்..! | Thirupathi Special Darisanam 2024 Ticket Booking Online

Priyanka Hochumin October 17, 2023

ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி கோவில்களில் சிறப்பு தரிசங்கள் நடைபெறும். அந்த தரிசனத்தில் பங்கேற்று கடவுளின் அருளை பெற பக்தர்கள் காத்துக்கொண்டிருப்பார்கள். அதில் பல கோடி பேர் பங்கேற்க விரும்புவதால் பல சிக்கல்கள் நேரலாம். அதனை தவிர்க்க டிக்கெட் முன்பதிவு திட்டத்தை அமல்படுத்தினர். அந்த வகையில், வரும் 2024 ஆம் ஆண்டு எந்தெந்த சிறப்பு தரிசனங்களுக்கு எந்த நாளில், எந்த நேரத்தில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் போன்ற முழு விவரங்களையும் பார்க்கலாம்.

எந்த ராசிக்காரர் எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்.. | 12 Rasi Temples in Tamil

Nandhinipriya Ganeshan July 25, 2023

ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் உள்ளன. இந்த ஒவ்வொரு ராசிக்கும் ஒரு பரிகார கோவில் உள்ளன. எனவே, அந்தந்த ராசிக்குரியவர்கள் தங்களுக்குரிய கோவில்களுக்கு வாழ்க்கையில் ஒருமுறையாவது சென்று வந்தால் வாழ்க்கையில் நிச்சயம் மாற்றங்கள் நிகழும் என்பது ஐதீகம். அந்தவகையில், 12 ராசிக்களுக்கும் உரிய ராசி கோவில்கள் என்ன என்பதை பார்க்கலாம். மேஷ ராசி கோவில்: செவ்வாய் பகவானை ராசி அதிபதியாக கொண்ட மேஷ ராசியினரே! உங்க வாழ்க்கையில் தொடர்ந்து பணப்பிரச்சனைகளை சந்தித்தித்து கொண்டிருப்பீர்கள். அந்த சமயத்தில் ராமேஸ்வரம் மாவட்டத்தில் இருக்கும் இராமநாதசுவாமி கோவிலுக்கு ஒருமுறையாவது சென்று வழிபட்டு வந்தால் நிச்சயம் நல்ல மாற்றம் ஏற்படும். மேலும், கடன் பிரச்சனையில் சிக்கி தவிர்ப்பவர்கள் கூடிய விரைவில் அதிலிருந்து விடுபடுவர். ரிஷப ராசி கோவில்: சுக்கிரனை ராசி அதிபதியாக கொண்ட ரிஷப ராசியினரே! நீங்கள் எவ்வளவு தான் முட்டிமோதினாலும் கைக்கு எட்டிய வாய்ப்புகள் வாய்க்கு எட்டாமல் போய்விடும். இந்த பிரச்சனையில் வெளியில் வர உங்க ராசிப்படி திருவிசநல்லூரில் உள்ள சிவயோகிநாதர் கோவிலுக்கு சென்று வாருங்கள். அப்படி முடியாதவர்கள் திருப்பதிக்கும் சென்று வரலாம். வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து தடைகளும் விலகி முன்னேற்றம் ஏற்படும். மிதுன ராசி கோவில்: புதன் பகவானை ராசி நாதனாக கொண்ட மிதுன ராசியினரே! உங்க வாழ்க்கையில் அதிர்ஷ்டம் என்பது ஒருமுறை தான் கதவை தட்டும். அப்போதே பயன்படுத்தி கொள்ளாமல் பொறுமை பொறுமை என்று எல்லாவற்றையும் கைநழுவவிட்டு கவலையை சுமந்துக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் பழனி மலையில் இருக்கும் தண்டாயுதபாணி சுவாமியை வழிபட்டு வந்தால் கூடிய விரையில் நன்மை உண்டாகும். கடக ராசி கோவில்: சந்திர பகவானை ராசி அதிபதியாக கொண்ட கடக ராசியினரே! நீங்கள் வெற்றியை நோக்கிய பயணத்தில் விடாமுயற்சியுடன் செயல்படுவீர்கள். அதேசமயம் இறுதிக்கட்டத்தை நெருங்கும்போது சோர்ந்துவிடுவீர்கள். இதுவே உங்களுடைய வாழ்க்கையில் பல விஷயங்களில் தோற்றுப்போக காரணம். இதை தவிர்க்க நீங்க திருந்துதேவன்குடியில் அருள் பாலிக்கும் கற்கடேஸ்வரரை ஒருமுறையாவது வழிபட்டு வந்தால் வெற்றி நிச்சயம். அப்படி முடியாதவர்கள் ராமேஸ்வரமும் சென்று வரலாம். சிம்ம ராசி கோவில்: சூரியனை ராசி நாதனாக கொண்ட சிம்ம ராசியினரே! வாழ்க்கையில் எத்தனை தோல்விகளை சந்தித்தாலும், வெற்றியை நோக்கிய பயணத்தில் நிற்காமல் பயணத்திக் கொண்டே இருப்பீர்கள். நீங்கள் நினைத்தது நினைத்தப்படி நடக்க உங்க ராசிப்படி திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீவாஞ்சியம் கோவிலுக்கு ஒருமுறையாவது சென்று வாருங்கள். கன்னி ராசி கோவில்: புதன் பகவானை ராசி அதிபதியாக கொண்ட கன்னி ராசியினரே! முன்ஜென்மத்தில் செய்த பாவங்களுக்கு இந்த ஜென்மத்தில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பீர்கள். எந்த காரியத்திலும் தடை, தாமதம். பணப்பிரச்சனை, குடும்ப சூழல் அனைத்தும் அடுத்தடுத்து துன்பத்தை கொடுக்கும். இவற்றையெல்லாம் சமாளிக்க வேண்டுமென்றால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள். துலாம் ராசி கோவில்: சுக்கிரனை ராசி நாதனாக கொண்ட துலாம் ராசியினரே! உங்களுடைய நேர்மையே உங்களுக்கு பல இன்னல்களுக்கு ஆளாக்கும். அவற்றில் இருந்து தப்பிக்க நீங்கள் செல்ல வேண்டிய கோவில் திருத்தணியில் அருள் பாலிக்கும் முருகனை ஒருமுறையாவது சென்று வழிபாடு செய்துவிட்டு வாருங்கள். நிச்சயம் கெட்டது விலகி நன்மை ஏற்படும். விருச்சிக ராசி கோவில்: செவ்வாய் பகவானை ராசி அதிபதியாக கொண்ட விருச்சிக ராசியினரே! வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்த பிறகே சந்தோஷத்தை பெறுவீர்கள். எந்த செயலும் தடை. விருப்பம் நிறைவேறாது, அப்படியே நிறைவேறினாலும் சில நாட்களே இருக்கும். ஒருசில சமயங்களில் வாழ்க்கையே வெறுக்கு அளவிற்கு சென்றுவிடுவீர்கள். இவற்றையெல்லாம் கடந்து வாழ்க்கையில் நன்மை அதிகரிக்க நீங்க காஞ்சிபுரத்தில் இருக்கும் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சென்று வாருங்கள். தனுசு ராசி கோவில்: குரு பகவானை ராசி அதிபதியாக கொண்ட தனுசு ராசியினரே! எப்போதும் விதண்டாவாதம் பேசும் நீங்கள் மற்றவர்களின் கருத்துகளுக்கும் முன்னுரிமை கொடுப்பது, உங்களை அடுத்த படிக்கு அழைத்து செல்ல உதவி செய்யும் என்பதை உணர்ந்துக் கொள்ள வேண்டும். எத்தனையோ ஏமாற்றம், நெருக்கடியான சூழல் வாழ்க்கையில் சந்தித்திருப்பீர்கள். நீங்கள் மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோவிலுக்கு சென்றுவர அனைத்து துன்பங்களும் நீங்கி நல்ல காலம் பிறக்கும். மகர ராசி கோவில்: சனி பகவானை ராசிநாதனாக கொண்ட மகர ராசியினரே! நீங்கள் செல்ல வேண்டிய ஆலயம் சிதம்பரத்தில் இருக்கும் தில்லை நடராஜர் சுவாமி திருக்கோயில். இங்கு சென்று வழிபட்டு வர, வாழ்க்கையில் இதுவரை சந்தித்த அனைத்து கஷ்டங்களும், துன்பங்களும் நீங்கி நல்ல மாற்றங்கள் உண்டாகும். கும்ப ராசி கோவில்: சனி பகவானை ராசி அதிபதியாக கொண்ட கும்ப ராசியினரே! பணரீதியாக பல பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருப்பீர்கள். தொட்டதுகெல்லாம் செலவு வரும். எவ்வளவு சம்பாதித்தாலும் கைக்கு வரும் பணம் வந்த வேகத்திலேயே காணாமல் போய்விடும். இந்த பணப்பிரச்சனையில் இருந்து விடுபட நீங்க தேவிப்பட்டினத்தில் இருக்கும் திலகேஸ்வரர் கோவிலுக்கு ஒருமுறையாவது சென்று வாருங்கள். கடன் கடலில் மூழ்கியிருந்தாலும் கூடிய விரையில் வெளியில் வந்துவிடுவீர்கள். மீன ராசி கோவில்: குரு பகவானை ராசி அதிபதியாக கொண்ட மீன ராசியினரே! நீங்க அனைத்து விஷயத்தையும் ஏற்ற இறக்கத்துடன் கையாள வேண்டிய நிலை ஏற்படும். கால் பங்கு நல்லது நடந்தாலும், முக்கால் பங்கு தீமையையே சந்திப்பீர்கள். இப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று வாருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

அண்ணாமலையார் கோவிலில் இன்று கிரிவலம் - பக்தர்கள் கூட்டம் அலைமோதல்! | Arunachaleswarar Girivalam

Baskar July 02, 2023

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோவிலில் ரூ .50 தரிசன டிக்கெட் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பக்தர்களின் தவித்து வருகின்றனர்.    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு மாதந்தோறும் பவுர்ணமி நாட்களிலும், கார்த்திகை தீபத்திருநாளன்றும், சித்ரா பவுர்ணமி நாளன்றும் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.     அதன்படி ஆனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல இன்றிரவு 7.45 மணிக்கு தொடங்கி நாளை மாலை 5.48 மணிக்கு நிறைவடைகிறது என்று கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. கோயிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி, கோபூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.     ஏராளமான பத்கர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், குரு பவுர்ணமி என்பதாலும் பக்தர்களின் வருகை அதிகரித்தது. கோயிலில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.    பலர் காலையிலேயே கிரிவலம் சென்றனர். பவுணர்மி இரவு தொடங்குவதால் மாலையில் பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும். குரு பவுர்ணமி என்பதால் லட்சக்கணக்கான பத்கர்கள் கிரிவலம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.     அதேபோல் தெற்கு ரயில்வே சார்பில் சென்னை மற்றும் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அண்ணாமலையார் கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களின்போது மட்டும் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படும்.     பொது தரிசனம் மற்றும் ரூ.50 கட்டண தரிசனத்தில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது பவுர்ணமி நாட்களின்போது ரூ.50 தரிசன டிக்கெட்டும் ரத்து செய்யப்பட்டு அனைத்து பக்தர்களும் பொது தரிசனம் வழியாக விரைவாக சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார்.     அதன்படி பவுர்ணமி நாளான இன்று ரூ.50 தரிசன டிக்கெட் ரத்து செய்யப்பட்டது.அனைத்து பக்தர்களும் பொது தரிசன வரிசையில் அனுமதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. மற்ற நாட்களில் வழக்கம்போல் பொது தரிசனம், ரூ.50 கட்டண தரிசனம், அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் போன்றவற்றில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐயப்பன் ஆலய மஹா கும்பாபிஷேக விழா: நடிகை ரோஜா பங்கேற்பு

Baskarans June 26, 2023

செங்கல்பட்டு: சிங்கபெருமாள் கோயில் அருகே ஜயப்பன் ஆலய மஹா கும்பாபிஷேக விழாவில் நடிகையும், ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா பங்கேறு சாமி தரிசனம் செய்தார். செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் அருகே ஐயப்பன் ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த ஐயப்பசுவாமிக்கு ஶ்ரீ பால சாஸ்தா ஐயப்பன் என திருநாமம் சூட்டப்பட்டுள்ளது. இந்த கும்பாபிஷேக நிகழ்விற்கு சிங்கபெருமாள் கோயில், திருக்கச்சூர், மறைமலைநகர் செங்கல்பட்டு மட்டுமல்லாது நீதிபதிகள், அரசியல் பிரபலங்கள், சென்னையில் இருந்து சினிமா நட்சத்திரங்கள் நடிகை நமீதா, பேபி அஞ்சு மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் நடிகர் கமலேஷ் சின்னத்திரை இயக்குனரும் நடிகருமான திருச்செல்வம் மற்றும் முக்கியமான விஐபிகள் உள்பட இந்த வைபவத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டு ஐயப்ப சுவாமியின் அருளை பெற்று சென்றனர். மேலும் விநாயகர் மற்றும் அம்மன் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த ஆலயம் ஸ்ரீபுதநாத சுவாமி பப்ளிக் சாரிடபிள் அறக்கட்டளையின் கீழ் பொதுமக்களின் ஆதரவோடு மிக சிறப்பாக நடைபெற்றது. ஐயப்பனுக்கு கலசபூஜை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

மதுராந்தகம் அருகே வீரநர்த்தன ஆஞ்சநேயர் திருக்கோவில் மகாகும்பாபிஷேக விழா

Baskarans June 25, 2023

செங்கல்பட்டு: திருமலைவையாவூரில் உள்ள ஸ்ரீ அலமேலு மங்கை சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவிலுக்கு உட்பட்ட லட்சுமி கணபதி வீர நர்த்தன ஆஞ்சநேயர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருமலைவையாவூரில் உள்ள அறநிலை துறைக்கு சொந்தமான ஸ்ரீ அலமேலு மங்கை சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவிலுக்கு உட்பட்ட லட்சுமி கணபதி வீர நர்த்தன ஆஞ்சநேயர் திருக்கோவிலுக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 15ஆம் நூற்றாண்டு விஜயநகர சாம்ராஜ் மன்னரால் நிறுவப்பட்ட திருமலைவையா ஊரில் உள்ள ஸ்ரீ அலமேலு மங்கைசமேதா ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவில் ஆகும். இக் கோயிலுக்கு உட்பட்ட ஸ்ரீ லட்சுமி கணபதி மற்றும் வீர நர்த்தன ஆஞ்சநேயர் திருக்கோயில் புனரமைப்பு பணிகள் கிராம மக்கள் ஒத்துழைப்புடன் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த 22 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் முதல் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலைகள் தொடங்கப்பட்டு தொடர்ந்து மூன்று நாட்கள் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.இன்றுயாகசாலை பூஜைகள் முடிவுற்று கும்பங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு கோயிலை வளம் வந்து கோயில் கோபுர புனித நீரூற்றி பட்டாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நெல்லையப்பர் கோயில் ஆனி பெருந்திருவிழா - கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்! | Arulmigu Nellaiappar Temple

Saraswathi June 24, 2023

திருநெல்வேலியில் உள்ள பிரசித்திபெற்ற நெல்லையப்பர் கோயில் ஆனிப்பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று திருநெல்வேலி நகரில் அமைந்துள்ள அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன்  திருக்கோயில். இங்கு மாதந்தோறும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டுவந்தாலும்,  ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ஆனிப்பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஆனிப்பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. இதையொட்டி,  அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைகள் திறக்கப்பட்டு கஜ பூஜை , கோ பூஜை உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு. கொடிபட்டம் எடுத்துவரப்பட்டு சுவாமி சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் ஏற்றபட்டது. அதைத் தொடர்ந்து, கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இன்று முதல் 10 நாட்கள் இந்த ஆனித் திருவிழா நடைபெறவுள்ளது . ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாள் காலை, மாலை என இரு வேலைகளிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார். மேலும், ஆனிப்பெருந்திருவிழாவையொட்டி, நாள்தோறும் மாலை வேளையில் ஆன்மீக சொற்பொழிவு , கலை நிகழ்ச்சிகள் ஆகியவையும் நடத்தப்படவுள்ளது.   இந்த ஆனிப்பெருந்திருவிழாவின்  சிகர நிகழ்ச்சியான  தேர்த்திருவிழா வரும் 2ம் (ஜூலை.2) தேதி நடைபெறவுள்ளது.  தேர்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் தீவிரமாக மேற்கொண்டுவருகின்றனர். இந்த ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்ற நிகழ்வில் நெல்லை மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Temple for Kettai Natchathiram | கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உரிய கோவில் எங்கு உள்ளது?

Nandhinipriya Ganeshan June 24, 2023

புதன்பகவானின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட இரண்டாவது நட்சத்திரம் கேட்டை. கேட்டையில் பிறந்தவர்கள் கோட்டை கட்டி ஆள்வார்கள் என்ற பழமொழியையும் கேள்விபட்டிருப்போம். கோட்டை கட்டி ஆள்கிறீர்களோ இல்லையோ, கோட்டையில் இருந்து ஆட்சி செய்பவர்களின் நட்பை கொண்டிருப்பீர்கள். தான தர்மங்கள் செய்வதில் வள்ளல். மன தைரியம் சற்று அதிகமாகவே இருக்கும். இயல்பிலேயே நல்ல குணம் கொண்டிருந்தாலும், அடிக்கடி முன்கோபத்தில் வார்த்தைகளை விட்டுவிட்டு பிறகு அதை நினைத்து வருத்தப்படுவீர்கள். நெருங்கிய நண்பர்கள் என்று அதிகம் இருக்கமாட்டார்கள். கிடைத்ததைக்கொண்டு திருப்தியடைவீர்கள். யாருடைய உதவியும் இல்லாமல் சுயமுயற்சியால் எதிலும் முன்னேறுவீர்கள். அடிக்கடி எதையாவது கொரித்துக்கொண்டே இருப்பீர்கள். அடிக்கடி மற்றவர்களிடம் உங்களைப் பற்றி நீங்களே தற்பெருமை பேசிக்கொள்வீர்கள். மற்றவர்களிடம் கைகட்டி வேலை செய்யவே பிடிக்காது. மற்றவர்கள் செய்த உதவியை கடைசி வரை மறக்கவே மாட்டீர்கள். உங்களிடம் இருப்பதை யாரேனும் கேட்டால் சற்றும் தயங்காமல் உடனே கொடுத்துவிடும் குணம் படைத்தவராக இருக்கும் கேட்டை நட்சத்திரக்காரர்களே உங்களுக்கு உரிய கோவில் எது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம். கேட்டை நட்சத்திர கோயில் [Kettai Natchathiram Kovil] கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் ஜாதகத்தில் உள்ள பிரச்சனைகள் விலக செல்ல வேண்டிய ஆலயம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிகோயில் என்ற இடத்தில் அமைந்துள்ள அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில். பெருந்தேவி தாயாருடன் வரதராஜ பெருமாள் மூலவராக அருள்பாலிக்கும் இக்கோயிலுக்கு கேட்டை நட்சத்திரத்துடன் கூடிய செவ்வாய்க் கிழமைகளில் வழிபட்டால் பலன் இரட்டிப்பாக இருக்கும். தல வரலாறு: ராமானுஜர், அவருடைய குருவான பெரிய நம்பிகள் மற்றும் அவருடைய சீடர் கூரத்தாழ்வார் மூவரும் ஸ்ரீரங்கத்தில் தங்கியிருந்தனர். அப்போது, ராமானுஜர் புகழ் பெறுவதை பிடிக்காத ஒரு சோழ மன்னன், அவரை சிறைப்பிடித்து வரும்படி படைகளை அனுப்பினார். ஆனால் அவர்களுக்கு ராமானுஜரை அடையாளம் தெரியாது. எனவே, சீடர் கூரத்தாழ்வார், ராமானுஜர் போன்று வெள்ளைநிற ஆடை அணிந்துக்கொண்டு நான் தன ராமானுஜர் என்று சொல்லி சோழ படையினருடன் சென்றார். அவருடன் பெரிய நம்பிகளும் அவரது மகள் திருத்துழாயும் சென்றனர். அரண்மனைக்கு சென்றபின், பெரியநம்பியிடமும், கூரத்தாழ்வாரிடமும், வைணவத்தை விட சைவம் தான் பெரிய மதம் என்று எழுதித்தரும் படி மன்னன் சொல்ல, அதை அவர்கள் மறுத்துவிட்டார்களாம். அதனால் கோபமடைந்த மன்னன் அவர்கள் இருவரின் கண்களையும் பறிக்கும் படி கூறினான். கூரத்தாழ்வார், தன் கண்களை தானே குத்திக்கொண்டு பார்வையை இழந்தார். பிறகு சோழ வீரர்கள் பெரியநம்பிகளின் கண்களைக் குருடாக்கினர். அவருடைய மகள் திருத்துழாய் பார்வையிழந்த இருவரையும் ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து சென்றார். செல்லும் வழியில் பசுபதிகோயில் என்ற இடத்தை அடைந்தபோது, 105 வயதான பெரிய நம்பிகள் கண்களை இழந்ததால் நகர முடியாமல் போராடினார். அப்போது அவருக்கு காட்சி தந்த வரதராஜப் பெருமாள், அவர் தங்கியிருந்த அந்த தலத்திலேயே மோட்சம் வழங்கினார். ஸ்ரீராமானுஜர் பிற்காலத்தில் இக்கோயிலுக்கு வந்து பெரிய நம்பிக்கு தனி சன்னதி எழுப்பியதாக கூறப்படுகிறது. தல சிறப்பு:  மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் அவதரித்த பெரியநம்பிகளுக்கு இத்தலத்தில் திருநட்சத்திர விழா நடைபெறும். மாதந்தோறும் வரும் கேட்டை நட்சத்திரத்திலும் இவருக்கு பூஜை நடக்கும். கேட்டை நட்சத்திரக்காரர்கள், தங்களுடைய ஜாதக தோஷம் நீங்க இவரிடம் வந்து வேண்டிக்கொள்ளலாம். வழிபாடு செய்யும்போது இவருக்கு வெள்ளைநிற வஸ்திரம், மல்லிகைப்பூ மாலை அணிவித்து, அதிரசம் மற்றும் வடை நைவேத்யம் படைத்து, மருதாணி இலை, கரிசலாங்கண்ணி, செம்பருத்தி ஆகிய மூன்றும் சேர்த்த எண்ணெயில் தீபமேற்றி வழிபட்டால் இரட்டிப்பு பலன். இந்த எண்ணெய் கோயிலிலேயே கிடைக்கிறது. குறிப்பாக கண் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கூரத்தாழ்வாரிடம் வேண்டிக் கொண்டால் விரைவில் குணமடையும் என்று நம்பப்படுகிறது. கோவில் திறக்கும் நேரம்: ஆலயம் காலை 05.30 மணி முதல் 12.00 மணி வரையிலும், மீண்டும் மாலை 04.30 மணி முதல் இரவு 08.30 மணி வரையிலும் திறந்திருக்கும். எனவே, வெகு தொலைவில் இருந்து செல்ல நினைப்போர் இந்த நேரத்திற்கு ஆலயத்தை சென்றடையும் படி திட்டமிட்டுக்கொள்வது சிறந்தது.  இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கிமீ தூரத்திலுள்ள பசுபதிகோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்து அரை கிமீ தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. தொடர்புக்கு: +91 97903 42581, 94436 50920

Temple for Anusham Natchathiram | அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உரிய கோவில் எங்கு உள்ளது?

Nandhinipriya Ganeshan June 22, 2023

சனிபகவானின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட இரண்டாவது நட்சத்திரம் அனுஷம். செவ்வாய் பகவானை அதிபதியாக கொண்ட அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்க, மற்றவர்களை காட்டிலும் மாறுபட்ட சிந்தனை கொண்டவர்களாகவே இருப்பீர்கள். பெற்றோரிடம் அன்பு செலுத்துவதில் உங்களுக்கு நிகர் நீங்களே. கடைசிவரை அவர்களை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர். அமைதியின் சிகரமான நீங்கள் உண்மையை மட்டுமே பேசவேண்டும் என்று நினைக்கும் குணம் கொண்டவர். இருப்பினும், உங்களை யாராவது வம்பிற்கு இழுத்தால் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவீர்கள். யார் தவறு செய்தாலும், அவர்கள் எத்தகைய உயர்நிலையில் இருந்தாலும் தட்டிக் கேட்கத் தயங்கவே மாட்டீர்கள். தெய்வபக்தி என்பது சற்று அதிகமாகவே இருக்கும். இறக்க குணம் உங்க பிறவிலேயே உங்களுடன் பிறந்துள்ளது. தன்னம்பிக்கை கொஞ்சம் குறைவு; ஆனால், ஆழ்ந்த அறிவு உண்டு. அழகான தோற்றமும் கலையுணர்வும் கொண்ட நீங்கள் எந்த விஷயத்திலும் பொறுப்புடன் செயல்படுவீர்கள். நீங்கள் ஆண்களாக இருந்தால் பெண்களாலும், பெண்களாக இருந்தால் ஆண்களாலும் விரும்பப்படுவீர்கள். எடுத்த காரியத்தை எப்பாடுபட்டாவது முடித்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பீர்கள். சந்தர்ப்பச் சூழ்நிலைக்கு ஏற்ப வாழப் பழகிக்கொள்வீர்கள். வாழ்க்கையில் எத்தனை ஏற்ற இறக்கங்கள் வந்தாலும் அதனால் மனம் சோர்ந்து போக மாட்டீர்கள். எப்போதும் எளிமையாக இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். அனைவரிடமும் எவ்வித பாகுபாடுமின்றி ஒரே மாதிரி பழகும் நல்லுள்ளம் படைத்த அனுஷம் நட்சத்திரக்காரர்களே உங்களுக்கு உரிய கோவில் எது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம். அனுஷம் நட்சத்திர கோயில் [Anusham Natchathiram Kovil] அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் ஜாதகத்தில் உள்ள பிரச்சனைகள் விலக செல்ல வேண்டிய ஆலயம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் திருநின்றியூர் அல்லது திரிநின்றஊர் என்ற இடத்தில் அமைந்துள்ள அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில். சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கும் இந்த மகாலட்சுமிபுரீஸ்வரர் கோயிலுக்கு வாழ்க்கையில் ஒருமுறையாவது சென்று வருவதன் மூலம் வாழ்க்கையில் நிச்சயம் நல்ல மாற்றங்கள் நிகழும். தல வரலாறு: ஜமதக்னி மகரிஷியின் மனைவி ரேணுகா. இவர் குளத்தில் சென்று தண்ணீர் எடுத்து வருகையில் ரேணுகா கந்தர்வன் ஒருவனின் அழகை நீரில் கண்டு வியந்தால். இதை அறிந்த மகரிஷி ரேணுகாவின் தலையை வெட்டும்படி மகன் பரசுராமரிடம் கட்டளையிட்டார். பரசுராமனும் தாய் என்று கூட பாராமல் தாயின் தலையை துண்டாக்கினான். அதன்பிறகு தந்தையிடம் வரம் பெற்று தாயை உயிர்ப்பித்தான். தாயைக்கொன்ற தோஷம் நீங்குவதற்காக இத்தலத்தில் அவன் வழிபட்டு மன அமைதி பெற்றான். ஜமதக்னியும் தான் அவசரத்தில் செய்த செயலுக்கு வருந்தி இங்குள்ள சிவனை வணங்கி மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அப்போது சிவன் இருவருக்கும் காட்சி தந்தார். மகாலட்சுமியும் இத்தலத்தில் சிவனை வழிபட்டு அருள் பெற்றதால், இங்குள்ள சிவன் மகாலட்சுமீஸ்வரர் என்றும், அம்மன் உலகநாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள். தல சிறப்பு:  சோழ மன்னன் ஒருவர் தினமும் சிதம்பரம் நடராஜரை தரிசித்து வருவதற்காக, இந்த ஆலயம் அமைந்திருக்கும் வழியாகவே சென்று வந்துள்ளார். ஒருசமயம் அவர் இத்தலத்தை கடந்து சென்றபோது, காவலாளிகள் கொண்டு சென்ற திரி அணைந்து விட்டது. அதனை மீண்டும் எரிய வைக்க முயற்சி செய்தும் முடியாமல் போய்விடுகிறது. ஆனால், அவர்கள் இத்தலத்தை கடந்து சென்றபோது திரி தானாகவே எரியத் துவங்கியது. இது தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. இதற்கு என்னதான் காரணம் என்று மன்னன் சிந்திக்க, அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு நாள் அப்பகுதியில் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்த இடையனிடம் இக்கோயிலில் மகிமையான நிகழ்ச்சிகள் நிகழுமா எனக் கேட்டார். அதற்கு அவன், மன்னரே! இந்த பகுதியில் லிங்கம் ஒன்று உள்ளது. அதில் நான் மேய்க்கும் பசுக்களில் சில தானாகவே பால் சொரிகின்றது என்றான். உடனே மன்னன் அப்பகுதிக்கு சென்று சிவலிங்கத்தை கண்டு, அதை வெளியே எடுக்க முயற்சி செய்தார். அப்போது தோண்டும்போது ரத்தம் வெளிப்பட்டது. எனவே, அந்த இடத்திலேயே அனுஷம் நட்சத்திர தினத்தில் கோயில் எழுப்பி வழிபட்டார். மேலும், திரி அணைந்த தலம் என்பதால், 'திரிநின்றியூர்' என்றும், மகாலட்சுமி வழிபட்டதால் 'திருநின்றியூர்' என்றும் பெயர் பெற்றது. நவக்கிரகத்தில் உள்ள சூரியனும், சந்திரனும் ஒருவரையொருவர் நேரே பார்த்தபடி இருப்பது வித்தியாசமான அமைப்பு. எனவே, அமாவாசை நாட்களில் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். சிவலிங்கத்தின் பாணத்தில் தற்போதும் கோடரி வெட்டிய தழும்பு இருக்கிறது. மேலும், பரசுராமர் வழிபட்ட சிவன் பிரகாரத்தில் பரசுராமலிங்கமாக இருக்கிறார். இக்கோயிலை சுற்றி மூன்று குளங்கள் இருக்கின்றன. பிரகாரத்தில் செல்வ விநாயகருக்கு சன்னதி ஒன்று உள்ளது. அனுஷம் நட்சத்திரத்தன்று இவருக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. கடன் தொல்லை உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால் தீர்வு ஏற்படும் என்பது நம்பிக்கை. மற்றொரு சிறப்பு வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியர் வலது புறம் திரும்பிய் மயில் வாகனத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு சிவனுக்கு மாதுளம்பழ முத்துக்களால் அபிஷேகம் செய்து வழிபடுவது விசேஷம். திருவிழாக்கள்: இக்கோயிலில் ஆனித்திருமஞ்சனம், சிவராத்திரி, திருக்கார்த்திகை ஆகியவை இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. கோவில் திறக்கும் நேரம்: ஆலயம் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மீண்டும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். எனவே, வெகு தொலைவில் இருந்து செல்ல நினைப்போர் இந்த நேரத்திற்கு ஆலயத்தை சென்றடையும் படி திட்டமிட்டுக்கொள்வது சிறந்தது.  இருப்பிடம்: மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கிமீ தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. தொடர்புக்கு: +91 4364 279 423 / +91 94861 41430.

Temple for Punarpoosam Natchathiram | புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உரிய கோவில் எங்கு உள்ளது?

Nandhinipriya Ganeshan June 09, 2023

ஸ்ரீராமபிரானின் அவதார நட்சத்திரம் புனர்பூசம் அல்லது புனர்வசு. இதன் முதல் மூன்று பாதங்கள் மிதுனராசியிலும், கடைசி பாதம் கடகராசியிலும் இடம்பெறும். தந்தையின் சொல்லை கேட்டு நடப்பதிலும், எந்த கஷ்டங்களையும் பொறுமையுடன் சகித்துக்கொள்வதிலும், மற்றவர்களின் மகிழ்ச்சிக்காக எதையும் தியாகம் செய்வதிலும் உங்களுக்கு நிகர் நீங்கள் தான். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் சத்தியத்துக்கும் தர்மத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பதில் வல்லவர். குருபகவானை அதிபதியாக கொண்ட நீங்கள் சாந்தமான சாத்விக குணம் படைத்தவர்களாக இருப்பீர்கள். அதேசமயம், சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். மற்றவர்களும் அப்படியே நடக்க வேண்டுமென்று வலியுறுத்துவீர்கள். உங்களுக்கு நீண்ட தூரம் நடப்பது மிகவும் பிடித்தமான விஷயமாக இருக்கும். தெய்வ பக்தி அதிகக்கொண்ட நீங்கள், அடிக்கடி கோயில் விழாக்களில் அன்னதானம் செய்ய விரும்புவீர்கள். மனிதர்களை மட்டுமல்லாமல் அனைத்து ஜீவராசிகளையும் முழுமனதுடன் நேசிக்கும் குணம் கொண்டிருப்பீர்கள்.  சாதுர்யமாக பேசிப் பல காரியங்களை சாதித்துக்கொள்ளும் நீங்கள் யாருக்காகவும் உங்களை மாற்றிக்கொள்ள மாட்டீர்கள். சுயகௌரவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவராகவும் இருப்பீர்கள். எவருக்கும் பயப்படாமல் கம்பீரமாகவும், நேர்மையாகவும் வாழ்வீர்கள். பெண் குழந்தைகளிடம் மிகுந்த பிரியம் கொண்டவராகவும் இருப்பீர்கள். உதவி என்று கேட்டு வந்தவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை எந்தவொரு விளம்பரமும் இல்லாமல் செய்யும் அன்பு குணம் உங்களிடம் இருக்கும். அவசியத் தேவையென்றால் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வீர்கள். குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக சொந்த சுகத்தைக்கூட தியாகம் செய்யக்கூடிய நல்லுள்ளம் படைத்த புனர்பூசம் நட்சத்திரக்காரர்களே உங்களுக்கு உரிய கோவில் எது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம். புனர்பூசம் நட்சத்திர கோயில் [Punarpoosam Natchathiram Kovil] புனர்பூசம் அல்லது புனர்வசு நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் ஜாதகத்தில் உள்ள பிரச்சனைகள் விலக செல்ல வேண்டிய ஆலயம் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் வாணியம்பாடி என்ற இடத்தில் அமைந்துள்ள அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில். சிவபெருமானை மூலவராக கொண்ட இக்கோயிலுக்கு வாழ்க்கையில் ஒருமுறையாவது சென்று வருவதன் மூலம் வாழ்வில் பல திருப்பங்கள் நிகழ்வதோடு, செல்வ விருத்தியடையும். மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை கிடைப்பதில் சிரமம் உள்ளவர்கள் மற்றும் திருமணம் ரீதியான மற்ற பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள் இங்கு வழிபட்டால் நிச்சயம் நிவாரணம் கிடைக்கும்.  தல வரலாறு: பிரம்மா ஒருமுறை சரஸ்வதி தேவியிடம் உலக உயிர்களை படைக்கும் நான் தான் பெரியவன்; அதனால் தான் பிரம்மா, விஷ்ணு, சிவன் என என்னுடைய பெயரை முதலில் வைத்து கூறுகிறார்கள் என்று கூறினார். இதைக்கேட்டு கலைமகளுக்கு சிரிப்பு வந்தது. கோபடைந்த பிரம்மா, வாணியை பேசும் சக்தியற்றவளாக மாறும்படி சாபமிட்டார். இதனால், சினம் கொண்ட அன்னை சரஸ்வதி தேவி சாபம் தீர சிருங்கேரி என்னும் தலத்தில் தவம் மேற்கொண்டாள். வாணியை பிரிந்த பிரம்மா, தேவர்களை திருப்திப்படுத்தி யாகம் செய்து, அவர்கள் மூலம் மனைவியை கண்டுபிடிக்க முயற்சித்தார்.  ஆனால், மனைவி இல்லாமல் செய்யும் யாகத்தின் பலனைத் தங்களால் பெற முடியாது என்று தேவர்கள் சொல்லிவிட்டனர். எனவே, பலதிசைகளிலும் தேடி, இறுதியாக சிருங்கேரியில் சரஸ்வதி தேவியை கண்டுபிடித்தார். அவளை சமரசம் செய்து அழைத்து செல்லும் வழியில் பாலாற்றின் வடகரையில் அமைந்துள்ள சிவ ஆலயத்தில் தங்கினார்கள். இதனால் மகிழ்ச்சியடைந்த சிவனும், பார்வதியும் சரஸ்வதி தேவிக்கு அருள்புரிந்து பாடும்படி கூறினர். சரஸ்வதி தேவியும் பேசும் சக்தி பெற்று இனிய குரலில் பாடினாள். (கலை) வாணி பாடிய தலம் என்பதால், இவ்வூருக்கு 'வாணியம்பாடி' என்ற பெயர் வந்தது. தல சிறப்பு:  சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாய்ந்த இக்கோயிலில் புனித காஷ்யப முனிவரின் மனைவியான அதிதி ஒவ்வொரு புனர்பூசம் தினத்திலும், விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டு தேவர்களை பெற்றார். இதனால் தான், இங்குள்ள சிவபெருமான் 'அதிதீஸ்வரர்' என அழைக்கப்படுகிறார். மேலும், வாணி வழிபட்டு அருள் பெற்ற கோவில் என்பதால், குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பு இங்குள்ள வாணியை வழிபட்டு செல்வது சிறப்பு. அதுமட்டுமல்லாமல், ஓட்டல் தொழில் செய்பவர்கள், வியாபார விருத்திக் காக அதிதீஸ்வரரை வழிபாடு செய்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்கிறார்கள். இந்த கோவிலின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், மேற்கு திசையை பார்த்தவாறு அமையப்பெற்ற இக்கோவிலை வழிபட்டால், ஆயிரம் கிழக்கு பார்த்த கோவிலை வழிபட்ட பலன் கிடைக்குமாம். இக்கோவிலில் அம்மன் பெரியநாயகி தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். இங்குள்ள தட்சிணாமூர்த்தி மான், மழு ஏந்தி, யோக பட்டை, சின் முத்திரையுடன் நந்தி மீது அமர்ந்து காட்சி தருகிறார்.  திருவிழாக்கள்: ஏப்ரல்-மே மாதங்களில் சித்திரை பிரம்மோத்ஸவம், பிப்ரவரி-மார்ச் மாதங்களில் மகாசிவராத்திரி மற்றும் டிசம்பர் - ஜனவரி மாதங்களில் மார்கழி திருவாதிரை ஆகியவரை இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. கோவில் திறக்கும் நேரம்: ஆலயம் காலை 06.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மீண்டும் மாலை 05.00 மணி முதல் 07.00 மணி வரையிலும் திறந்திருக்கும். எனவே, வெகு தொலைவில் இருந்து செல்ல நினைப்போர் இந்த நேரத்திற்கு ஆலயத்தை சென்றடையும் படி திட்டமிட்டுக்கொள்வது சிறந்தது.  எப்படி செல்வது? இக்கோயிலானது வாணியம்பாடி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கிமீ தூரத்திலும், வாணியம்பாடி ரயில் நிலையத்திலிருந்து 4 கிமீ தூரத்திலும், ஜோலார்பேட்டையிலிருந்து 20 கிமீ தூரத்திலும், திருப்பத்தூரிலிருந்து 23 கிமீ தூரத்திலும், வேலூரிலிருந்து 70 கிமீ தூரத்திலும் மற்றும் சென்னையில் இருந்து 206 கிமீ தூரத்திலும் உள்ளது. இக்கோயிலுக்கு ரயில் மூலமாக செல்வதாக இருந்தால் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை வந்தடைய வேண்டும். இருப்பிடம்: வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில் 67 கிமீ தொலைவில் வாணியம்பாடி உள்ளது. பேருந்து நிலையத்தில் இருந்து 3 கிமீ தூரத்தில் உள்ள பழைய வாணியம்பாடியில் இக்கோயில் அமைந்துள்ளது. தொடர்புக்கு: +91 4174 226 652 / +91 99941 07395 / 93600 55022.

திருப்பதி ஏழுமலையானுக்கு மற்றொரு புதிய கோவில்.. | Jammu Tirupati Balaji Temple

Nandhinipriya Ganeshan June 09, 2023

உலகப் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக திகழ்வது திருப்பதி வெங்கடாஜலபதி கோவில். ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் திருமலையில் அமைந்துள்ள இந்த கோவிலில் அருள்பாலிக்கும் திருப்பதி வெங்கடாஜலபதிக்கு பாலாஜி, பெருமாள், வெங்கடேச பெருமாள், சீனிவாச பெருமாள், ஏழு மலையான் என பல பெயர்கள் உண்டு. சர்வதேச அளவில் பணக்கார கோவில்களில் ஒன்றாகவும் திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு உலகளவில் இருந்தும் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். அதுவும் விடுமுறை நாட்களில் பெருமாளின் தரிசனம் கிடைக்க கிட்டத்தட்ட 10 நாட்களாவது காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அனைத்து மக்களாலும் திருப்பதிக்கு செல்ல முடியாமலும் போய்விடுகிறது. இதைக் கருத்தில் கொண்டு திருப்பதி தேவஸ்தானம் திருப்பதி ஏழுமலையான் கோவில் போலவே நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கோவில்களை கட்டி வருகிறது.  அந்தவகையில், இதுவரை டெல்லி, சென்னை, ஹைதராபாத், கன்னியாகுமரி மற்றும் புவனேஷ்வர் ஆகிய ஐந்து இடங்களில்  திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானத்தால் கட்டப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து தற்போது திருப்பதி ஏழுமலையானுக்கு ஆறாவது கோவிலாக ஜம்மு காஷ்மீரில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. ஜம்முவில் அமைந்துள்ள மஜீனில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் ஷிவாலிக் காடுகளுக்கு மத்தியில் 62 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.33 கோடி செலவில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், ஜம்முவில் இதுவரை கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய கோவில்களில் ஒன்றாகவும் இந்த கோவில் உள்ளது.  புகழ்பெற்ற வைஷ்ணோ தேவி கோவில் அமைந்திருக்கும் ஜம்மு-கத்ரா பகுதிகளுக்கு இடையே இந்த ஏழுமலையான கோவில் அமைந்துள்ளது. வட இந்தியாவில் உள்ள ஒரே வெங்கடேஸ்வரா கோவில் இது தான். ஒன்றரை வருட காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவில் அப்பகுதியில் ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திராவில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரதிபலிப்பாக விளங்கும் இந்த கோவிலிலும் லட்டு பிரசாதமாக வழங்கப்படும். ஆக இனி ஆந்திராவிற்குச் செல்ல முடியவில்லையே என்ற கவலையே வேண்டாம்.  இடம்: ஜம்முவில் அமைந்திருக்கும் திருப்பதி பாலாஜி கோவிலானது, குஞ்ச்வானி - மாலிக் மார்க்கெட் - நர்வால் - சித்ரா சாலை வழியாக ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையுடன் ஜம்மு-பதான்கோட் நெடுஞ்சாலையை இணைக்கும் பைபாஸ் பகுதியில் அமைந்துள்ளது.