Sun ,Mar 26, 2023

சென்செக்ஸ் 57,527.10
-398.18sensex(-0.69%)
நிஃப்டி16,945.05
-131.85sensex(-0.77%)
USD
81.57

நடிகைகள்

வாவ்.. மஞ்சள் சேலையில் மயக்கும் கிளாமர்.. அழகில் சொக்க வைத்த ஸ்ரேயா..

Nandhinipriya Ganeshan February 22, 2023

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் ஸ்ரேயா சரண். இவர் ரஜினி, தனுஷ், விஜய், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக தனது எதார்த்தமான நடிப்பில் பல லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடித்தவர். கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த டென்னிச் வீரர் ஆன்றோ கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட ஸ்ரேயாவுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. சுமார் 3 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்களை இன்ஸ்டாகிராமில் வைத்துள்ள ஸ்ரேயா அவ்வப்போது தனது குடும்பத்துடனான போட்டோவை பதிவிடுவது வழக்கம். இந்த நிலையில், சமீபத்தில் மஞ்சள் சேலையில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். சேலையில் கூட இப்படி கிளாமர் காட்டலாமா என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு இருக்கும் இந்த போட்டோஸ் பதிவு செய்த கொஞ்ச நேரத்திலேயே பல லட்சக்கணக்கான லைக்ஸ்களை வாங்கி குவித்துவருவதோடு, இணையத்திலும் வைரலாகி வருகிறது.

இப்படி காமிச்சா எப்படி நாங்க தூங்குறது... குமுறும் நெட்டிசன்கள்!

UDHAYA KUMAR February 08, 2023

நடிகை தன்யா ரவிச்சந்திரனின் லேட்டஸ்ட் புகைப்படங்களைப் பார்த்தவர்கள் இப்படி கமெண்ட் செய்து வருகிறார்கள். இம்முறை இலைமறை காயாக கொஞ்சம் கிளாமரே காட்டியிருக்கிறார் தன்யா. தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமான தன்யா, நெஞ்சுக்கு நீதி, பலே வெள்ளயத்தேவா, பிருந்தாவனம், கருப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவர் மலேசிய தமிழ் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி ஆவார். தாத்தாவைப் பார்த்து சினிமாவில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டவர், தாயாரை பார்த்து நடனம் கற்றுக் கொண்டுள்ளார். தன்யாவின் தாயார் லாவண்யா ஒரு பாரம்பரிய நடனக் கலைஞர். தன்யாவும் சரி அவரது சகோதரி அபரஜிதாவும் சரி பரதநாட்டியத்தில் பயிற்சி பெற்று திறமையை வளர்த்துக் கொண்டனர். கடந்த 2016ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் மைத்ரேயாவுக்கு ஜோடியாக நடிக்க ஆடிசனில் வெற்றி பெற்றார் தன்யா. பலே வெள்ளயத்தேவா படத்தில் சசிக் குமார் ஜோடியாக அறிமுகமான இவர், அதன் பிறகு அருள் நிதி ஜோடியாக பிருந்தாவனம் படத்திலும் நடித்தார். இது ஊட்டியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு காமெடித் திரைப்படமாகும். பின்னர் விஜய் சேதுபதியுடன் இணைந்து கருப்பன் படத்தில் நடித்தார். இந்த படத்தில் இடம்பெற்ற பாடலின் மூலமே இவர் பலருக்கும் அறிமுகமானார். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

ஹனிரோஸின் கிளாமர் ஃபோட்டோ.. எக்குத்தப்பாய் வர்ணிக்கும் ரசிகர்கள்!

UDHAYA KUMAR February 07, 2023

மலையாள நடிகைகள் எப்போதும் வளமும் அழகும் நிறைந்து காணப்படுவார்கள். தேங்காயும் தேங்காய் எண்ணையும் கிழங்கும், மழையும் அதற்கு காரணமாக பல படங்களில் கூறப்பட்டாலும் அவர்கள் இயற்கையாவே அழகானவர்கள்தான் போல. யாரைப் பார்த்து இப்படி முடிவு செய்வீர்களோ இல்லையோ ஹனிரோஸைப் பார்த்தவுடன் உங்களுக்கு அப்படித்தான் தோன்றும். அழகிகளுக்கெல்லாம் அழகி என சமூக வலைத்தளங்களிலேயே பட்டம் சூட்டு விழா நடைபெற்று அவரது புகைப்படங்களை லைக்கிட்டு தள்ளுகின்றனர் ரசிகர்கள். சமீபத்தில் நடித்த தெலுங்கு படம் ஒன்றில் அம்மணி காட்டாத கவர்ச்சி இல்லை. அப்படி காட்டி நடித்து ரசிகர்களின் மனதை கிள்ளிவிட்டார் என்கிறார்கள். ஹனிரோஸின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

வயசு 41.. ஆனா என்ன கவர்ச்சியில் குதூகலிக்கும் கமல் பட நடிகை!

UDHAYA KUMAR February 07, 2023

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து நடிகையானவர்களில் அபிராமியும் ஒருவர். இவர் கமல்ஹாசன் ஜோடியாக விருமாண்டி படத்தில் நடித்து புகழ் பெற்றார், பிரபு உள்ளிட்ட மற்ற நடிகர்களுடனும் படங்களில் ஜோடியாக நடித்திருக்கும் அபிராமி சமீப நாட்களில் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வருகிறார். கேரளத்தில் 1983ம் ஆண்டு பிறந்த இவரின் இயற்பெயர் திவ்யா. அமெரிக்காவில் பணிக்கு சென்று பின் சினிமாவுக்காக இந்தியா திரும்பி வந்தார் அபிராமி. அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய கதாபுருசன் படத்தில் நடிகையாக அறிமுகமானார் அபிராமி. ஏசியாநெட்டில் கல்லூரி காலத்தில் தொகுப்பாளராக பணியாற்றியிருக்கிறார். கமல்ஹாசன் இயக்கத்தில் வெளியான விஸ்வரூபம் படத்தில் பூஜாகுமாருக்கு வாய்ஸ்ஓவர் கொடுத்தது அபிராமிதான். இவருக்கு 41 வயது ஆனாலும் இன்னும் இவரது கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களைச் சுற்றி வருகின்றன. இன்னமும் இளமையாக இவர் இருப்பதற்கு காரணம் இவர் கேரள வரவு என்பதுதான் என்கிறார்கள். இத்தனை வயதிலும் அழகாக மின்னும் சருமம் கொண்ட கேரளத்து தேவதையாக காட்சியளிக்கிறார் அபிராமி.

கிளாமரில் இறங்கிய அனிகா... என்னங்க இப்படி பண்றீங்க!

UDHAYA KUMAR February 07, 2023

பேபி அனிகா என்று அறிமுகமாகி இப்போது நடிகையாக மாறியிருக்கும் அனிகா சுரேந்திரன் தற்போது தெலுங்கு, மலையாளம், தமிழ் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விஸ்வாசம் படத்தில் நடித்ததிலிருந்து மிகப் பிரபலமான அனிகா, தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் தொடர்ந்து நடித்து வருகிறார். கதை துடாருன்னு, என்னை அறிந்தால், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தவர் நடிப்புக்காக பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். கேரள மாநிலம் மஞ்சேரியில் பிறந்த இவர் அறிமுகமானது கதை துடாருன்னு எனும் மலையாள படத்தில்தான். குயின் எனும் வெப் தொடரில் சிறு வயது ஜெயலலிதாவாக நடித்தவர் நடிப்பில் பலரையும் கவர்ந்தார். 15 வயதிலேயே நடிக்கத் துவங்கிய அனிகா இப்போது கதாநாயகியாக அறிமுகமாகும் காலம் நெருங்கிவிட்டது. கிளாமருக்கு எஸ் சொல்லி பச்சைக் கொடி காட்டியிருக்கிறார் அனிகா. தயாரிப்பாளர்களின் கண்களில் படும் படியாக பல கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வலம் வரச் செய்கிறார். சிகப்பு உடையில் அவர் லேட்டஸ்ட்டாக எடுத்திருக்கும் ஃபோட்டோஷூட்டுக்கு ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

கல்லூரி விழாவில் நயன்தாரா! கலக்கல் புகைப்படங்கள்

UDHAYA KUMAR February 07, 2023

நடிகை நயன்தாரா சமீபத்தில் கலந்து கொண்ட கல்லூரி விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகின்றன. கல்லூரி விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் மாணவர்களுக்கு நல்ல அறிவுரையும் வழங்கி கலகலப்பாக கொண்டு சென்றார். நயன்தாராவைக் காண பல ரசிகர்கள் அரங்கத்தில் திரண்டு இருந்தனர். சென்னை அருகே தனியார் கல்லூரி ஒன்றில் 35 ஆண்டு வெற்றி விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகை நயன்தாரா அழைக்கப்பட்டிருக்கிறார். அவரது சினிமா வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களைப் பார்த்தவர் அவர். இதனால் அவரை முக்கிய விருந்தினராக கல்லூரி நிர்வாகம் அழைத்திருக்கிறது. விழாவில் கலந்து கொண்டு பேசிய நயன்தாரா, மாணவர்களிடம் சில அறிவுரைகளை வழங்கினார். மாணவர்கள் வாழ்க்கையில் எப்போதும் ஹேப்பியா இருக்க வேண்டும். மிக அதிகமாக ஸ்ட்ரெஸ் எடுத்துக் கொள்ள வேண்டாம். எது எப்படி இருந்தாலும் வாழ்க்கைல எல்லாருமே சக்ஸஸ்ஃபுல்லா மாறுவீங்க. ஆனா அந்த சமயத்துல நாம முன்னாடி வருத்தப்பட்ட நாட்கள பத்தி நினைச்சி கவலை படுவீங்க. இதனாலதான் சொல்றேன் எப்பவும் ஹேப்பியா இருங்க என்று பேசியுள்ளார். சத்யபாபா பல்கலைகழகத்தின் அம்பாசிடராக இருக்கும் நடிகை நயன்தாரா இவ்விழாவுக்கு வைலட் நிற டிரான்ஸ்பரண்ட் சேலை ஒன்றில் அழகாக கொண்டை போட்டு மல்லிகைப் பூ சூடி, கண்களைக் கவரும் அழகிய கலர்ஃபுல் தேவதையாக வந்த மிளிர்ந்தார். மேடையில் வைக்கப்பட்ட அலங்காரமும் ஒளி விளக்குகளும் நயன்தாராவை அப்படியே தேவதையாக காட்டின. இதனால் இந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

ஆடையின்றி நடிப்பேன்... பகீர் கிளப்பிய நடிகை!

UDHAYA KUMAR February 07, 2023

ஆடையின்றி நிர்வாணமாக நடிக்கத் தயாராக இருப்பதாகவும், கதைக்கு தேவைப்பட்டால் அப்படி நடிக்க தயாராக இருக்க வேண்டும் எனவும் நடிகை பிந்து மாதவி தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வெப்பம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிந்து மாதவி. கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2 உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமானார். தேசிங்கு ராஜா படத்தின் மூலம் பலருக்கும் பிடித்த நடிகையாக மாறிப்போனார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து புகழ் பெற்றார் பிந்து மாதவி. அங்கு பிந்துவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். பிக்பாஸ் தமிழ் முதல் சீசனில் வைல்டு கார்டு எண்ட்ரியாக கலந்து கொண்டு மக்களிடையே பிரபலமானார் பிந்து மாதவி. பின்னர் தெலுங்கு பிக்பாஸிலும் கலந்து கொண்டு டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிந்து மாதவியிடம் சமீபத்தில் கேட்கப்பட்ட பேட்டி ஒன்றில் நடிகைகள் நிர்வாணமாக நடிப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு படவாய்ப்புக்காக யாரும் நிர்வாணமாக நடிப்பதில்லை. கதைக்கு தேவைப்பட்டால் அப்படி நடிப்பதில் தவறு இல்லை. நானும் தயாராக இருக்கிறேன் என்று கூறினார்.

லாஸ்லியாவுக்கு கவர்ச்சி காட்டவும் வருமா? நாலு நாளைக்கு தூக்கம் போச்சு!

UDHAYA KUMAR January 24, 2023

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமான லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்களில் கவர்ச்சி காட்டியிருக்கிறார் லாஸ்லியா. நம்ம வீட்டு பெண் போல இருந்தவர் இப்படியெல்லாம் காட்டுவாரா என ஆச்சர்யத்தில் இருக்கிறார்கள் பலர்.

கேப்ல தெரியுதுங்க.... ரசிகர்களை கிறங்கச் செய்யும் போஸ்!

UDHAYA KUMAR January 24, 2023

ராஷி கன்னா தெலுங்கு சினிமாவில் முதலில் அறிமுகமானதால் கவர்ச்சிக்கு அளவில்லாமல் தமிழிலும் அவ்வப்போது தரிசனம் தந்து ரசிகர்களை வெலவெலத்துப் போகச் செய்து வருகிறார். இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அதர்வா ஜோடியாக நடித்து ஒரு சிறந்த அறிமுகத்தைப் பெற்றார். அடங்கமறு, சங்கத்தமிழன் படங்கள் மூலம் பெரிய அளவில் எதுவும் சாதிக்காவிட்டாலும் கார்த்தி ஜோடியாக அவர் நடித்த சர்தார் படத்தில் ரசிகர்கள் முகம் காணும் அளவுக்கு பிரபலமாகிவிட்டார். ஆனாலும் இவரது ரசிகர்களுக்கு விருந்து படைக்க இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது கவர்ச்சி விருந்து படைத்து பரிமாரிக்கொண்டிருக்கிறார்.

நழுவுது பிடிங்க... மிரட்டும் நந்திதா ஸ்வேதா!

UDHAYA KUMAR January 24, 2023

பா ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படம் மூலம் தமிழில் அறிமுகமான நந்திதா, பின் விஜய் ஜோடியாக புலி படத்திலும் நடித்திருந்தார். இவரை அனைவரும் உற்று நோக்கச் செய்தது இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் தான். இந்த படத்தில் விஜய் சேதுபதி காதலிக்கும் பெண்ணாக அவரை பிடிக்காத கல்லூரி மாணவியாக வருவார் நந்திதா. இதனைத் தொடர்ந்து எஸ் ஜே சூர்யா ஜோடியாக செல்வராகவன் இயக்கத்தில் நடித்தார். இதுபோக வேறு சில படங்களில் நடித்தாலும் அவை பெயர் சொல்லும் அளவுக்கு இல்லை. இந்நிலையில் ரசிகர்களைக் கவரவும், தயாரிப்பாளர்களைத் தன் பக்கம் இழுக்கவும் கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். இதோ புகைப்படங்கள்