Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,156.06
-592.36sensex(-0.81%)
நிஃப்டி21,856.15
-199.55sensex(-0.90%)
USD
81.57

திருப்பூர்

திருப்பூரில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்.. | Tiruppur Power Shutdown Tomorrow

Nandhinipriya Ganeshan July 01, 2023

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒருநாள் மின்தடை (மாதாந்திர பவர் கட்) அறிவிக்கப்படும். அதன்படி, அனைத்து இடங்களிலும் வெவ்வேறு மணி நேரத்தில் மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், பெரும்பாலான பகுதிகளில் காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரையிலும் மின் இணைப்பு துண்டிக்கப்படும். மின்சார வாரியத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தேதியில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது.  இருப்பினும், சில சமயங்களில் மோசமான வானிலை, அதிக மழை, வெள்ளம் உள்ளிட்ட வேறு சில காரணங்களுக்காகவும் மின்தடை ஏற்படலாம். ஆனால் குறிப்பிட்ட நேரங்களில் இவை சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படும். இது குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ள மின்சாரத் துறையை அணுகலாம். ஆனால், இவ்வாறு தடை செய்யப்படும் மின்தடை, மாதாந்திர மின்தடையுடன் சம்பந்தப்படுத்தபடாது.  இந்தப் பதிவின் மூலமாக ஜூலை 2023 மாதத்தில் திருப்பூர் மாநகரைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் எந்தெந்த இடங்களில், எந்தெந்த நாட்களில் மின்தடை செய்யப்படுகிறது என்பதை காணலாம். இதன் மூலம் மின்சாரத்தை பயன்படுத்தி ஏதேனும் முக்கிய பணிகள் இருந்தாலும் செய்துக்கொள்ள முடியும். திருப்பூர் மின்தடை பகுதிகள் ஜூலை 2023: பராமரிப்பு பணிக்காக கீழ்கண்ட பகுதிகளில் காலை 09:00 மணிக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும். பணிகள் முடிவடைந்தால் மதியம் 04:00 மணிக்கு முன் விநியோகம் தொடங்கப்படும். சில சமயங்களில் நீட்டிப்பு பணிகள் இருந்தால், நேரம் மாலை 6 மணி வரை நீட்டிக்கப்படலாம். குறிப்பு: இதில் கொடுக்கப்பட்ட விவரங்கள், பல்வேறு இணையதளங்களில் இருந்து பெறப்பட்டதாகும். எனவே, மின்தடை குறித்த மேலும் சில தகவல்களைத் தெரிந்து கொள்ள அந்தந்த பகுதியின் மின்வாரியங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

திருப்பூரில் மனைவி கொடூரக்கொலை - குடும்பத்தகராறில் கணவர் வெறிச்செயல்!

Saraswathi July 01, 2023

திருப்பூரில் குடும்பத்தகறாரால் மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூர் கொங்கு மெயின் ரோடு டி.எம்.எஸ் நகரில் உள்ள தனியார் குடியிருப்பில் மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 37) என்பவர், 2வது மனைவி பவித்ரா(வயது31) மற்றும் ஒன்றரை வயது மகனுடன் வசித்துவந்தார். மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் அருகில் உள்ள கோவிலில் பூ விற்பனை செய்து பூசாரியாக பணியாற்றிவருகிறார்.

நாளைமுதல் விற்பனை நிறுத்தம்..! - திருப்பூர் மாவட்ட ஹாலோபிளாக் உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

Saraswathi June 30, 2023

தமிழகத்தில் கல்குவாரிகள், கிரஷர்கள் தொடர் வேலைநிறுத்தத்தால், மூலப்பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் திருப்பூர் மாவட்டத்தில் நாளை முதல் ஹாலோ பிளாக் கற்கள் விற்பனை நிறுத்தப்படுவதாக மாவட்ட ஹாலோபிளாக் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், மூலப்பொருட்கள் பற்றாக்குறையால், ஹாலோ பிளாக் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால், நாளை முதல் ஹாலோ பிளாக் கற்கள் விற்பனையை நிறுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

திருப்பூர் பனியன் சந்தை தீ விபத்து - கடைகள் நாளையே அமைக்கப்படும்..என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேட்டி!

Saraswathi June 24, 2023

திருப்பூர் காதர்பேட்டை பனியன் சந்தையில் நேற்றிரவு தீ விபத்து நடந்த நிலையில், செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.     திருப்பூர் காதர் பேட்டை எனும் பனியன் சந்தையில் நேற்றிரவு ஏற்பட்ட தீவிபத்தில் 50க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்தன. இதில் பல கோடி ரூபாய் மதிப்பில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பனியன் துணிகள் மற்றும் பொருட்கள் சாம்பலாயின.      இந்நிலையில், விபத்து நிகழ்ந்த இடத்தை செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 50 கடைகள், மூன்று வீடுகள், 4 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்திருக்கிறது. தோராயமாக அதன் மதிப்பு மூன்று கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது.  வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நாளைய தினமே மீண்டும் இவ்விடத்தில் கடைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, என்றார்.

பெண்ணிடம் கைவரிசை காட்டிய திருடன் - சுற்றிவளைத்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

Baskaran June 19, 2023

திருப்பூர் பி.என் ரோடு கணக்கம்பாளையம் பிரிவு அருகில் பள்ளிக்குச் சென்ற மகனை அழைப்பதற்காக சாலையில் நின்று இருந்த பெண்ணின் மொபைலை பறித்து சென்ற நபரை பொதுமக்கள் துரத்திப் பிடித்து  கடுமையாக தாக்கி  காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். முதலில் பெருமாநல்லூர் காவல்துறையினர் வந்து விசாரணை மேற்கொண்டதில் திருமுருகன் பூண்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட எல்லை என்று தெரிவித்ததை அடுத்து  திருமுருகன்பூண்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

திமுககாரங்க எங்கள அடிக்கிறாங்க.. காப்பாத்துங்க..! - திமுகவினர் மீது பாஜகவினர் புகார்

Baskaran June 17, 2023

திருப்பூர் மாவட்டத்தில் பாஜகவினரின் மீது நடத்தி வரும் தொடர் தாக்குதல், நெருக்கடி அளித்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர் மனு அளித்தனர். இதுதொடர்பாக, மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் கட்சியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் , ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொங்களூர் பகுதியில் நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இருந்த கழிவுநீர் கால்வாயை ஜேசிபி வாகனம் மூலம் அடைக்க முயன்ற திமுகவினரை தட்டிக் கேட்டதற்காக பாஜக நிர்வாகி செல்வகுமார் என்பவரை கொலை செய்ய திமுகவினர் முயற்சித்தனர். இதுகுறித்து அவிநாசி பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அதே போல் தெற்கு தாலுகா இடுவாய் கிராமம் பாரதிபுரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினரால் பாஜக நிர்வாகிகள் செல்வக்குமார் , செகமலையப்பன் மற்றும் சம்பத்குமார் ஆகியோர் தாக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் பாஜகவினர் மீதான நெருக்கடியும், தாக்குதலும் அதிகரித்து வருகிறது. சுமூக வாழ்க்கை வாழ முடியாத சூழ்நிலை உருவாகியுள்ள அச்சத்தை நீக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

பல்லடம் அருகே கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து - தலைகீழாக கவிழ்ந்த கொரியர் வேன்..! - வீடியோ வைரல்

Baskaran June 17, 2023

திருப்பூர்: பல்லடம் செட்டிபாளையம் சாலையில் கொரியர் வேனும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் வேன் தலைகீழாக கவிழும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் செட்டிபாளையம் சாலையில் சிடிசி காலனியில் இருந்து கொரியர் ஏற்றிக்கொண்டு வந்த வேன் பல்லடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது செட்டிபாளையத்திலிருந்து நாமக்கல் நோக்கி சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வடுகபாளையம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் கோகுல் மற்றும் கொரியர் டெலிவரி ஊழியர் ரமேஷ் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தபியுள்ளனர். இதைதொடர்ந்து காரில் பயணித்த நாமக்கல் பகுதியை சேர்ந்த சுஜித் மற்றும் அவரது தாய் பரமேஸ்வரி ஆகியோர் படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில், இந்த விபத்து தொடர்பான சிசிடிவி தற்போது வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் அருகே பாஜக நிர்வாகியை கொலை செய்ய முயற்சி - வைரலாகும் வீடியோ!

Baskaran June 17, 2023

திருப்பூர்: பல்லடம் அருகே பொங்கலூரில் மக்கள் பயன்பாட்டில் இருந்த கழிவுநீர் கால்வாயை மூட வந்த திமுக கவுன்சிலரின் தம்பியை தட்டி கேட்ட பாஜக நிர்வாகி மீது ஜேசிபி ஏற்றி கொல்ல முயற்சித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூரில் வசித்து வருபவர் செல்வகுமார். இவர் பாரதிய ஜனதா கட்சியில் OBC மண்டல தலைவராக உள்ளார்.இவரது வீட்டிற்கு அருகே பொங்கலூர் ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் கடந்த 11 வருடங்களாக உள்ளது. இதே பகுதியில் பொங்கலூர் ஊராட்சி துணை தலைவர் ராதாகிருஷ்ணன் என்பவரின் உறவினர் வீடும் உள்ளதாக கூறப்படுகிறது. பொங்கலூர் ஊராட்சி துணை தலைவரின் உறவினர் வீட்டிற்கு அருகிலேயே கழிவுநீர் கால்வாய் உள்ளதால் அதை மூடுவதற்காக கடந்த பத்து நாட்களுக்கு முன்பு பொங்கலூர் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மாதப்பூரை சேர்ந்த திமுக கவுன்சிலர் லோகு என்பவரின் தம்பி கதிரவன் அவருக்கு சொந்தமான ஜேசிபியை கொண்டு வந்துள்ளார். 11 வருடங்களாக மக்கள் பயன்பாட்டில் உள்ள கழிவு நீர் கால்வாயை மூட எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஜேசிபி வாகனத்தை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அப்பகுதி மக்கள் யாரும் இல்லாத சமயத்தில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மீண்டும் திமுக கவுன்சிலரின் தம்பி கதிரவன் கழிவுநீர் கால்வாயை மூடுவதற்காக ஜேசிபி இயந்திரத்தை கொண்டு வந்துள்ளார். அங்கு வந்த பாஜக நிர்வாகி செல்வகுமார் கழிவுநீர் கால்வாயை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கதிரவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஜே சி பி இயந்திரத்தின் முன்பு நின்று கொண்டு கழிவுநீர் கால்வாயை மூடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆத்திரமடைந்த ஜேசிபி ஓட்டுநர் வசந்தகுமார் மற்றும் திமுக கவுன்சிலர் லோகு என்பவரின் சகோதரர் கதிரவன் ஆகியோர் செல்வகுமார் மீது ஜேசிபி ஏற்றி சிறிது தூரம் தள்ளிக் கொண்டே சென்றுள்ளார். இதில் காயமடைந்த செல்வகுமார் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற பல்லடம் மற்றும் அவிநாசிபாளையம் காவல்துறையினர் உண்மை தன்மை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து பேசிய அப்பகுதி மக்கள் கூறுகையில், பொங்கலூர் ஊராட்சி துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் என்பவரின் உறவினர் வீட்டிற்கு அருகிலேயே இந்த கழிவுநீர் கால்வாய் அமைந்துள்ளதாகவும் அதை அடைத்து வைத்துக் கொண்டு துணைத் தலைவரின் உறவினர்கள் பிரச்சனையில் ஈடுபட்டதால் கழிவுநீர் கால்வாயை சீரமைத்து தரக்கோரி ஊராட்சி நிர்வாகத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், இன்று கழிவுநீர் கால்வாயை முழுவதுமாக மூடுவதற்கு வந்த ஜேசிபி இயந்திரத்தை தடுத்தபோது செல்வகுமார் மீது ஜேசிபி ஏற்றி கொள்ள முயன்றதாகவும் செல்வகுமார் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டதாகவும் இதில் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் மற்றும் ஜேசிபி ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஜேசிபி ஓட்டுநர் வசந்தகுமார் மற்றும் திமுக கவுன்சிலர் லோகு என்பவரின் சகோதரர் கதிரவன் ஆகியோர் தங்களை பொதுமக்கள் தாக்கியதாக கூறி பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜேசிபி உரிமையாளர் திமுக கவுன்சிலர் லோகு, அவரது தம்பி கதிரவன், ஜேசிபி ஓட்டுநர் வசந்தகுமார், பொங்கலூர் ஊராட்சி துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன்,இணை வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி நாராயணன் ஆகியோர் மீது செல்வகுமாரின் உறவினர்கள் அவிநாசி பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாம்புகள் மீட்பு..!

Baskaran June 16, 2023

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுற்றித்திரிந்த பாம்புகளை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். திருப்பூர்-பல்லடம் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் பல்வேறு அரசு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பல்வேறு சேவைகளை பெற தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்லக்கூடிய நிலையில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலர்கள் பணிக்கு வந்த போது அலுவலக பின்புறத்தில் பாம்புகள் சென்றது தெரியவந்ததும் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் இரண்டு பாம்புகளை பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விடுவதற்காக எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக பின்புறம் ஜேசிபி வாகனம் மூலம் புதர்கள் இன்றி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

வடமாநில தொழிலாளர்களின் அடாவடிக்கு கண்டனம்.. திருப்பூரில் பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம்!!

Sekar January 28, 2023

திருப்பூரில் வட மாநில தொழிலாளர்கள் பலர் தமிழக தொழிலாளர்களை தாக்கியதாக கூறப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.