இயக்குநர் மாரி செல்வராஜுக்கு திருநெல்வேலியில் ஆள் உயர் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக இருந்து பரியேறும் பெருமள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மாரி செல்வராஜ். கதிர், யோகி பாபு, கயல் ஆனந்தி, மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது. காதலையும், அதன் ஊடாக நடக்கும் சாதிய அட்டூழியங்களையும் பொட்டில் அடித்தாற்போல் படம் பேசியிருந்தது.
Nandhinipriya Ganeshan June 28, 2023
மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒருநாள் மின்தடை (மாதாந்திர பவர் கட்) அறிவிக்கப்படும். அதன்படி, அனைத்து இடங்களிலும் வெவ்வேறு மணி நேரத்தில் மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், பெரும்பாலான பகுதிகளில் காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரையிலும் மின் இணைப்பு துண்டிக்கப்படும். மின்சார வாரியத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தேதியில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது. இருப்பினும், சில சமயங்களில் மோசமான வானிலை, அதிக மழை, வெள்ளம் உள்ளிட்ட வேறு சில காரணங்களுக்காகவும் மின்தடை ஏற்படலாம். ஆனால் குறிப்பிட்ட நேரங்களில் இவை சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படும். இது குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ள மின்சாரத் துறையை அணுகலாம். ஆனால், இவ்வாறு தடை செய்யப்படும் மின்தடை, மாதாந்திர மின்தடையுடன் சம்பந்தப்படுத்தபடாது. இந்தப் பதிவின் மூலமாக ஜூலை 2023 மாதத்தில் திருநெல்வேலி மாநகரைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் எந்தெந்த இடங்களில், எந்தெந்த நாட்களில் மின்தடை செய்யப்படுகிறது என்பதை காணலாம். இதன் மூலம் மின்சாரத்தை பயன்படுத்தி ஏதேனும் முக்கிய பணிகள் இருந்தாலும் செய்துக்கொள்ள முடியும். திருநெல்வேலி மின்தடை பகுதிகள் ஜூலை 2023: பராமரிப்பு பணிக்காக கீழ்கண்ட பகுதிகளில் காலை 09:00 மணிக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும். பணிகள் முடிவடைந்தால் மதியம் 04:00 மணிக்கு முன் விநியோகம் தொடங்கப்படும். சில சமயங்களில் நீட்டிப்பு பணிகள் இருந்தால், மாலை 6 மணி வரை நீட்டிக்கப்படலாம். விரைவில் அப்டேட் செய்யப்படும்…. குறிப்பு: இதில் கொடுக்கப்பட்ட விவரங்கள், பல்வேறு இணையதளங்களில் இருந்து பெறப்பட்டதாகும். மின்தடை குறித்த மேலும் சில தகவல்களைத் தெரிந்து கொள்ள அந்தந்த பகுதியின் மின்வாரியங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
திருநெல்வேலி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர் பகுதி, வார்டு நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட பொதுச் செயலாளர் கனி தலைமையில் மேலப்பாளையம் மாவட்ட அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது . மாவட்ட செயலாளர் அன்வர்ஷா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மருத்துவ சேவை அணி மாவட்ட தலைவர் ரஹ்மதுல்லா, சமூக ஊடக அணி மாவட்ட தலைவர் முபாரக் அலி கலந்து கொண்டனர். பாளை,நெல்லை, தச்சை, மேலப்பாளையம், சுத்தமல்லி, மானூர் பகுதி தலைவர் மற்றும் செயலாளர்கள் கலந்து கொண்டு பாராளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி குறித்து திட்டமிடல் நடைபெற்றது. கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மொத்த அணைகளில் 10.42% மட்டுமே நீர் இருப்பு உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 1097 குளங்களில் 57 குளங்களில் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. அதுவும் ஒரு மாதத்திற்கு மட்டுமே உள்ளது. எனவே திருநெல்வேலி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும் மேலப்பாளையம் அரசு மருத்துவமனை புதிய கட்டிடப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலப்பாளையம் அரசு மருத்துவமனையில் தற்காலிக பேறுகால வார்டு அமைக்க வேண்டும். பழைய பேருந்து நிலையம் அருகில் புழுதி பறப்பதை தடுக்கும் வகையில் தற்காலிக சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் அசனார்,சிந்தா, ஜெய்லானி, நிஜாம்தீன், வதூத்,கசாலி,சிராஜ், யூசுப் பாஷா, ஹக்கி மூசா காஜா, பீர், ஷாஜஹான், பக்கீர், யாசர், கலந்து கொண்டனர் நிறைவாக பாளை தொகுதி தலைவர் சலீம்தீன் நன்றி கூறினார்.
திருநெல்வேலி: குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கக்கோரி பாளை-திருச்செந்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்ட 40-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மனக்கவலம் பிள்ளை நகரில் சுமார் 30ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இங்கு உள்ள வீடுகளுக்கு பத்திரப்பதிவு செய்து பட்டா வழங்க வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர். இது தொடர்பாக கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். ஆனாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என கூறி, அவர்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று 7ஆவது வார்டு கவுன்சிலர் இந்திரா மற்றும் 7ஆவது வார்டு திமுக நிர்வாகி சுண்ணாம்பு மணி ஆகியோர் தலைமையில் அப்பகுதி மக்கள் 60-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பாளை-திருச்செந்தூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த உதவி கமிஷனர் சரவணகுமார், இன்ஸ்பெக்டர் வாசிவம் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் முழுமையடைந்ததால், 5 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் வழியாக பேருந்துகள் இயக்கப்பட்டன. நெல்லை மாநகரின் இதயப்பகுதியாக விளங்கும் சந்திப்பு பேருந்து நிலையம் பேருந்து போக்குவரத்து, பயணிகள் நடமாட்டம் என்று எப்போதும் பரபரப்பாக இருக்கும். இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.965 கோடி செலவில் நெல்லையில் பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டது. இதில் நெல்லை 4.25 ஏக்கர் பரப்பளவு கொண்ட சந்திப்பு பேருந்து நிலையத்தையும் முழுமையாக இடித்துவிட்டு புதிதாக கட்டுவதற்கு ரூ.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நெல்லை சந்திப்பு பேருந்து நிலைய கட்டுமான பணி பல்வேறு காரணங்களால் சுமார் 5 ஆண்டுகளை தொட்ட பிறகும் இதுவரை முழுமையாக நிறைவடையாமல் நிற்கிறது. இதனால் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்த முடியாமல் பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே இந்த பேருந்து நிலைய பணிகள் முழுமையாக முடிவடையும் வரை காத்திருக்காமல் வியாபாரிகள், பொதுமக்கள், ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் ஆகியோரின் நலன் கருதி தற்காலிகமாக பேருந்து நிலையத்தை சுற்றியாவது பேருந்துகள் இயக்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த 10 நாட்களாகவே மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் பேருந்து நிலைய பகுதிகளில் தொடர் ஆய்வு மேற்கொண்டு கட்டுமான பணிக்காக சுற்றிலும் அடைக்கப்பட்டிருந்த தகரங்களை உள்ளே தள்ளி வைத்து விட்டு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்தனர். அதேநேரத்தில் முதல்கட்டமாக மாநகர பகுதிக்குள் இயக்கப்படும் டவுன் பேருந்துகள் மற்றும் விரிவாக்க பகுதிகள், புதிய பேருந்து நிலையங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளை மட்டுமே சந்திப்பு பேருந்து நிலையம் வழியாக இயக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ராஜா பில்டிங் சாலையில் பயணிகள் வசதிக்காக 5 இடங்களில் நிழற்குடைகள் அமைக்கப்பட்டது. தற்காலிகமாக பேருந்துகளை இயக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்த நிலையில் இன்று காலை 6 மணி முதல் அந்த வழியாக பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். இதில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், நயினார் நாகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கலெக்டர் கார்த்திகேயன் கூறுகையில், நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் இன்னும் 60 நாட்களில் திறக்கப்படும். சந்திப்பு பேருந்து நிலையத்தை சுற்றிய சாலைகளும் விரைவில் அமைக்கப்படும் என்றார்.
தூத்துக்குடியில் சின்ன கன்னுபுரம் பகுதியில் காரில் சென்று ஆடு திருடிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் ஆனித் திருவிழாவையொட்டி, திருத்தேர்கள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று திருநெல்வேலி நகரில் அமைந்துள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ஆனி பெருந்திருவிழாவின் 9வது நாளில் ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட தேர் ஓடும் நிகழ்ச்சி நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டுக்கான ஆனி பெருந்திருவிழா வரும் 24ம் தேதி தொடங்கவுள்ளது. இதையொட்டி, நெல்லையப்பர் திருக்கோவிலின் தேர் சுத்தம் செய்யும் பணி தீயணைப்புத்துறை வீரர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவிலில் 200 ஆண்டுகள் பழமையான அரியவகை ஓலைச்சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில், 281 பனையோலை சுவடிகள் நல்ல நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனனர். இந்து சமய அறநிலையத்துறையின் ஓலைச்சுவடிகள் நூலாக்க திட்டப்பணி குழுவினர் அறநிலையத்துறைக்கு உட்பட்ட சுமார் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களில் உள்ள பழங்கால ஓலைச்சுவடிகளை சேகரித்து வருகின்றனர்.
Nandhinipriya Ganeshan February 16, 2023
தென்காசி ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தில் பால் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது. அங்கு, ஒரு கிணறு வெட்ட முடிவு செய்து, அப்பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரை அணுகியுள்ளார். அவரிடம் ஒப்பந்த அடிப்படையில் கிணறு வெட்டும் பணியை ஒப்படைத்தார். இதனையடுத்து கிணறு வெட்டும் பணி 10 நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று பாறைகளை தகர்ப்பதற்காக டெட்டனேட்டர்களை பயன்படுத்தி வெடி வைக்கும் சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடி வெடித்ததில், பணியில் இருந்த 4 பேரில் அரவிந்த் (21) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரழந்தார். மேலும், விபத்தில் படுகாயமடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஆசிர் சாம்சன் (22) என்பவரும் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 2 பேர் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி ராஜலிங்கம் என்பவரும் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிணறு வெட்டும்போதும் வெடி வெடித்து 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள பெண்களின் புகைப்படத்தை மார்பிங் செய்து, மிரட்டிய இளைஞர்களை திருநெல்வேலி போலீசார் கைது செய்துள்ளனர்.