Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,008.21
-740.21sensex(-1.02%)
நிஃப்டி21,814.30
-241.40sensex(-1.09%)
USD
81.57

குற்றம்

மதுபோதையில் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற இரண்டு பேர் - பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து காவல்துறையில் ஒப்படைப்பு

selvarani July 21, 2023

காட்பாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்க முயன்ற இரண்டு பேரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பள்ளி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஷீத். இவர் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அப்துல் ரஷீத்தின் வீட்டு வழியாக சென்ற இருவர் மதுபோதையில் இருந்து உள்ளனர். அப்போது அப்துல் ரஷீத்தின் வீட்டின் பூட்டை கல்லைக் கொண்டு உடைத்துக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் அக்பர், கூச்சலிட்டு ஆக்கம் பக்கத்தினர் அழைத்து பூட்டை உடைத்துக் கொண்டிருந்த இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் இருவருக்கும் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வேலூர் சார்புனாமேடு பகுதியை சேர்ந்த சிவராமன், காட்பாடி குமரப்பா நகர் பகுதியைச் சேர்ந்த பரத்குமார் என்பதும் மது போதையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இருவர் மீதும் காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இரவு நேரத்தில் இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

பேக்கரி கடையின் பூட்டை உடைத்து கொள்ளை - போலீசார் விசாரணை!

Selvarani July 20, 2023

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் பேக்கரி கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.   கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் வசிப்பவர்  கண்ணன். இவர் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் பேக்கரி கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டி விட்டு அவர் சென்று விட்டார். இன்று காலை கடையை திறக்க வரும்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தப்போது, கடையில் இருந்த பணம் மற்றும் பல பொருட்கள் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக கண்ணன் கோட்டார் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இதன்பேரில் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்கள் யார் என கண்காணிப்பு கேமராக்களில் பதிவான சாட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  

காட்பாடி அருகே பட்டா கத்தியில் கேக் வெட்டி கொண்டாட்டம்: அச்சத்தில் பொதுமக்கள்..!

Baskaran July 13, 2023

வேலூர்: காட்பாடி அருகே நள்ளிரவில் பட்டா கத்தியுடன் நடுரோட்டில் கேக் வெட்டி பிறந்த கொண்டாடிய இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த ஓடை பிள்ளையார் கோவில் அருகே வேலூரில் இருந்து காட்பாடி சித்தூர் செல்லும் சாலையில் நேற்று நள்ளிரவு மூன்று இளைஞர்கள் யமஹா பைக்கை நிறுத்திவிட்டு அதன் மீது பிறந்தநாள் கேக்கை வைத்து அதை பட்டாகத்தியை கொண்டு வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். அதோடு இல்லாமல் பிறந்த நாள் கொண்டாடியதாக பூவரசன் என்ற இளைஞருக்கு ஆள் உயர பூ மாலை அணிவித்து, சரவெடிகளை கொளுத்தி நடுரோட்டில் வீசி பந்தா காட்டியுள்ளனர். மிகவும் பரபரப்பான சாலையில் நள்ளிரவில் சாலையோரம் கையில் பட்டாசு பட்டா கத்தியுடன் நின்று கேக் வெட்டி இளைஞர்கள் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு அந்நேரத்தில் அவ்வழியாக பயணித்த பாதுசாரிகள் மத்தியில் மிகுந்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம்.. தந்தை, மகன் கைது!

Baskaran. S July 08, 2023

கன்னியாகுமரி: மணவாளக்குறிச்சி அருகே குளிர்ப்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நர்சிங் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் மற்றும் உடந்தையாக இருந்த அவரது தந்தையையும் குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி மடத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (60) வயதான இவரது மகன் சிவகுமார் (20) இவர் கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி அந்த பகுதியில் உள்ள பைபர் படகு பழுது பார்க்கும் பட்டறையில் பணியாற்றி வருகின்றார் இந்த நிலையில் சிவகுமார் கடந்த ஜூன் மாதம் 2-ம் தேதி நாகர்கோவிலில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் தங்கி நர்சிங் படித்து வரும் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் பகுதியை சேர்ந்த 20 வயதான நாகேஸ்வரி என்ற தனது உறவுக்காற பெண்ணை தனது அக்கா மகளுக்கு பிறந்தநாள் என மணவாளக்குறிச்சியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அங்கு வைத்து சிவகுமார் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து நாகேஸ்வரிக்கு கொடுத்து அவரை பலாத்காரம் செய்துள்ளார். நாகேஸ்வரிக்கு மயக்கம் தெளிந்த நிலையில் அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி சமாதானப்படுத்தி சிவகுமார் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அதற்கு பின் சிவகுமார் திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனையடுத்து நாகேஸ்வரி தன்னை சிவகுமார் அவரது அக்கா குழந்தைக்கு பிறந்தநாள் என அழைத்து வந்து தன்னை ஏமாற்றி குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து தந்து பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து மாணவி நாகேஸ்வரியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் புகாரின் பேரில் சிவகுமார் மீது பெண்ணை ஏமாற்றி பாலாத்காரம் செய்தது திருமண செய்வதாக கூறி நம்பிக்கை மோசடி செய்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழுவும் உடந்தையாக அவரது தந்தை பால்ராஜ் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

எழும்பூர் அரசு மருத்துவமனையில் மருந்தாளுநர் தற்கொலை

Baskarans July 03, 2023

சென்னை: எழும்பூர் குந்தைகள் நல அரசு மருத்துவமனையில் மருந்தாளுனர் தற்கொலை செய்து கொண்டார். சென்னை எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றி வருபவர் ராஜன். இவர் திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்தவர். இந்நிலையில் இன்று வழக்கம் போல் பணிக்கு வந்தவர் மருந்து கொடுக்கும் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் ராஜனுக்கு இரு மனைவிகள் உள்ளனர் எனவும்,கருத்து வேறுபாடு காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

திருப்பூரில் ரயில் முன் செல்ஃபி எடுத்த வாலிபர்கள் ரயில் மோதி பலி

Baskarans July 03, 2023

திருப்பூரில் செல்பி எடுத்துக் கொண்டிருந்த வாலிபர்கள் ரயில் முன் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் மற்றும் விஜய் திருப்பூர் ரங்கநாதபுரம் பகுதியில் குடியிருந்து கொண்டு அப்பகுதியில் உள்ள நீட்டிங் நிறுவனத்தில் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வந்தனர். இதனிடையே இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் பாண்டியனும்,விஜய்யும் அவருடன் தங்கி உள்ள சக நண்பர்களிடம், ரயில் நிலையம் சென்று ரயில் முன் நின்று செல்பி எடுத்து அனுப்புவதாக கூறிச் சென்றுள்ளனர். அவர்கள் சொன்னவாறு திருப்பூர் அனைப்பாளையம், சாலையில் உள்ள ரயில்வே தண்டவாளம் பகுதிக்கு வந்த விஜய்யும்., பாண்டியனும் அவ்வழியே வந்த ரயில் முன் நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி இருவரும் ரயில் முன் விழுந்து நிலையில் ரயிலின் வேகத்தால் தூக்கி வீசப்பட்ட இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் பாண்டியன் மற்றும் விஜயின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்ஃபி மோகத்தால் திருப்பூரில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியின்ரிடயே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏடிஎம் மையத்தில் பணம் வராததால் ஆத்திரம்: கோடரியால் இயந்திரத்தை உடைத்த தொழிலாளி

Baskarans July 03, 2023

வேலூர் மாவட்டம், ஊசூர்-அணைக்கட்டு மெயின் ரோடு பஸ் நிறுத்தத்தில் தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இன்று காலை ஊசூர் காலனியை சேர்ந்த கந்தசாமி (வயது 53) கூலி தொழிலாளி. என்பவர் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார். ஏ.டி.எம். எந்திரத்தில் ஏ.டி.எம். கார்டை சொருகி பணம் எடுக்க பலமுறை முயற்சி செய்து உள்ளார். ஆனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கந்தசாமி வீட்டிற்கு சென்று கோடாரியை எடுத்து வந்தார். ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தார். ஏ.டி.எம். எந்திரம் உடைக்கும் சத்தம் கேட்டு அக்கப் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கந்தசாமியை தடுத்தனர். இருப்பினும் ஆத்திரம் அடங்காத கந்தசாமி ஏ.டி.எம். எந்திரம் முழுவதையும் உடைத்தார். எந்திரம் முழுவதும் துண்டு, துண்டாக நொறுங்கியது. அங்கிருந்தவர்கள் கந்தசாமியை பிடித்து வைத்துக்கொண்டு இது குறித்து உடனடியாக அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வேலூர் டவுன் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு மற்றும் அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். உடைக்கப்பட்ட ஏ.டி.எம். எந்திரத்தை பார்வையிட்டனர். பின்னர் அருகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் கந்தசாமியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து எந்த பணமும் திருடு போகவில்லை ஏடிஎம் எந்திரத்தில் பணம் வராததால் கந்தசாமி ஏடிஎம் எந்திரத்தை உடைத்துள்ளார். கந்தசாமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு உண்மை நிலவரம் தெரியவரும் என்றனர்.

சீர்காழியில் நிறுத்தி வைத்திருந்த சொகுசு காரில் டயர்கள் திருட்டு

Baskarans July 03, 2023

மயிலாடுதுறை: சீர்காழியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார்களில் டயர்களை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தெற்கு வீதியில் வசித்து வருபவர் முத்துராமன். நகை வணிகம் செய்து வரும் இருவர் தனது சொகுசு காரை வீட்டின் வெளியில் நிறுத்தி வைத்துள்ளார். இவர் கடந்த வாரம் குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு காரை சில நாட்களாக கவர் போட்டு மூடி வைத்துள்ளார். இந்நிலையில் இன்று காலையில் காரின் மூடியுள்ள கவரை திறந்து பார்த்த போது, மர்மநபர்கள் நான்கு டயர்களையும் கழட்டி விட்டு, கல்லை வைத்து முட்டுக் கொடுத்துள்ளது தெரியவந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரின் டயர்களை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். மேலும் வீட்டின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு காரின் டயர்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் அருகே காபி ஷாப் சூரையாடல்: வாலிபருக்கு வலைவீச்சு

Baskarans July 02, 2023

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே காபி ஷாப்பை அடித்து நொறுக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டுர்ணிமடம் பகுதியை சேர்ந்த சதீஷ்பிரபு அந்த பகுதியில் கம்பியூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் சுங்கான்கடை பகுதியில் ஆன்றனி ஜெரிஸ் என்பவர் நடத்தி வரும் காபி ஷாப்பிற்கு சென்று காபி, டீ மற்றும் சிகரெட் வாங்கி விட்டு காசு கொடுக்காமல் அடிக்கடி தகராறில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார் என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி மதியம் நண்பர்களுடன் காபி ஷாப்பிற்கு சென்ற சதீஷ்பிரபு சிகரெட் வாங்கியுள்ளார். அவரிடம் ஆன்றனி ஜெரிஸ் காசு கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் பிரபு அன்றிரவு போதையில் கையில் கம்புடன் வந்து அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு காபி ஷாப்பை அடித்து நொறுக்கியுள்ளார். இதுகுறித்து ஆன்றனி ஜெரின் இரணியல் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், இரணியல் போலீசார் சதீஷ் பிரபுவை விசாரணைக்கு அழைக்க ஆன்றணி ஜெரிஸின் செல்போனில் இருந்து தொடர்பு கொண்டுள்ளனர். முதலில் ஆன்றணி ஜெரிஸ் பேசிய நிலையில், வந்தால் கொன்று விடுவேன் இதை ரெக்காடு பண்ணி போலீசில் கொடு என்று மிரட்டிய நிலையில், போலீசார் அந்த போனை வாங்கி பேசிய நிலையிலும் போலீசாரிடமும் கொலை மிரட்டல் விடுத்தப்படியே பேசியுள்ளார். இதனையடுத்து இரணியல் போலீசார் சதீஷ் பிரபு மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் அவரை தேடி வருகின்றனர். இந்த நிலையில் சதிஷ்பிரபு காபி ஷாப்பை அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

புழல் சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல்: இருவர் காயம்

Baskarans July 01, 2023

சென்னை: புழல் சிறையில் கேரம்போர்டு விளையாடும் போது கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இரண்டு கைதிகளுக்கு இரும்பு ராடால் அடி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புழல் சிறையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு தாழம்பூர் போலீசாரால் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட சிரில்ராஜ், வேளச்சேரி போலீசாரால் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட சதிஷ் ஆகிய இருவரும் கடந்த ஏப்ரல் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை போல் பல்வேறு வழக்குகளில் விசாரணை கைதிகளாக எண்ணூரைச் சேர்ந்த பாம்பு நாகராஜ், தண்டையார் பேட்டை ஜான்சன், சோத்து வினோத், வியாசர்பாடி தினேஷ் ஆகியோரும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 7பேரும் சிறை வளாகத்தில் அமர்ந்து கேரம்போர்டு விளையாடியுள்ளனர். அப்போது சதிஷ் அதிக பாயிண்ட்களை எடுத்தது தொடர்பாக சிரில்ராஜ் மற்றும் பாம்பு நாகராஜ் தலைமையிலான கோஷ்டியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. இதில் பாம்பு நாகராஜ் கோஷ்டியினர் சிரில்ராஜ், சதிஷ் ஆகியோரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் இருவரும் படுகாயமடைந்தனர். சத்தம் கேட்டு ஓடி வந்த போலீசார் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 5பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.