Gowthami Subramani March 04, 2023
கால்பந்து உலகக் கோப்பை சேம்பியன் ஆன மெஸ்ஸி, மெர்சலான செயல் ரசிகர்களுக்கிடையே ஆனந்தத்தை அளித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் நடந்த கால்பந்து உலகக் கோப்பையை வென்ற அர்ஜெண்டினா அணி நிர்வாகத்தில் இருந்த 35 பேருக்கு, தங்கத்தால் செய்யப்பட்ட ஐபோன்களை பரிசாக வழங்கியுள்ளார் மெஸ்ஸி.
Priyanka Hochumin February 28, 2023
நடந்து முடிந்த FIFA உலகக் கோப்பை காலபந்து போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கௌரவிக்கும் வகையில் பாரிசில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் சிறந்த ஃபிஃபா விருதை அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி அவர்கள் கைப்பற்றினார். சிறந்த வீரர் ஆண் - FIFA உலகக் கோப்பை காலபந்து போட்டியில் தரமான சம்பவத்தை செய்த லியோனல் மெஸ்ஸி மற்றும் பிரான்சின் கைலியன் எம்பாப்வே ஆகியோர் சிறந்த வீரர் விருதுக்கான பட்டியலில் போட்டிஇட்டனர். இறுதியில் அந்த விருதை மெஸ்ஸி அவர்கள் தட்டி தூக்கினார்.
Priyanka Hochumin February 22, 2023
இந்தியாவின் டென்னிஸ் நட்சத்திர வீராங்கனைகளில் ஒருவரான சானியா மிர்சா தனது அதிகாரபூர்வ ஓய்வை அறிவித்துள்ளார். ஒற்றையர் டென்னிஸ் விளையாட்டில் பல பதக்கங்களை பெற்ற சானியா 2013 ஆம் ஆண்டு அதில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பின்னர் மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் தலா 3 என மொத்தம் 6 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். இப்படியாக டென்னிஸ் விளையாட்டால் இந்தியாவிற்கு பெருமை தேடித் தந்துள்ளார் சானியா.
முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஐந்து பேர் கொண்ட மேற்பார்வைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளனம் அதன் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் உட்பட அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளது. தங்கள் அமைப்பில் தன்னிச்சையான செயல்பாடுகள் மற்றும் தவறான நிர்வாகத்திற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று அது கூறியுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மல்யுத்த வீரர்கள், தங்கள் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கத்திடமிருந்து வாக்குறுதியைப் பெற்ற பின்னர், நேற்று மாலை தங்கள் ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டனர்.
இந்தியாவின் நட்சத்திர ஆடவர் இரட்டையர் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இந்திய ஓபனில் இருந்து வெளியேறியதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
200க்கும் மேற்பட்ட இந்திய மல்யுத்த வீரர்கள் இரண்டாவது நாளாக டெல்லியில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல விளையாட்டு வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பல பயிற்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்த போராட்டம் நடந்து வருகிறது.
டூட்டி சந்த் ஒரு தடைசெய்யப்பட்ட போதைப்பொருளுக்கு நேர்மறை சோதனை செய்ததால் அவர் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டார்.
நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான ரஃபேல் நடால், இரண்டாவது சுற்றில் மெக்கன்சி மெக்டொனால்டிடம் தோல்வியடைந்ததால், தற்போது நடைபெற்று வரும் போட்டியில் இருந்து வெளியேறினார்.